Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
``நீங்களும் பார்க்காதீங்க, யாருக்கும் ஷேர் பண்ணாதீங்க!" - அவெஞ்சர்ஸ் எண்டு கேம் இயக்குநர்கள் வேண்டுகோள்!

[/url]வரும் 26-ம் தேதி வெளியாகவுள்ள `அவெஞ்சர்ஸ் எண்டு கேம்' படத்தின் சில நிமிட காட்சிகள் திருட்டுத்தனமாக இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய சர்ச்சையைக் கிளப்பின. இந்நிலையில், ``இந்தக் காட்சிகள் படத்தில் இருப்பவையா?" என்று பலர் சந்தேகிக்கின்றனர். காரணம், படத்தின் இயக்குநர்கள் இப்படி லீக் செய்பவர்களைக் குழப்பியடிக்க 4 கிளைமாக்ஸ்கள் ஷூட் செய்ததாக முன்னரே பேட்டிகளில் தெரிவித்துள்ளனர்.

[Image: avengers-the-end-game-poster_10139.jpg]
[color][font]

மற்றொரு புறம், ஒரு சில ரசிகர்கள் பேசிக்கொண்டிருக்கையில் ``இந்த லீக்கான சீன்ஸ் என் கண்ணுல படாம பார்த்துக்கணும். தியேட்டரில் பார்க்கும்போது அந்த ஜோர் இருக்காது" என்று விலகி ஓடுன்றனர். இந்த விஷயங்கள் ஒருபுறம் ஓடிக்கொண்டிருக்க இது சம்பந்தமான மீம்களும் சோஷியல் மீடியாவில் ஹிட் அடித்து வருகின்றன. இணையத்தில் படத்தின் ஃபுட்டேஜ் லீக்கானதை அடுத்து படத்தின் இயக்குநர் இரட்டையர்கள் ரூஸோ பிரதர்ஸ் அவெஞ்சர்ஸ் ரசிகர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளனர்.


[/font][/color]
[Image: Russo_brothers_10526.jpg]
[color][font]
அந்தக் கடித்ததில்,
``உலகின் தலைசிறந்த ரசிகர்களுக்கு,
கடந்த 11 வருடமாக 11 பிரான்சைஸ்களாக இருக்கும் இந்தக் கதை முடிவுக்கு வருகிறது. நண்பர்கள், உறவினர்கள் சூழ இப்படத்தின் கதையிலும், கதாபாத்திரங்களிலும் ஒன்றிப்போன ரசிகர்களுக்கு, ஆச்சர்யமான, அதேசமயம் திருப்திகரமான ஒரு படமாக நிறைவுற வேண்டும் என்றும் கடந்த மூன்று வருடங்களாக இந்த எண்டு கேம் படத்துக்கு எங்கள் இருவருடன் இணைந்து பல நூற்றுக்கணக்கானோர் வேலை செய்துள்ளனர். 
[/font][/color]
[Image: avengers-the-end-game-poster_10407.jpg]
[color][font]
எங்களின் இந்தப் பயணத்தில் நேரம், கவனம் என முழுமனதுடன் தொடர்ந்து பயணிக்கும் ரசிகர்களாகிய உங்களுக்கு ஒரு வேண்டுகோள். எதிர்வரும் நாள்களில் எண்டுகேம் தொடர்பான விஷயங்களைப் பார்க்க நேர்ந்தால், அதை மற்றவர்களுக்கு ஷேர் செய்து 'ஸ்பாய்லர்' ஆக்காதீர்கள். நீங்களும் அந்த வீடியோக்களைப் பார்த்து அவெஞ்சர்ஸ் படத்தின் தியேட்டர் அனுபவத்தைக் குறைத்துக்கொள்ளாதீர்கள். 
[/font][/color]
தானோஸ் உங்கள் அமைதியைக் கோருகிறான். 

#DontSpoilTheEndgame!"

என அந்தக் கடிதத்தை முடித்துள்ளனர். இந்தியாவில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் வெளியாகிறது.
[color][font]
[url=https://www.vikatan.com/author/3291-allaudin-hussain][/font][/color]
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 17-04-2019, 06:02 PM



Users browsing this thread: 2 Guest(s)