17-04-2019, 05:50 PM
அவன் படமா... முடியவே முடியாது: மிஸ்டர் லோக்கலுக்கு நோ சொன்ன சந்தானம்
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவுள்ள படம் மிஸ்டர் லோக்கல். இந்தப் படத்தை ராஜேஷ் இயக்கியுள்ளார். ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார்.
இவர்களோடு சேர்ந்து ராதிகா, சதிஷ், தம்பி ராமையா, எரும சாணி ஹரிஜா என நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். மே 1 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் ராஜேஷ் படங்களில் எப்போதும் அவர் படத்தில் இதற்கு முன்னர் நடித்த ஹீரோக்கள் சிறப்புத் தோற்றத்தில் தோன்றுவார்கள். அதே போல மிஸ்டர் லோக்கல் படத்தில் ஜீவா, ஆர்யா, கார்த்தி, ஜிவி பிரகாஷ், உதயநிதி ஸ்டாலின் ஆகிய 5 ஹீரோக்களும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க உள்ளனர்.
![[Image: 1555488175-8986.jpg]](http://media.webdunia.com/_media/ta/img/article/2019-04/17/full/1555488175-8986.jpg)
இதில் புது விஷயம் என்னவெனில், இயக்குனர் ராஜேஷ் சந்தனத்தையும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க அழைத்தாராம். ஆனால், அவர் சிவகார்த்திகேயன் படம் என்பதால் நடிக்க மறுத்துவிடாராம். சந்தானம் சிவகார்த்திகேயன் இருவருக்கும் தொழில் போட்டி இருப்பதன் காரணமாகவே சந்தானம் இந்த படத்தில் நடிக்க மறுத்ததாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.
![[Image: 1555488205-8546.jpg]](http://media.webdunia.com/_media/ta/img/article/2019-04/17/full/1555488205-8546.jpg)