Un paiyanuku Indha jenmathula marriage illa
#3
ஆனால் இந்த திருச்சி பயணம் அவள் வாழ்க்கையை ஒரு திருப்பு திருப்பி போடப் போகிறது என்பதை அறியாது இருந்தாள்..

விஷ்ணு வேக வேகமாக வாசலுக்கு வந்தான்..

சே.. இன்னைக்கு அம்மா பனியாரத்தை தின்னதால செம லேட் ஆயிடுச்சி.. என்று புலம்பிக் கொண்டே தன் சைக்கிளை நோக்கி போனான்..

அவனுடைய லேட்டஸ்ட் மாடல் சைகிள் பெராரீ.. சமீபத்தில் தான் அவனுடைய அப்பா கோபால் அவனுக்கு பிறந்தநாள் பரிசாக மார்கெட்டில் இப்போது ரொம்ப ரொம்ப லேட்டஸ்ட்டா வெளி வந்திருக்கிறது என்று சொல்லி அவனுக்கு வாங்கி கொடுத்தார்..

அவனுடைய பெராரீ சைக்கிள் ஒரு சொகுசு காருக்கு அடுத்தபடியாக சரியான வசதிகள் கொண்டது.. செம லுக்கு.. செம ஸ்மூத்.. செம ஸ்பீடு.. வாட்டர் பாட்டில் வைத்துக் கொள்ள.. ஸ்கூல் பேக் வைத்துக் கொள்ள.. ஸ்னாக்ஸ் வைத்துக் கொள்ள என ஏகபட்ட டாஸ் போர்டுகள் கொண்ட சைக்கிளாக இருந்தது அவனுடைய பெராரீ.. மொத்தத்தில் ஒரு காருக்கு உண்டான அத்தனை வசதிகளும் அவன் சைக்கிளில் இருந்தது.. சினிமாவில் பயன்படுத்தும் மினி கேரவன் என்றே கூட சொல்லலாம்

ஏசியும் படுக்கை இல்லாது ஒன்று தான் குறை..

அப்பா உங்க காலத்துல இந்த மாதிரி சைக்கிள் எல்லாம் இருந்துச்சா என்று விளையாட்டாக கேட்பான் விஷ்ணு..

ம்ம்.. எங்க காலத்துலயும் சூப்பர் சைக்கிள் ஹெர்குலர் கம்பெனிகாரன் வித்துட்டு இருந்தான்

ஆனா சொந்தமா எங்க அப்பா அம்மா எங்களுக்கு சைக்கிள் எல்லாம் வாங்கி குடுக்க மாட்டாங்க..

ஹவர் சைக்கிள் வாடகை சைக்கிள் எடுத்து தான் ஞாயிற்றுக் கிழமை லீவுல மட்டும் நாங்க எங்க பிரண்ஸ்ஸோட சைக்கிள் மிதிச்சி பழகுவோம்.. என்று அவர் அந்த காலத்து கதையை ஆரம்பிப்பார்..

ஐயோ.. என்னங்க.. நல்ல நாளும் அதுவுமா உங்க காலத்து கதைய ஆரம்பிச்சிட்டீங்களா.. பாவம் புள்ளை பாருங்க.. முகம் எப்படி வாடி போயிடுச்சி.. என்று சொல்லி வந்தனா தன் மகனை இறுக்கி தன் மார்போடு அணைத்து அப்படியே கோபால் வாயையும் அடைத்து விடுவாள்..

வீட்டு வாசலுக்கு வந்து தன் சைக்கிளை எடுக்க போனவன் காம்பவுண்டு கேட்டை யாரோ திறப்பது போன்ற உருவம் தெரிய உற்று பார்த்தான்..

ஒரு காக்கி சட்டை காக்கி யூனிபார்ம் தோளில் காக்கி தொங்கு பை கையில் சில காகிதங்கள் தலையில் அதே காக்கி கலரில் நேரு தொப்பி போல போட்டிருந்த ஒருவர் அவர் சைக்கிளை ஸ்டேன்டு போட்டு விட்டு உள்ளே நுழைந்தார்..

அந்த சைக்கிளை உற்று பார்த்தான்..

முன்பக்கம் சின்னதாக ஒரு இரும்பு வெல்டிங்கில் உலகத்தை தன் முதுகில் ஒரு பலசாலி து£க்கிக் கொண்டிருப்பது போல ஒரு பொம்மை

ஒ.. இது தான் அப்பா சொன்ன ஹெர்குலர்ஸ் சைக்கிளாக இருக்குமோ.. என்று நினைத்தபடி மனதிற்குள்ளேயே சிரித்துக் கொண்டான் விஷ்ணு..

தம்பி கோபாலகிருஷ்ணன் வீடு இது தானே.. என்று கேட்டார் அந்த காக்கி சட்டை

ஆமாம் அங்கிள்.. எங்க கோபால் அப்பா தான் கோபாலகிருஷ்ணன்.. நீங்க அவருக்கு பிரெண்டா.. என்று கேட்டான் விஷ்ணு அவசர அவசரமாக.. ஸ்கூலுக்கு வேற லேட் ஆயிடுச்சி..

இல்ல தம்பி.. நான் போஸ்ட்மேன்.. உங்க வீட்டுக்கு ஒரு லெட்டர் வந்து இருக்கு என்று சொல்லி ஒரு இன்லெண்டு லெட்டரை விஷ்ணு கையில் திணித்து விட்டு சட்டென்று சென்று விட்டார்..

என்னது.. போஸ்ட்மேனா.. லெட்டரா.. இப்படி எல்லாம் விஷ்ணு எதுவுமே இதுவரை அவன் விவரம் தெரிந்தவரை கேள்வி பட்டது இல்லை..

வீட்டிற்கு நிறைய முறை கொரியர் வந்திருக்கிறது.. சில சமயம் பார்சல் கூட வரும்.. ஆனால் லெட்டர் என்பதை 2021ல் வாழ்ந்து கொண்டிருக்கும் விஷ்ணுவுக்கு சத்தியாமாக தெரியவில்லை..

இப்ப இதை உள்ளே கொண்டு போய் அம்மாவிடம் கொடுத்து இது என்ன ஏது என்று கேட்டு விவரம் தெரிந்து கொள்ளும் அவகாச நேரம் இல்லை விஷ்ணுவுக்கு..

ஈவினிங் ஸ்கூல்ல இருந்து வந்தபிறகு அம்மாவிடம் கொடுத்துவிடலாம் என்று முடிவு செய்த விஷ்ணு..

டக் என்று தன் ஸ்கூல் பை சைடில் அந்த லெட்டரை சொறுகி வைத்து விட்டு தன் சைக்கிளை எடுத்துக் கொண்டு ஸ்கூலுக்கு வேக வேகமாக கிளம்பினான்..

ஸ்கூல் சென்று தன் நண்பர்களுடன் கலந்து பாடத்தில் பாதியும்.. கதை பேசுவதில் மீதி நேரத்தையும் கழித்ததில் அவன் காலையில் போஸ்ட்மேன் கொடுத்த அந்த கடிதத்தை பற்றி மறந்தே போனான்..

மாலை எப்போதும் ஸ்கூல் கிரவுண்டில் புட்பால் வி¬ளாடிவிட்டு.. அதன் பிறகு கொஞ்ச நேரம் அந்த கிரவுண்டு பக்கத்திலேயே இருக்கும் ஒரு சின்ன சயின்ஸ் லேபுக்கு போவான்..

அங்கு அவனுடைய தாய்மாமன் மதுமோகன் ஆராய்ச்சியாளராக வேலை செய்கிறார்.. அவரை பார்த்துவிட்டு தான் டெய்லி வீட்டுக்கு திரும்புவான்..

மதுமோகன் ஒரு சயின்டீஸ்ட்.. பல புதுமையான விஷயங்களை கண்டு பிடிப்பதில் அதிக ஆர்வம் உள்ளவர்.. வந்தனாவின் கடைசி தம்பி.. தன் வாழ்நாள் முழுவதும் ஆராய்ச்சியிலேயே ஈடு பட்டு இருந்ததால் கடைசிவரை கல்யாணமே பண்ணிக் கொள்ளாமல் தன் நாட்களை ஆராய்ச்சியிலேயே அர்ப்பணித்துக் கொண்டார்..

மதுமோகனுக்கு தனியாக ஒரு ஆராய்ச்சி கூடமும் உண்டு.. அங்கே தான் சோறு தண்ணி.. படுக்கை என சகல வசதிகளும் கூடிய லேப் ஆராய்ச்சி கூடம் அரசாங்கம் அவருக்கு அமைத்து கொடுத்திருந்தது..

வாடா மாப்ள.. என்ன இன்னைக்கு இவ்வளவு சீக்கிரமா வந்திருக்க.. சரியா விளையாடலியா.. என்று தன் ஆராய்ச்சி கூடத்திற்குள் புட்பாலும் ஸ்கூல்பேகுடன் நுழைந்த விஷ்ணுவை அன்புடன் வரவேற்றார்..

அட போங்க மாமா.. நீங்க தான் வாய் நிறைய ஆசையா மாப்ள மாப்ளனு கூப்பிடுறீங்க.. ஆனா.. நீங்க என்ன கல்யாணம் பண்ணி எனக்குனு முறை பொண்ணா பெத்து வச்சி இருக்கீங்க.. உங்களுக்கு நான் உண்மையான மாப்பிள்ளையா ஆகுறதுக்கு என்று சலித்துக் கொண்டான் விஷ்ணு..

அட என்னடா விஷ்ணு பெரிய பேச்சு எல்லாம் பேசுற.. ஸ்கூல் படிக்கிற பையன் முறை பொண்ணு.. கல்யாணம்னு எல்லாம் பேச ஆரம்பிச்சிட்ட.. தப்புடா விஷ்ணு என்று அட்சைஸ் பண்ண ஆரம்பித்தார் மதுமோகன் மாமா..

வாழ்க்கையே வெறுத்து போச்சு மாமா.. என்று மீண்டும் சலித்து’ கொண்டான்..

முளைச்சி மூனு இலை விடல.. அதுக்குள்ள வாழ்க்கையே வெறுக்குற அளவுக்கு என்னடா நடந்தது உனக்கு என்று அவன் அருகில் வந்து அவன் தலையை தடவி ஆறுதலாக கேட்டார் மதுமோகன் மாமா..

எங்க பக்கத்து வீட்டு பிரமானந்தம் அங்கிள் எப்ப எங்க அப்பா கூட சண்டை போடும் போதெல்லாம்.. இந்த ஜென்மத்துல உன் பையனுக்கு கல்யாணம் ஆகாது.. கல்யாணம் ஆகாதுனு சாபம் விட்டுட்டே இருக்காரு மாமா..

அதனால தான் அவர் சாபத்தை முறியடிக்கிற மாதிரி உடனே அர்ஜெண்ட்டா ஒரு கல்யாணத்த பண்ணிட்டு அவர் முன்னாடி போய் நிக்கணும்னு தோனுது மாமா.. என்றான் அப்பாவியாக விஷ்ணு..

அடச்சே.. சின்ன பையனை திட்டுற வார்த்தைகளா இது.. அந்த பிரம்மானந்தத்துக்கு கொஞ்சம் கூட அறிவே இல்லடா விஷ்ணு.. சரி சரி.. நீ ஒன்றும் கவலை படாத.. உனக்கு இந்த ஜென்மத்துல என்ன.. ஏழேழு ஜென்மத்துக்கும் மறக்காதபடி ஜாம் ஜாம்னு உனக்கு ஒரு சூப்பர் பொண்ணு பார்த்து கல்யாணத்தை முடிச்சி வைக்கிறேன்..

ஆனா.. கல்யாணத்தை பத்தி எல்லாம் இப்போ உனக்கு நினைக்கிற வயசு இல்ல.. நல்லா படிக்கணும்... உங்க அப்பா மாதிரி பெரிய ஆபிசரா இல்ல பேங்க் மேனஜரா வேலைக்கு போகணும்.. அப்போ தான் உங்க அப்பா கோபாலுக்கு கிடைச்ச மாதிரியே உன் அம்மா வந்தனா அக்கா மாதிரியே உனக்கு ஒரு சூப்பர் குடும்ப பொண்ணு பொண்டாட்டியா கிடைப்பா.. என்று மதுமோகன் மாமாவும் சும்மா ஆறுதலுக்கு சொல்லி வைக்க..

விஷ்ணு மனதில் தனக்கு தன் அம்மா வந்தனா போலவே ஒரு பொண்டாட்டி வேணும்.. அப்போ தான் தன்னை ஒரு தாய் பாசத்துடன்.. பார்த்துக் கொள்வாள்.. தினமும் இரண்டு கன்னத்திலும் முத்தம் கொடுத்து ஸ்கூலுக்கு அனுப்புவாள் என்று எண்ணிக் கொண்டான்...

அம்மாவின் அன்பு முத்தங்களுக்கும் பொண்டாட்டி கொடுக்க போகும் ஆசை முத்தங்களுக்குமே இன்னும் வித்தியாசம் தெரியாத அப்பாவி ஸ்கூல் பையானாக இருந்தான் விஷ்ணு..

கொஞ்சம் நேரம் தன் மாமா மதுமோகன் லேபில் விளையாடினான் விஷ்ணு.. பிறகு..

மாமா.. நேரம் ஆச்சு நான் கிளம்புறேன்.. என்று சொல்லி விட்டு கிளம்பினான் விஷ்ணு..

அவன் அவசரமாக தன் ஸ்கூல் பேக்கை எடுத்து தன் முதுகில் மாட்டும் போது சட்டென்று காலையில் போஸ்ட்மேன் கொடுத்த லெட்டர் தவறி கீழே உருண்டு விழுந்தது..

அந்த உருண்டு விழுந்த கடிதத்தால்.. தன் வாழ்க்கையே உருண்டு விழப் போகிறது என்று அறியாத விஷ்ணு.. சைக்கிளை மித்தபடி வேக வேகமாக தன் வீட்டை நோக்கி போய் கொண்டு இருந்தான்..

தொடரும் 6
[+] 1 user Likes Rajkumarplayboy's post
Like Reply


Messages In This Thread
RE: Un paiyanuku Indha jenmathula marriage illa - by Rajkumarplayboy - 07-08-2021, 11:49 PM



Users browsing this thread: 3 Guest(s)