18-04-2019, 11:45 AM
அத்தியாயம்:16
வாழ்க்கை பாதையே பல திருப்பங்கள் நிறைந்ததென்பதை நான் உணர்ந்தேன்.ஒரு பெண்ணின் வைராக்கியம் எந்த ஒரு ஆணின் எண்ணங்களையும் தூள்தூளாக்கி விடும்.நானும் வைராக்கியத்தை கடைபிடித்தேன்.அவனுடன் பேசுவதை விட்டுவிட்டேன்.அவனை பார்த்தாலும் பார்க்காத மாதிரி ஒதுங்கி போனேன்.போன் பண்ணினாலும் எடுக்க வில்லை.எனக்கும் கஷ்டமாகத்தான் இருந்தது ஆனால் இதையெல்லாம் பார்த்தால் அவனை ஒத்துகொள்ள வைக்க முடியாது.ஒரு நாள் பள்ளி முடிந்து பேருந்தில் தனியாக அமர்திருந்தேன்.
அன்று உணவு இடைவெளியின் போது மந்தாகினி கூறியது என்காதுகளில் ஒலித்து கொண்டே இருந்தது"அவன் ஸ்டேட் பிளேயராக வரவேண்டியது கடைசி சமயத்தில் அவனுடைய பிடிவாதத்தால் அந்த வாய்ப்பு அவனுக்கு கிடைக்காமல் போய்விட்டது இல்லையென்றால் அவன் இந்நேரம் தமிழக அணியில விளையாடி கொண்டிருந்திருப்பான்.அவனுடைய திறமைகள் யாருக்கும் இருக்காது.நீயாவது சொல் அவன் எப்பொழுதும் உன்னிடம் தானே அதிகம் பேசுகிறான் நீசொன்னால் அவன் கேட்பான் கிரிக்கெட்டில் அவன் மிக பெரிய ஆளாக வருவான்.அடுத்த மாதம் tournement இருக்கு அவனை கலந்துக்க சொல்.அவன் கலந்துகிட்டா "என்று கூறி நிறுத்தினாள்.
நான் அவளை ஆர்வமாக பார்த்தேன்.
அவள் தொடர்ந்தாள்"நம்ம ஸ்கூல்தான் champion ship வாங்கும் "என்றாள்.
நான் யோசித்து கொண்டிருக்கும் போதே திரும்பி பார்த்தேன்.அவன் என் அருகில் அமர்ந்திருந்தான்.
நான் அதிர்ந்துபோய் திரும்பினேன்.ஆனால் அதை வெளிகாட்டி கொள்ளாமல் முகத்தை திருப்பி கொண்டேன்.
அவன் தொண்டையை செருமி கொண்டே "க்கும்...க்கும் கோபமா"என்றான்.[size]
நான் பதிலேதும் பேசாமல் அமைதியாக இருந்தேன்.
அவன் தொடர்ந்தான் "இப்போ ஏன்? இப்படி மூஞ்சிய தூக்கி வச்சிகிட்டு இருக்கே.
"
நான் அமைதியாக இருந்தேன்.
[/size]
"ஏய்..பூம்பொழில் உன்னை தாண்டி திரும்பி பாருடீ"
அப்பொழுதும் அமைதியாக இருந்தேன்.அவன் என் கன்னத்தை பிடித்து திருப்பி " என் கிட்டே பேச மாட்டீயா"என கண்களில் ஏக்கத்தோடு கேட்டான்.
என்னால் அதற்கு மேல் உணர்வுகளை கட்டுபடுத்த முடியவில்லை.அவன் கழுத்தை கட்டிகொண்டு அழுதுவிட்டேன்"
இல்லடா,இல்ல உன்கிட்ட பேசாம என்னால மட்டும் எப்படி சந்தோசமாக இருக்க முடியும்"அழுதுகொண்டே சொன்னேன்.
சிறிது நேரம் கழித்து என் தலையை நிமிர்த்தி "ஏய்..! பொழில் என்னை பாருடீ,இனிமே நீ எதுக்காகவும் என்கிட்ட பேசாம இருக்க கூடாது."
நான் சரியென தலையாட்டினேன்.
அவன் மேலும் "நீ சொன்ன மாதிரி நான் இந்த வருடம் state champion ship match ல் கலந்துக்கறேன்"என்று கூறினான்.
நான் நம்பமுடியாமல் "நிஜமா"என்றேன்.
அவன் என் தலைமீது கைவைத்து "சத்தியமா"என்றான்.