17-04-2019, 05:37 PM
தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
உள் தமிழகத்தில் இன்றும், நாளையும் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தென்தமிழகத்தில் சில இடங்களில் இடி மின்னலுடன் 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசவும் வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
தெற்கு உள்கர்நாடக முதல் தென் தமிழகம் வரை காற்றழுத்த தாழ்வுநிலை நிலவுவதால் மழைக்கு வாய்ப்புள்ளது எனவும், சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக கொடைக்கானல், குழித்துறை, பேச்சிப்பாறையில் தலா 5 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.