13-08-2021, 02:17 PM
சில நாட்களில் - நிஷாவின் மூத்த மகள் ரூபாவுக்கு காது குத்து விழா வர, நம் குடும்பத்தில் அனைவரும் கலந்துகொள்ளவேண்டும் என்றார் மோகன்.
நான் எதுக்கு? அது கதிருக்கும் நிஷாவுக்கும் தர்மசங்கடமாக இருக்கும் என்றான் இவன். இதை காயத்ரி, மோகனிடம் சொல்ல, அவரோ, நோ நோ... நீங்க எல்லோரும் ஒற்றுமையா இருக்கணும் என்றுவிட்டார். வேறு வழியில்லாமல், அனைவரும், குடும்பமாக கிராமத்துக்கு போனார்கள்.
அங்கே கதிருக்கு பெரிய பிரச்சினை காத்திருந்தது. விவசாயிகளை ஏமாற்றிக்கொண்டிருந்த தரகர் ஒருவன், கொள்முதல் வியாபாரி, கதிரின் மேல் வெறுப்பில் இருந்தான். கதிர் இருக்கும்வரை தனக்கு பிரச்சினைதான் என்று அவனை போட்டுத்தள்ள நேரம் பார்த்துக்கொண்டிருந்தான். தன் தம்பி திருவுடன் சேர்ந்துகொண்டு திட்டம் தீட்டினான்.
கதிர் மேல போலீசுக்கும் வெறுப்பு இருக்கு. அவனை செஞ்சிடுவோம் என்றான் திரு.
காதுகுத்து விழாவில், சீனு, யாரிடமும் ஒட்டாமல் தனித்தே நின்றான். அவனால் அவர்களோடு mingle ஆக முடியவில்லை. நிஷாவும் அவனிடம் ஆஹா ஓஹோவென்று பேசவில்லை. பங்க்சனுக்கு அவன் வந்ததுக்கு நன்றி சொன்னாள். பின், கதிர் மனசை கஷ்டப்படுத்திவிடக்கூடாது என்று, அவனிடம் லிமிட்டாகவே பேசிக்கொண்டிருந்தாள். கதிரும் அவனோடு கடமைக்கு பேசிக்கொண்டிருந்தான்.
பங்க்சன் முடிந்ததும், காயத்ரி நாம கிளம்புவோமா? என்றான்.
என்னங்க ஆச்சு? ஏன் அதுக்குள்ள?
இல்ல. கதிரை என்னால face பண்ண முடியல.
இருங்க. கதிர் கிட்ட நான் பேசுறேன். உங்க சார்பா நான் மன்னிப்பு கேட்குறேன். அவர் நல்ல டைப்! என்றாள் காயத்ரி.
அன்று இரவு - திருவின் அண்ணனிடமிருந்து (தரகரிடமிருந்து) இருந்து போன் வர, கதிர் போன் பேசிக்கொண்டே வீட்டுக்கு வெளியே.. இருட்டில் பின்புறம் போக... காயத்ரி, கதிரிடம் தனியாக பேசுவதற்காக சீனுவை கூட்டிக்கொண்டு வெளியே வந்தாள். அவன் போன் பேசி முடிக்கட்டும் என்று காத்திருந்தாள். அப்போது எதிர்பாராவிதமாக திருவும் அவன் அண்ணனும் கதிரை தாக்க.... காயத்ரி அலறியடித்துக்கொண்டு வீட்டுக்குள் ஓடினாள்.
சீனு செய்வதறியாமல் தவித்து, நடுங்கிப்போய் நின்றான். சுதாரித்து, கதிரை காப்பாற்றுவதற்காக அவனிடம் ஓடினான். திருவை பிடித்துத் தள்ளினான். இதற்குள், திரு, அவன் அண்ணன், இருவருமே ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார்கள்.
வீட்டிலுள்ள அனைவரும் ஓடிவரும்போது, கொலை செய்ய வந்தவர்கள் இருவரும் ரத்த வெள்ளத்தில் கிடக்க, வேகம் வேகமாக அவர்களை தூக்கிக்கொண்டு போய் ஹாஸ்பிடலில் சேர்த்தார்கள்.
அவர்கள் பிழைத்துக்கொண்டார்கள். ஆனால் கதிர் மேல் கம்ப்ளெயிண்ட் கொடுக்க, போலீஸ் கதிரை தேடி வந்தது.
நான் ஜெயிலுக்கு போறதுல எனக்கு ஒரு கஷ்டமுமில்லை. நான் போறேன். அவனுங்களை கொல்லாம விட்டுட்டேனே... என்றான் கதிர்.
நிஷா அழுதுகொண்டு அப்படியே உட்கார்ந்துவிட்டாள். ஐயோ கதிர் என் கண்ணால உங்களை எப்படி நான் ஜெயில்ல பார்ப்பேன்.....??
ஐயோ அவரு சிவில் சர்வீஸ்க்கு படிச்சிட்டு இருந்தாரே இனிமே அதுல சேரவே முடியாம போயிடுமே
நிஷா ஓவென்று அவனை நினைத்து அழ, அனைவருமே நிலைகுலைந்து போய்விட்டார்கள். சந்தோஷமாக பங்க்சன் முடிந்த நிலையில்.. கதிரின் நிலைமை.. நிஷாவின் அழுகை... மோகனை சோகமாக்கியது. நெஞ்சைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்துவிட்டார்.
நிஷா அழுவதையே பார்த்துக்கொண்டிருந்த சீனு, கண்கலங்கி நின்றான். அவள், தன் இடுப்பு செயினை கழட்டி தன் முகத்தில் விட்டெறிந்து, முகத்தை மூடிக்கொண்டு அழுதுகொண்டே உட்கார்ந்த காட்சிதான் அவனுக்கு ஞாபகம் வந்தது.
சில மணி நேரங்களுக்கு முன்னால்... தேவதை போல் வலம் வந்துகொண்டிருந்த நிஷா, இப்போது.. இப்படி...
அன்று நான் பிரச்சினைக்கு பயந்து ஓடிக்கொண்டிருந்தேன். நிஷாவை கவனித்துக்கொள்ளவில்லை. இப்போது.. அதே மாதிரி நிஷா அழுதுகொண்டிருக்கிறாள். நான் பார்த்துக்கொண்டிருக்கக்கூடாது.
அவனால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. ராஜ்ஜை தனியாக கூட்டிக்கொண்டு போனான். இறுகிய முகத்தோடு சொன்னான். இந்த பழியை நான் ஏத்துக்கிடுறேன். கதிருக்கு பதிலா நான் ஜெயிலுக்கு போறேன்.
ராஜ்க்கு என்ன செய்வதென்று புரியவில்லை. தடுமாறினான். நீ இரு சீனு. நான் வேற யாரையாவது அரேஞ்ச் பண்றேன் என்றான். ஆனால் ஷர்மாவும் சரி, வேறு யாரும் சரி, பழியை ஒத்துக்கொள்ள தயாராக இல்லை. தவிர, அவர்கள் சம்பவம் நடந்த இடத்திலும் இருந்திருக்கவில்லை. ஹாஸ்பிடலில் கிடக்கும் திருவும் அவன் அண்ணனும் இதை ஈசியாக பொய்யென்று நிரூபித்து விடுவார்கள். கதிரை பழி வாங்குவார்கள்.
ராஜ் போய் மோகனிடம் சொல்ல, அவர், காயத்ரியின் வாழ்க்கை? என்றார்.
தப்பு அந்த வியாபாரி மேலதான். சீக்கிரம் சீனுவை வெளியே எடுத்துடலாம் என்றான்.
தீபா, காமினி, வினய், மலர் என்று அனைவரும் எது சரி என்ன செய்யலாம் என்று அவரவர் பாயிண்ட் ஆப் வியூவில் பேச,
நிஷாவும் கதிரும், வேணாம், சீனு ஜெயிலுக்கு போகவேணாம் என்றார்கள். போலீஸ் விலங்கோடு வந்து நின்றார்கள்.
ராஜ் நிஷாவை சமாதானப்படுத்தினான். கதிர் உன்கூட இருக்கணும் நிஷா. I cannot allow Kadhir to go Jail.
கதிர் ஒத்துக்கொள்ளவில்லை. இல்ல ராஜ். இது அநியாயம். நான்தான் தண்டனை அனுபவிக்கணும்.
கதிர் ப்ளீஸ்.... உன்ன பெரிய பதவில வச்சி பாக்கணும்கிறது நிஷாவோட கனவு. உணர்ச்சிவசப்படாதே.
அவன் கதிரை பிடித்துக்கொள்ள... காயத்ரி, அழுதபடியே நிஷாவை பார்த்துக்கொண்டு நிற்க, சீனு, நிறைமாத கர்ப்பிணியான காயத்ரியிடம், நிஷாவை பார்த்துக்கோ காயு.... என்று சொல்லிவிட்டு, போலீஸ் ஜீப்பில் ஏறினான்.
கதிரால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. நோ... நோ... இது தப்பு... என்றான். மோகன் எழுந்து வந்து அவன் கைகளை பிடித்துக்கொண்டார். நிஷா என்கிட்ட அடிக்கடி சொல்லுவா மாப்பிள்ளை. கண்ணன் அளவுக்கு உங்களை பெரிய ஆளா ஆக்கணும்னு. அவ ஆசையை கெடுத்துடாதீங்க ப்ளீஸ்....
அவர் திரும்பி காயத்ரியை அணைத்துக்கொண்டு அவள் கண்ணத்தில் தட்டினார். காயத்ரி... நாங்க சீக்கிரமே சீனுவை வெளிய கொண்டு வந்துடுவோம். நீ கவலைப்படாதேம்மா.
காயத்ரி, கண்ணீரோடு அவர் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்.
அந்த இருட்டில்... கதிரை காப்பாற்றுவதற்காக, நான்தான் அவர்களை குத்தினேன் என்று வாக்குமூலம் கொடுத்தான் சீனு.
நாட்கள் கடகடவென்று ஓடின. நிஷா, எவ்வளவுதான் சந்தோஷமாக, நார்மலாக இருக்க முயன்றாலும், அவளால் முடியவில்லை.
ஏன் சீனு இப்படி பண்ண???
ஜெயிலில் அவன் எவ்வளவு கஷ்டப்படுவானோ என்று அவள் அவனை நினைத்து நினைத்து வருந்திக்கொண்டிருந்தாள். ஒருநாள், கதிர் அவள் முகத்தை ஏந்திக்கொண்டு கேட்டான்.
என்னாச்சு நிஷா? உன் முகத்துல நிம்மதியே இல்லையே. உன் முகத்துல சிரிப்பே இல்லையே.
அவள், கண் கலங்கியபடியே அவன் நெஞ்சில் சாய்ந்துகொண்டாள்.
ஸாரிங்க... என்னால சீனுவை நினைக்காம இருக்க முடியல. என்ன மன்னிச்சிடுங்க கதிர்
இட்ஸ் ஓகே நிஷா. இட்ஸ் ஓகே... இங்க பாரு... நான் உன்ன தப்பாவே எடுத்துக்க மாட்டேன்.
என்னங்க.. எனக்காக....
அவள் சொல்லுவதற்கு தயங்க... கதிர் அவள் நெற்றியில் முத்தமிட்டான். உன்கூட இவ்வளவு நாட்கள் குடும்பம் நடத்தியிருக்கேன். உன் மனசுல என்ன இருக்குன்னு தெரியாதா?
நிஷா பாவமாக அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். கதிர் அவள் கண்ணீரை துடைத்துவிட்டபடியே சொன்னான்.
வா. ரெண்டு பேரும் போய் சீனுவை பார்த்துவிட்டு வரலாம்.
அவன் சொன்னதும், அதை எதிர்பார்க்காத நிஷாவின் முகத்தில்... பல நாட்களுக்கு பிறகு சிரிப்பு அரும்பியது.
கதிரோடு போனாள். மறுபடியும் தாடியோடு அவனைப் பார்த்து.... மனம் கலங்கினாள்.
ஏன் சீனு இப்படி பண்ண?
ஜெயில் கம்பிகளுக்கு பின்னால் நின்றுகொண்டிருந்த சீனுவின் கைகளை ஆறுதலாக பற்றி பிடித்துக்கொண்டே நிஷா கேட்க, அவன், கதிர் முன்னால் அவளை ஏறிட்டுப் பார்க்கத் தயங்கி, தலையை குனிந்துகொண்டான்.
நிஷா, தன்னருகில் நின்ற கதிரைப் பார்த்தாள். பின் சீனுவிடம் குரல் தழுதழுக்கக் கேட்டாள்.
காயத்ரியைப் பற்றி கொஞ்சமாவது யோசிச்சுப் பார்த்தியா சீனு?
அவளை பார்த்துக்கத்தான் நீ இருக்கியே நிஷா
அவன் சட்டென்று சொல்ல... நிஷாவின் கண்ணீர் துளிகள் அவளையும் அறியாமல் சீனுவின் கைகளில் விழுந்தன.