Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
தேர்தல், தொடர் விடுமுறையால் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்ற மக்கள்: பேருந்து, ரயில் நிலையங்களில் அலைமோதிய கூட்டம்
[Image: 7f5fb6d2P2188073mrjpg]தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் இன்று நடைபெற உள்ளதையொட்டி, தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊருக்கு நேற்று ஏராளமானோர் சென்றனர். சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில், நெல்லை விரைவு ரயில் முன்பதிவில்லா பெட்டியில் இடம் பிடிக்க முண்டியடித்த மக்கள் கூட்டம் | படம்: க.ஸ்ரீபரத்

தேர்தல் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக நேற்று ஏராளமான மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். இதனால், கோயம்பேடு, சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.
தமிழகம், புதுச்சேரியில் இன்று மக்களவை தேர்தல் நடக்கிறது. இதையொட்டி பொது விடுமுறை விடப்பட்டுள்ளது. இதேபோல், 19-ம் தேதி புனித வெள்ளியும், இதைத் தொடர்ந்து சனி, ஞாயிறு என தொடர்ந்து 4 நாட்களுக்கு விடுமுறை வருவதால், கடந்த 2 நாட்களாக சென்னையில் இருந்து ஏராளமானோர் தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர். ரயில்களில் வழக்கமான டிக்கெட்முன்பதிவு ஏற்கெனவே முடிந்திருந்ததால், தத்கால் மூலம் டிக்கெட் பெற நேற்று முன்தினம் பலரும் முயற்சித்தனர். அதிலும், டிக்கெட் கிடைக்காதவர்கள் அரசு, ஆம்னி பேருந்துகளில் நேற்று சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றனர்.
சென்னை சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் இருந்து புறப்பட்ட விரைவு ரயில்களில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. இதேபோல், கோயம்பேடு பேருந்து நிலையம், தாம்பரம், பெருங்களத்தூரிலும் நேற்று வழக்கத்தைவிட மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மக்கள் கூட்டம் அதிகரித்ததைத் தொடர்ந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. பயணிகளின் தேவையை வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டு ஆம்னி பேருந்துகளில் 30 முதல் 40 சதவீதம் வரையில் கட்டணம் அதிகமாக வசூலிக்கப்பட்டதாக பயணிகள் புகார் தெரிவித்தனர்.
நெல்லைக்கு நேற்று பயணம் மேற்கொண்ட ஜெயராணி மற்றும் அவரது நண்பர்கள் கூறும்போது, “முதல்முறையாக நாங்கள் வாக்களிக்க சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு செல்கிறோம். வாக்குரிமை என்பது ஒவ்வொருவரின் கடமை என்பதால், அதை நிறைவேற்றும் வகையில் நாங்கள் புறப்பட்டு செல்வது மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்றனர்.

2,300 சிறப்பு பேருந்துகள்
அரசு போக்குவரத்து கழகங்களின் அதிகாரிகள் தெரிவித்த தாவது:சென்னையில் வசிக்கும் ஏராளமான மக்கள் தங்களது வாக்குரிமையை சொந்த ஊரில் வைத்திருப்பார்கள். எனவே, மக்களின் வசதிக்காக இந்த தேர்தலையொட்டி நேற்று முன்தினம் முதல் சிறப்பு பேருந்துகள் இயக்குகிறோம். இதனால், வழக்கத்தை விட சுமார் 2 லட்சம் பேர் கூடுதலாக பயணம் செய்துள்ளனர். கடந்த 2 நாட்களில் 2,300 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. இதேபோல், தொடர் விடுமுறை முடிந்த பிறகு மக்கள் சென்னை திரும்பும் வகையில் வரும் 21-ம் தேதி மாலை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 18-04-2019, 09:41 AM



Users browsing this thread: 96 Guest(s)