13-08-2021, 02:15 PM
மாதங்கள் கடகடவென்று ஓடிக்கொண்டிருந்தன. மோகன், பத்மாவை கொஞ்சம் கொஞ்சமாக சமாதானப்படுத்திக்கொண்டிருந்தார். இன்னொருபுறம், அபர்ணாவை கோவிலில் சந்தித்து, அவள் காலில் விழுந்தார்.
என்ன மன்னிச்சுடு அபர்ணா..... நான் உன்ன ரொம்ப கொடுமைப்படுத்திட்டேன். உன்னை குழந்தையோடு தனியா தவிக்கவிட்டுட்டேன். என்ன தயவு செஞ்சி மன்னிச்சிடு அபர்ணா என்று கண்கலங்கி அழுதார்.
அபர்ணாவோ, அவரிடம் பேச விருப்பம் இல்லாதவளாய், துக்கம் தொண்டையை அடைக்க, அவரை அலட்சியம் செய்துவிட்டுப் போய்விட்டாள். மோகன், தன் ஈகோவையெல்லாம் தூக்கி ஓரம் வைத்துவிட்டு, அவள் போகும் இடங்களிலெல்லாம் அவளுக்காக காத்துக்கிடந்தார். மன்னிப்பு கேட்டுக்கொண்டேயிருந்தார்.
ஒருகட்டத்தில், மனமிரங்கி, அபர்ணா தான் பட்ட கஷ்டங்களையெல்லாம் நினைத்து அவர் முன்னால் கண்ணீர் வடித்துக்கொண்டு நிற்க, மோகன் அவளை அணைத்துக்கொண்டார். நீ என்ன தண்டனை வேணும்னாலும் கொடு ஏற்றுக்கொள்கிறேன் என்றார்.
அபர்ணாவுக்கு, வாழ்க்கையில் ஒரு பிடிப்பு கிடைத்ததுபோல் இருந்தது. வாழும் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் இருப்பதுபோல் இருந்தது. தனக்கு யாருமே இல்லையே என்கிற வேதனை மறைந்தது. அவரை ஏற்றுக்கொண்டாள்.
சீக்கிரமே உன்னை ஊரறிய என் வீட்டுக்கு கூட்டிட்டுப் போறேன் என்றார். காயத்ரியிடம் அதற்குப் பிறகு சொல்லிக்கொள்ளலாம் அதுவரைக்கும் அவளுக்கு தெரியவேண்டாம் என்றாள் இவள்.
எனக்கு உடனே என் மகளை பார்க்கணும் அபர்ணா
இல்ல மோகன் உங்க குடும்பத்துக்குள்ள குழப்பம் வேண்டாம். நாங்க இப்படியே இருந்துட்டுப் போறோம். அவளுக்கும் தெரியவேணாம்.
நோ நோ... நான் சீக்கிரமே பத்மாவை சமாதானப்படுத்துறேன் என்றார் அவர்.
நாட்கள் இப்படியே ஓடின.
ஒருவழியாக பத்மா சமாதானம் ஆகி, அபர்ணா, மோகனின் வீட்டுக்கு வந்தாள். அபர்ணாவும் மோகனும் சேர்ந்து போன் செய்ய...... காயத்ரி, இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காடிப் போனாள். அபர்ணா அவளிடம் எல்லா விஷயத்தையும் சொல்லி அழ...... அவளுக்கு நம்பவே முடியவில்லை.
என் உயிர்த் தோழி நிஷா என்னுடைய அக்காவா?
காயத்ரிக்கு, சந்தோஷத்தில், கண்களிலிருந்து கண்ணீர் ஊற்றியது. நான் கர்ப்பமா இருக்கிறேன்ப்பா.. என்று சொன்னாள். .
இங்க வாங்க ரெண்டு பேரும் கிளம்பி வாங்க. நான் உங்களை உடனே பார்க்கணும். உடனே பார்க்கணும்....
மோகன் பாசத்தில் உருக, சீனுவுக்கு அதிர்ச்சி. ஆச்சரியம். தலை சுற்றியது. என்ன நடக்கிறது என் வாழ்க்கையில்? மோகன், என்னுடைய மாமனாரா?? நிஷா என்னுடைய மச்சினியா?
அடிப்பாவி அத்தை! உன்னை சாதாரணமா நெனச்சேனே. பெரிய ஆளா இருந்திருக்கியே. உன்னால நான் நினைக்க முடியாததெல்லாம் என் வாழ்க்கையில் நடக்குதே
உன் அம்மா சாதாரண ஆள் இல்லைடி! என்றான் காயத்ரியிடம்.
என்னால நம்பவே முடியலைங்க
எனக்கும்தாண்டி. நிஷா எனக்கு இவ்வளவு க்ளோஸா வருவான்னு நான் நெனச்சே பார்க்கல.
அவனுக்கு அந்த hangover-லிருந்து வெளி வருவதற்கே ஒரு வாரம் ஆனது. அதற்கப்புறம்தான் அவன் தலைசுற்றல் நின்றது.
எஸ். மோகன் என்னுடைய மாமனார். ராஜ் என்னுடைய மச்சான். நிஷா என்னுடைய மதினி. எனக்கு நெருங்கிய சொந்தக்காரி. என் மனைவி காயத்ரியின்... அழகு அக்கா.
அவன் அதற்கு பிறகுதான் நிஷாவின் குடும்பத்துக்குள் ஒருவனாக தன்னை உணர ஆரம்பித்தான்.
என்னை ராசியில்லாதவ-ன்னு சொன்னான்ல மகேஷ், அவனுக்கு இந்த விஷயம் தெரியணும்ங்க. செருப்பால அடிச்ச மாதிரி இருக்கும் அவனுக்கு
காயத்ரி என்னால நம்பவே முடியலடி
எனக்கும்தாங்க. நிஷா என்னோட அக்கா. ஐயோ என் அக்காவா நிஷா?
எனக்கு உடனே அப்பாவை பார்க்கணும்ங்க. அம்மா அவர்கூட மொத்தமா சந்தோஷமா நிக்குறதை பார்க்கணும். நிஷாவை பார்க்கணும்.
சீனுவும் காயத்ரியும் கிளம்பி வர, அவர்களுக்கு சரியான வரவேற்பு. என்னை மன்னிச்சிடுங்க மாமா இனிமே எந்த தப்பும் மண்ணமாட்டேன்... என்று மோகனின் காலில் விழுந்தான் சீனு.
நல்லதுப்பா. நல்லதுப்பா.
நீங்க ஆசைப்படுற மாதிரி உங்க பொண்ணு காயத்ரியை நல்லா பார்த்துப்பேன். என்றான்.
அடுத்ததாக ராஜ்ஜிடமும் அவன் மன்னிப்பு கேட்க... ராஜ் அவனிடம் பேருக்கு கைகொடுத்தான். இனிமேல் காமினியை இவன்கிட்ட இருந்து காப்பாத்தணுமா? இப்போதான் மலரை டேனியல் கிட்டயிருந்து காப்பாற்றினேன்!.
காமினி சீனுவை ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டு நின்றாள்.
இவன் எனக்கு தம்பி முறையா...? விளங்கும்
சீனுவும் காமினியும் கைகொடுத்துக்கொண்டார்கள். அப்பாவுக்காக... ராஜ் சீனுவை ஏற்றுக்கொண்டான். அவனோடு சகஜமாக பேசினான்.
எனக்கு சொத்து சுகம் பணம் எதுவும் வேண்டாம். இப்போ என்கிட்டே கொஞ்சம் பணம் இருக்கு. நானே சொந்தமா ஒரு தொழில் தொடங்கிக்கொள்கிறேன் என்றான் சீனு.
அவனை சோதிப்பதற்காக, சரி என்றுவிட்டார் மோகன்.
சீனுவும் காயத்ரியும் கடகடவென்று வீட்டு வேலைகளை முடித்தார்கள். சீனு, ராஜ்ஜிடம் ஒரு உதவி செய்யமுடியுமா ஸார்? என்றான்.
என்ன சீனு?
ஒருத்தன் காயத்ரிகிட்ட வம்பு பண்ணினான். அவனை நாலு போடு போட்டாத்தான் எனக்கு நிம்மதியா இருக்கும்.
அவன் ஷர்மாவையும் ஆட்களையும் அனுப்பி வைக்க, சீனு, மேஸ்திரியை ஆசை தீர போட்டு அடித்தான். இனிமே காயத்ரி லைன்லேயே நீ குறுக்கே வரக்கூடாது என்றான்.