08-08-2021, 11:41 PM
(06-08-2020, 09:49 PM)Dubai Seenu Wrote: அன்று -
அத்தையே எல்லா வேலைகளையும் பாக்குறாங்களே நாமளும் ஹெல்ப் பண்ணுவோம் என்று... கிணற்றில் தண்ணீர் இறைத்தாள் நிஷா. இரண்டு பக்கெட் எடுத்ததும் மூச்சு வாங்கியது. முந்தானையை இழுத்து முகத்தைத் துடைத்தாள். ஓ மை காட்... இது இவ்வளவு கஷ்டமான வேலைன்னு நினைக்கலையே
அத்தை, வெளியே மாடுகளை பார்த்துக்கொண்டு இருந்தாள்.
அங்கே வந்த கதிர், தத்தக்கா பித்தக்கா என்று தண்ணீர் இறைத்துக்கொண்டிருந்த நிஷாவைப் பார்த்தான். என்ன இவ... கிணத்துக்குள்ள விழுந்திடுவா போலிருக்கே..!!
டீச்சர்... என்ன பண்றீங்க? என்றான்.
இவன் குரல் கேட்டதும் பதறிய நிஷா, கயிறை விட, வாளி பொத்தென்று தண்ணீரில் விழுந்தது.
உங்களுக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை?
நிஷாவுக்கு, அவன் தன்னை வா, போ என்று பேசுவது மிகவும் பிடித்திருந்தது. நெருக்கமாக, மனம் திறந்து பேசும்போது மட்டும் அவன் தன்னை ஒருமையில் அழைப்பதை அவள் கவனித்தாள்.
இல்ல... நான் பழகணும்... என்றாள்.
அது சரி.... என்றவன், கயிறை இழுத்து அவள் கையில் கொடுத்தான். இழுங்க.. என்றான். ரொம்ப குனியாதீங்க.. என்றான்.
ம்...
அந்த வாளி கனமாக இருந்ததோ என்னவோ, பாதியிலேயே நின்றது. இடுப்பு வலித்தது. நேராக நிற்க முடியவில்லை. ரொம்பவும் குனிந்து இழுக்கவேண்டியதாயிருந்தது.
ரொம்ப குனியாதீங்க. கிணத்துக்குள்ள விழுந்துடுவீங்க.. என்று சிரித்தான்.
கிண்டல் பண்ணாதீங்க.... - அவள் நாணத்தோடு சொன்னாள். உண்மையில் அவளுக்கு வருத்தமாக இருந்தது. ஒரு சாதாரண வேலையைக்கூட செய்யத்தெரியாமல் இருக்கிறோம்
கதிர் அவளுக்குப் பின்னால் வந்து நின்றுகொண்டு அவளோடு சேர்த்து கயிறைப் பிடித்தான். அவளைப் பின்னாலிருந்து அனைத்துப் பிடித்தமாதிரி... ஆனால் அவளை உரசாமல், கயிறை மேலே இழுத்தான். நிஷாவுக்கு ஒருமாதிரியாக இருந்தது. முதுகு கூசியது. ஒருவித சிலிர்ப்பாக இருந்தது. வாளி, தண்ணீரோடு மேலே வந்தது. இப்போது சுலபமாக இருந்தது.
இப்படி இறைக்கணும். ஓரளவுக்குத்தான் குனியனும். ரொம்ப குணியக்கூடாது.
ம்...
இப்போது அவன் அவளுக்கு பக்கத்தில் நின்றுகொள்ள, அவள் வாளியை உள்ளே போட்டாள். உள்ளே போட்டபிறகுதான் யோசித்தாள், ஐயோ இடுப்பு.... !
அவள் புடவையை நன்றாக ஏத்தித்தான் கட்டியிருந்தாள். ஆனாலும் அவள் தண்ணீர் வாளியோடு போராடிக்கொண்டிருந்ததில், புடவை லோ ஹிப் அளவுக்கு இறங்கியிருந்தது. அவளது அழகான தொப்புள் குழி மூடப்பட்டுதான் இருந்தது. இருந்தாலும் இடுப்பு தெரியுமே... என்று தவித்தாள்.
கதிர், இதை எதிர்பார்க்கவில்லை. அவளது இடுப்பழகை.... ரசித்துப் பார்த்தான். அவனையுமறியாமல்.. அவனுக்குள் ஒரு சிலிர்ப்பு. ஒருவிதமான சுகம்.
அவளுக்கே தெரியாமல் புடவை இறங்கியிருக்கிறது என்று, அவளுக்கு வலதுபக்கம் வந்து நின்றுகொண்டான்.
நிஷாவுக்கு நிம்மதியாக இருந்தது. ஒருவித சந்தோஷமாகவும் இருந்தது. அவன் சொல்லிக்கொடுத்தபடி, கைகளில் பலம் கொடுத்து வாளியை மேலே இழுத்தாள். இருந்தாலும் அவளுக்கு குனியாமல் இருக்கமுடியவில்லை. கதிர் அவளது பின்னழகுகளை ரசித்துப் பார்த்தான். மறுபடியும் மனதுக்குள் ஒரு சிலிர்ப்பு. சிற்பிகள் வடிக்குற சிலை மாதிரி... நம்ம நிஷா ஒரு விதமான அழகுதான்!
கதிர் பார்த்துக்கொண்டிருக்க, நிஷா இரண்டு வாளி இறைத்திருப்பாள். ஐயோ ஐயோ என்று அடித்துக்கொண்டு லக்ஷ்மி ஓடிவந்தாள்.
நீ எதுக்கும்மா இந்த வேலையெல்லாம் செய்யுற?
வந்ததும் வராததுமாய் நிஷாவின் கைகளை விரித்துப் பார்த்தாள். உள்ளங்கைகள் நன்றாக சிவந்திருந்தது. ரத்தம் கட்டிப்போயிருந்தது. முரட்டுக் கயிறு... ஆங்காங்கே கீறி விட்டிருந்தது. கதிர் அதிர்ந்தான்.
ஏண்டா அறிவு கெட்டவனே நிஷாவை தண்ணி இறைக்கவெச்சி பார்த்துட்டு இருக்கியே
ந...நான் வர்றதுக்கு முன்னாடியே நிஷா இறைச்சிட்டு இருந்தாங்க...
பொய் சொல்லாத. உனக்கு அவளைக் கண்டாலே ஆகமாட்டேங்குது
நான் இறைக்க சொல்லல.... நிஷா சொல்லு நிஷா
அவள் சொல்லவில்லை. முகத்தைத் திருப்பிக்கொண்டு சிரித்தாள்.
கதிர் நன்றாக திட்டு வாங்கினான். அவன், அடிப்பாவி....! என்று நிஷாவைப் பார்த்தான்.
சீனு என்ன திட்ட கூடாது.... நான் மறுக்கா மறுக்கா இந்த சீன்லாம் படிக்கிறேன்... எனக்கு பர்சனலா இந்த சீன் மாதிரிலாம் உல்டாவா நடந்திருக்கு.