07-08-2021, 12:23 AM
(06-08-2021, 01:17 PM)rojaraja Wrote: எல்லா தருணத்திலும் என்னுடன் இருந்தவள் நீ
நான் வாடியபோதெல்லாம் பனி துளியாக என் மீது படர்ந்து துளிர்க்கவைத்தவள் நீ
சோர்வாக இருக்கும்போதெல்லாம் உன் அசட்டு தனத்தால் என்னை மகிழ்வித்தவள் நீ
நீ வாடும் போது உன்னை தேடி வருவேன்
நீ மூழகும் போது கட்டுமரமாக வந்து உன்னை கரைசேர்ப்பேன்
நீ என்னுயிர் தோழி!
மொட்டாக இருந்த என்னை முதற்கண் ரசித்தவன் நீ
என்னை முதற்கண் பூக்கவைத்து, மகிழ்வித்தவன் நீ
மலர்ந்த என்னிடம் வண்டாக வந்து தேன் குடித்தவன் நீ
எனக்கு மிகவும் பிடித்தவன், முதன்மையானவன் நீ
நீ வேதனைபட்டால் முதலில் துடிப்பவள் நான் அல்லவா
நீ என் துடிப்பை அடக்கும் ஆண்மகனல்லவா
நீ வீழ்வதை பார்த்திருப்பேனா என் அமுது கொடுத்து உன்னை எழ செய்வேனடா
நீ என்னுயிர் காதலன்!
நண்பா... உண்மையிலேயே கவிதையில் எங்களை சிதறடித்துவிட்டீர்கள்.
It was a sweet surprise for me. ஆச்சரியத்தோடு திரும்ப திரும்ப வாசித்தேன்.
நான் வாடியபோதெல்லாம் பனி துளியாக என் மீது படர்ந்து துளிர்க்கவைத்தவள் நீ
ஆஹா என்ன ஒரு அழகான உணர்வு..... ரசித்து எழுதியிருக்கிறீர்கள்
நீ வாடும் போது உன்னை தேடி வருவேன்
அழகோ அழகு. எனக்கு பிடித்த வரிகள்.
நீ வேதனைபட்டால் முதலில் துடிப்பவள் நான் அல்லவா
நீ என் துடிப்பை அடக்கும் ஆண்மகனல்லவா
நீ வீழ்வதை பார்த்திருப்பேனா என் அமுது கொடுத்து உன்னை எழ செய்வேனடா
நீ என்னுயிர் காதலன்!
வாய்ப்பே இல்லை நண்பா. இனிமையான வரிகள். நீங்கள் ஒரு எழுத்தாளனாக, கவிஞனாக... மக்களிடம் புகழ் பெற என் வாழ்த்துக்கள். கவிதை is simple and Super.