Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
நெடுவாசல் கேட்கிறது: ஹைட்ரோகார்பனுக்காக நிலத்தை சீரழித்தால் வாழ்வாதாரம் என்னவாகும்?

[Image: _106452795_img_0309.jpg]
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள நெடுவாசல் கிராமம் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு வந்த எதிர்ப்பாலும், போராட்டத்தாலும் தமிழகம் முழுவதும் அறியப்பட்ட பெயராகிவிட்டது.
இந்த ஊர் ஆலங்குடி சட்டமன்றத் தொகுதியிலும், சிவகங்கை மக்களவைத் தொகுதியிலும் இடம் பெற்றுள்ளது.
ஒரு காலத்தில் மானாவாரிப் பயிர்களே அதிகம் செய்யப்பட்ட இப்பகுதியில். ஆழ்துளைக் கிணறுகள் பெருகியதால் விவசாயம் ஊக்கம் பெற்றது.
தற்போது நிலக்கடலை, உளுந்து, வாழை, கரும்பு உள்ளிட்டவை இந்தப் பகுதியின் பிரதான பயிர்கள். இந்த கிராமத்தின் சுற்றுவட்டாரத்தில் உள்ள செம்மண் பூமியில் தைலமரம், முந்திரி ஆகியவை அதிகம் பயிரிடப்படுகின்றன.
நெடுவாசல் பகுதியை சேர்ந்த அடுத்த தலைமுறை இளைஞர்கள் படித்துவிட்டு சென்னை, பெங்களுர்,மற்றும் அரபு நாடுகளுக்கு வேலை தேடி சென்றாலும் நெடுவாசல் பகுதியில் கணிசமானோருக்கு விவசாயமே இப்போதும் பிரதான தொழிலாக இருக்கிறது.
[Image: _106452797_img_0323.jpg]
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக அமைக்கபட்டிருந்த குழாயை நேரில் பார்த்தோம். அது தற்போது பயன்பாட்டில் இல்லை. அருகே விவசாய வேலையில் ஈடுபட்டு வந்த விவசாயி மாலதியிடம் கேட்ட போது 'இது குறித்து முன்பு எங்களுக்கு எந்த விழிப்புணர்வும் இல்லை. மண்ணெண்ணெய் எடுக்கிறோம் என்றுதான் முதலில் எங்களிடமிருந்து நிலத்தை குத்தகைக்கு கேட்டார்கள்' இந்த ஊர் வளர்ச்சியடையப் போகிறது என்ற நம்பிக்கையில்தான் நாங்களும் நிலத்தைக் கொடுத்தோம்
ஆனால், அவர்கள் எங்களுக்கு வாக்குறுதி அளித்த எந்த வளர்ச்சியும் வந்து சேரவில்லை. 'அதுமட்டுமல்ல தனியார் நிறுவனங்கள் துளையிட்ட பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் நிலத்தடி நீர் மிகவும் குறைந்துள்ளது'. மேலும், அவர்கள் எண்ணெய் எடுத்துவிட்டு, கைவிட்டுச் சென்ற சில இடங்களில் அவ்வப்போது தீப்பிடிக்கிறது. அதனால்தான் இப்போது நாங்கள் எதிர்கிறோம்' என்றார்.
மேலும் வரும் நாடளுமன்றத் தேர்தலில் பேட்டியிடும் வேட்பாளர்கள் யாராவது, நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் திட்டம் கொண்டு வரப்படாது என உறுதியளித்தார்களா என்ற கேள்வியை அப்பகுதியில் வசிக்கும் அலமேலுவிடம் கேட்ட போது 'இந்தப் பகுதி விவசாயத்துக்கு உகந்த பகுதி. 90 சதவிகித மக்கள் தங்கள் வாழ்வாதாரமாக விவசாயத்தையே நம்பி இருக்கிறோம்.
ஹைட்ரோ கார்பன் எடுக்கிறோம் என்ற பெயரில், இந்தப் பகுதியை முழுவதுமாக சீரழித்து விட்டால், நாங்கள் வாழ்வாதாரத்துக்காக எங்கே செல்வது..? இந்த தேர்தலையொட்டி இத்திட்டத்தை நிறுத்தி விடுவதாக வேட்பாளர்கள் தெரிவித்தாலும், இது வரை இத்திட்டம் முற்றிலும் கைவிடப்படும் என யாரும் உறுதியளிக்கவில்லை. நாங்கள் எப்படி யாரை நம்புவது? இதுவரை நாங்கள் யாரும் தேர்தலில் வாக்களிக்க முடிவு செய்யவில்லை. எனினும் இத்திட்டத்தை நிரந்திரமாக மூடினால் மட்டுமே தேர்தலில் கட்சிகளுக்கு வாக்களிப்போம் 'இல்லையெனில் நோட்டாவுக்கு தான் வாக்களிப்போம்' என தெரிவித்தார்.
[Image: _106452799_img_0318.jpg]
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தென்னை விவசாயி காமராஜ் 'கஜ புயலால் நாங்கள் எங்கள் வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்து விட்டு என்ன செய்வது' என்று தெரியால் நின்று கொண்டிருக்கிறோம். இதில் இருந்து மீண்டு வருவதற்கு எட்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகும். இந்நிலையில் 'மீண்டும் இப்பகுதியில் ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள் வந்தால் நிச்சயம் போரட்டம் தொடரும்'. வரும் நாடாளுமன்ற தேர்தலை பொருத்த அளவில் எங்கள் பகுதி மக்கள் நோட்டாவுக்கு வாக்களிக்கலாம் என்ற மன நிலையில்' உள்ளனர் என்றார்.
பலா விவசாயி பால வேலாயுதம், 'தற்போது ஆழ்துளை கிணறுகளை நம்பி விவசாயம் செய்து வருகிறோம். ஆனாலும், நீர் மட்டம் முற்றிலும் குறைந்துவிட்டது. நீர் மட்டத்தை உயர்த்த, நீர் ஆதாரத்தைப் பெருக்க அரசுத் தரப்பில் எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.
தேர்தல் நேரங்களில் 'காவிரி ஆறு இணைக்கப்படும் குண்டாறு இனைக்கபடும் என தேர்தல் வாக்குறுதிகள் அளித்தாலும் மக்கள் நம்பத் தயாராக இல்லை' காரணம் ஐந்தாண்டுகளுக்கு முன்னதாக இதே வாக்குறுதிகளை முன் வைத்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை என்றார்.
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 18-04-2019, 09:49 AM



Users browsing this thread: 102 Guest(s)