09-08-2021, 12:25 AM
(24-08-2020, 04:05 AM)Dubai Seenu Wrote: ம்.
நிஷா அவனை ஆச்சரியமாகப் பார்த்தாள். எப்படி இவ்ளோ உறுதியா சொல்ற?
ஏன்னா அந்த ட்ரெஸ்ஸே இப்போ என்கிட்டதானே இருக்கு
என்னது? உன்கிட்டயா?
ஊருக்குப் போகும்போது நீ விட்டுட்டுப் போயிட்ட. அன்னைலேர்ந்து உன்னோட அந்த ட்ரெஸ் என் பெட்டிக்குள்ளதான் இருக்கு. யாருக்கும் தெரியாது.
நிஷாவுக்கு வார்த்தைகள் வரவில்லை. மனது நனைந்து.. கண்களில் கண்ணீர் முட்டுவதுபோல் இருந்தது.
எ.. என்ன கதிர் சொல்ற?
இரு. வரேன்.... எடுத்துட்டு வரேன்... என்று எழுந்து போனான். அயர்ன் பண்ணி.. மடித்து வைக்கப்பட்டிருந்த அவளது டீன் ஏஜ் பருவ பாவாடை சட்டையை... கொண்டுவந்து அவள் கையில் கொடுத்தான்.
நிஷா... கண்கள் விரிய அந்த ட்ரெஸ்ஸை கைகளில் வைத்து விரித்து விரித்துப் பார்த்துக்கொண்டிருந்தாள். கடகடவென்று அந்தக் காட்சி... நேற்று நடந்ததுபோல் கண்முன் வந்து நின்றது.
குளமான கண்களுடன் அவனைப் பார்த்தாள்.
என்னாச்சு நிஷா?
ஒ... ஒண்ணுமில்ல கதிர் - குரல் தழுதழுக்கச் சொன்னாள்.
ஏய்.... இங்க பாரு நீ இப்படிப் பண்ணா அப்புறம் நான் உன்கிட்ட எதையும் சொல்லமாட்டேன்
அவள், பதில் பேசாமல், அந்தத் துணிகளை அணைத்துப் பிடித்துக்கொண்டு, அப்படியே அவன் மடியில் படுத்துக்கொண்டாள்.
indha scene ah nan suttukkava... en storyku