18-04-2019, 09:50 AM
(This post was last modified: 18-04-2019, 09:52 AM by johnypowas. Edited 1 time in total. Edited 1 time in total.)
பிரபல டிவி சீரியல் நடிகைகள் இருவர் சாலை விபத்தில் பலி - திரையுலகினர் அதிர்ச்சி!
Samayam Tamil | Updated:Apr 17, 2019, 08:43PM IST

இவர்கள் இருவரும் சீரியல் ஷூட்டிங் முடித்து விட்டு, ஐதராபாத் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிராக வந்த டிரக்கில் மோதாமல் இருக்க, காரை ஓட்டுநர் திருப்பியுள்ளார்.
இதில் சாலையோரம் இருந்த மரத்தில் பயங்கரமாக மோதியுள்ளது. இன்று அதிகாலை அப்பாரெட்டி குடா பகுதியில் விபத்து நடந்துள்ளது. இதில் பார்கவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
படுகாயம் அடைந்த அனுஷா ரெட்டி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். காயமடைந்த ஓட்டுநர் மற்றும் வினய் குமார் ஆகியோர் ஐதராபாத்தில் உள்ள ஆஸ்மானியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பார்கவி “முத்யலா முகு” என்ற சீரியலில் நடித்து வந்துள்ளார். அனுஷா ரெட்டி புதுமுக நடிகை ஆவார். இருவரும் தெலங்கானாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
விகாராபாத்தின் அனந்தகிரி வனப்பகுதியில் சீரியல் ஷூட்டிங்கிற்காக, கடந்த திங்கள் நடிகர், நடிகைகள் சென்றுள்ளனர். அந்த படப்பிடிப்பு முடிந்து, சீரியல் குழுவினர் ஐதராபாத் திரும்பிக் கொண்டிருந்த போது விபத்து நிகழ்ந்துள்ளது.
டிவி சீரியர் நடிகைகள் பார்கவி மற்றும் அனுஷா ரெட்டி ஆகியோர் சாலை விபத்தில் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீரியல் ஷூட்டிங் முடிந்து, வீடு திரும்பி கொண்டிருந்த போது சோகமான நிகழ்வு நடந்துள்ளது.
Samayam Tamil | Updated:Apr 17, 2019, 08:43PM IST
பிரபல டிவி சீரியல் நடிகைகள் இருவர் சாலை விபத்தில் பலி - திரையுலகினர் அதிர்ச்சி!
- டிவி சீரியல் நடிகைகள் இருவர் சாலை விபத்தில் பலி
- ஷூட்டிங் முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த போது சோகம்