08-08-2021, 09:49 PM
(08-08-2021, 05:12 PM)rojaraja Wrote: கதையை விரைந்து முடிக்கப்போகிறீர்கள் என்பதும் மற்றும் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் நிறைவு செய்யப்பட்டு வரும் நிலையில் ஏற்பட்ட குழப்பத்தில் பொறுமை இழந்துவிட்டேன் , நீங்கள் சொன்ன மூண்று கட்சிகளையும் படித்தேன் முதலில் வருத்தம் பரிவு இரண்டாம் இடத்தில பாசம், நெருக்கம் மூன்றாம் இடத்தில மென்காதல், ஏக்கம்
எதிர்பார்த்தது இல்லை என்ற ஆதங்கத்தில் சொல்லவந்ததை கேட்க நினைத்தவற்றை முற்றிலும் மறந்தே போய்விட்டேன் நிஷா வீட்டுக்கு வந்ததும் நிஷாவிடம் இருந்து வெளிப்பட்ட அதிகாரம், கண்டிப்பு, கரிசனம், சூழ்நிலை அறிதல், தாய்மை உணர்வு எல்லாம் மிகவும் அருமை. தாய்மை உணர்வை குழந்தையிடம் வெளிப்படுத்துவது இயல்பு ஆனால் அதுவே நிஷா வளர்ந்த ஆண்மகன் சீனுவிடம் காட்டிய அன்பை கையாண்ட விதம் மிகவும் அருமை, அதிலும் இரண்டு வித உணர்வையும் சம அளவில் கையாண்டது வாவ்
நானும் கதைகள் எழுதி இருக்கின்றேன் பெரும்பாலான கதைகள் பாதியில் நின்றுவிடுகின்றன காரணம் நான் நினைக்கும் காட்சிகளை படிப்பவர்கள் உணர வேண்டும் என்பதற்க்காக மிகவும் சிரமப்படுவேன் அதிக விவரித்து எழுதுவேன் அதுவே நேரம் செல்லச்செல்ல சலிப்பை ஏற்படுத்திவிடும், தொடர்ந்து எழுத வராது கதை அப்படியே நின்று விடும். மனக்கண்ணில் காட்சிகள் அமைக்க முடிகின்றது ஆனால் எழுதும் போது மிகவும் குழப்பம் ஏற்படுகின்றது
ஆனால் நீங்கள் ஒரு காட்சி அமைக்கிறீர்கள் விவரிப்பும் வசங்களும் குறைந்த அளவே இருக்கின்றது படிக்கும் போது நீங்கள் சொல்ல வந்தது மனது எளிதில் புரிந்து கொள்கின்றது. சூழ்நிலை விளக்கங்கள் வசங்கள் சரியான அளவு இருக்கின்றது எப்படி அது சாத்தியப்படுகிறது என்று எனக்கு இன்னும் சரியாக விளங்க வில்லை. உங்கள் எழுத்துக்கு அடிமையானது இதுவும் ஒரு பெரிய காரணம். ஒன்று மட்டும் நிச்சயம் நீங்கள் அதிக சிரமம் எடுத்துக்கொள்கிறீர்கள் என்று தெளிவாக தெரிகின்றது, காட்சிகள் முழுவதும் மனக்கண்ணில் பார்த்து எல்லாம் ஆராய்ந்த பின்னர் தான் இப்படி எழுத முடியும்.
உங்களின் இந்த அனுபவத்தை கொஞ்சமவது அறிந்துகொண்டால் பாதியில் இருக்கும் எனது கதைகளை முடிக்கலாம் என்று தான் உங்கள் கதையை படிக்க தொடங்கினேன் பிறகு அதுவே வாடிக்கையாக மாறிவிட்டது
நண்பா ஒரு சிறிய திருத்தம்.
சீனுவும் நிஷாவும் பேசிக்கொள்ளும் மூன்று ஸீன்கள் எழுதியிருக்கிறேன் என்று சொன்னது, இனிமேல் வரப்போகும் காட்சிகளை...
நீங்கள் கதை எழுதிய அனுபவங்களை பகிர்ந்துகொண்டது சுவாரஸ்யமாக இருந்தது. இதுபற்றி நாம் நிறைய பேசவேண்டியிருக்கிறது. சீக்கிரம் உரையாடுவோம்