17-04-2019, 11:55 AM
நான் வீட்டிற்க்கு போகாமல் கடைக்கு போய்விட்டேன்...மீரா திரும்பி வரும் போது நான் வீட்டிலிருந்து சங்கடத்தை உண்டு பண்ண விரும்பவில்லை. வெகு தாமதமாகவே வீடு திரும்பினேன்..
இரவு தூக்கமும் எதிரியானது... நான் போராடிய போராட்டத்தை நினைவில் கொண்டேன் .. வாழ்க்கை எப்போதுமே பலம் மிகுந்த எதிரியாகவே இருந்தது.. ஒவ்வொரு முறையும் அதை போராடி வெற்றிக்கொல்வது அத்தனை சுலபமாக இருந்தது இல்லை...
மீரா எனக்கு மட்டுமே துரோகம் இழைத்திருந்தாள்... என் பிள்ளைகளுக்கு நல்ல அம்மாவாகவே இருந்தாள்.
மீரா சலனமின்றி அருகில் உறங்கினாள்.. அவள் கற்பிழந்ததுக்கு வெறும் அவளை மட்டும் குற்றம் சொல்ல முடியாது...
வாழ்க்கையை வெல்ல நான் ஓடிய ஓட்டத்தில் ... பேரழகை சுமந்துக்கொண்டிருந்த மனைவியை மறந்து விட்டேன் ...இதில் சரி பாதி குற்றம் என்னுடையதும்....
இனி பிரபுவை சந்தித்து இதற்கு முடிவு கட்டவேண்டும் .. பிரபுவுக்கும் மீராவுக்கும் என் மேல் மதிப்பிருந்தது எனக்கு சாதகமான விஷயம்..
இனி மீராவை தனிமையில் வாட விடுவதில்லை என்ற முடிவுக்கு வந்தேன் ... மெல்ல இரவு விடியலுக்கு வழிவிட்டது... சங்கரன் நாயக்கர் வீட்டு சேவல் விடிவெள்ளியை நோக்கி கூவியது...
நான் கடையில் மும்முரமானேன்.... என் கடையின் ஓடும் பிள்ளை ஓடியாரும் பிள்ளை ஓடி வந்தான்.."அண்ணே ! பிரபு அண்ணே உங்கள தூண் மண்டபத்துக்கு வர சொன்னாவ "
நான் சற்று மலைத்து போனேன்..கணக்கு பிள்ளையிடும் சொல்லிக்கொண்டு வண்டியை தூண் மண்டபத்துக்கு விரட்டினேன் ...
தூண் மண்டபம் எப்போதும் போல புழுதியை பூசிக்கொண்டு வெறிச்சொடி கிடந்தது...
மூன்றாம் கட்டில் நான் நுழையும் போது ... கொடிக்கம்பத்தில் சிந்து கிடந்தான் பிரபு...ஒரே நாளில் ஒரு ஆள் இப்படி ஒடிந்துபோக முடியுமா ? தலை பரட்டையாய் முகமெல்லாம் புழுதியாய் சட்டை வேர்த்தும் கசங்கியும்...ராஜ கம்பீரத்துடன் புன்னகை சிந்தும் இவனா?
அடக்கமாட்டாது ," பிரபு !" என்றேன் ...சரிந்து கிடந்தவன் மெல்ல எழுந்து அமர்ந்தான்.. முகம் அழுது வீங்கியிருந்தது ...
ஈனமாக ஒலித்தது அவன் குரல் , "சரவணா" பெருசாய் கேவி வெடித்தது அவன் குரல் ,"சர..வணா..."
பெருன்குரலெடுத்து அழுதபடி அப்படியே புழுதியில் சாய்ந்தான்..."அய்யோ சரவணா ....எல்லாம் தெரிஞ்சா ..சும்மா இருந்த..அய்யோ..அந்த அசிங்கத்த நேர்ல பாத்தும் ... ஐயோ ..கூட பொறந்தவனா இருந்தாலும் ..வெட்டி போட்ருபானே ..சரவணா.. என்ன கொன்னுடு .... சரவணா..என்ன கொன்னுடு சரவணா ... என் குடும்ப மானத்த பத்தி நீ யோசிச்சியே...நான் யோசிக்காம போய்ட்டேனே " என் காலடியில் கதறும் நண்பனை செய்வதறியாது பார்த்தேன்...
அவனை கை தாங்கலாக அழைத்து சென்று மேடையில் இருத்தினேன் ..."பிரபு! இதுல உன் தப்பும் மீரா தப்பும் மட்டுமில்ல ..நானும் சம்மந்த பட்ருக்கேன்..."
பிரபு கேவினான் , " இல்ல சரவணா..தப்பு உன் மேலையும் இல்ல மீரா மேலையும் இல்ல..அது அவ்ளோ சீக்கிரம் கெட்டு போற பொண்ணு கெடையாது ... அது அழகு என் கண்ண மறசிடுச்சி... நான் தான் விடாம தொரத்தி...அது வீக்னஸ் தெரிஞ்சி அடிச்சேன்.."
திடீரென முகம் அசூசையாய் கோணி அழுதான், " என் அப்பாரு..என் பொறப்பு மேலே..சந்தேக பட்டுட்டாரு..என் புள்ளையாடா நீ..எனக்கு முந்தி விரிச்சாடா உன் அம்மா உன்ன பெத்தான்னு..ரெண்டு பொம்பள மானத்த வாங்கிட்டு இன்னும் உசிரோட உக்காந்திருக்கேன்.."
நான் அவனையே பார்த்து கொண்டிருந்தேன் ..என்னக்கே ஆறுதல் சொல்ல ஆள் தேவை பட்டது நான் என்ன அவனுக்கு சொல்ல... அவனே தொடர்ந்தான், " என் மாமா பொண்ணுக்கும் எனக்கும் நாளைக்கு கல்யாணம் ....ஒவ்வொருத்தனும் பொறந்த மண்ல வாழ்ந்து சாவனும்னு நெனைப்பான் ...ஒனக்கு நான் செஞ்ச துரோகத்துக்கு ...நான் எனக்கே கொடுத்துகுற தண்டன ...இனி இந்த ஊர் பக்கம் கூட வரமாட்டேன்...திரும்பியும் கள்புக்கே போறேன் ... என் பொணம் கானா பொணமா போவுமேயொழிய...இந்த ஊர்க்கு வராது... "
என்னை சற்று நேரம் பார்த்தான் , " என்ன மன்னிச்சிட்டேன்னு மாத்திரம் சொல்லிடாத... அதுக்கு எனக்கு தகுதி இல்ல...உனக்கு செஞ்சதுக்கு ..என் அப்பன் ஆத்தால தொலைச்சிட்டேன்..பெத்த அப்பனே கொல்லி போடா கூட வராதேன்னு சொல்லிட்டாவ .. நான் போறேன் சரவணா..ஆனா ஒன்னு... மீரா இனியும் இப்பிடி நடக்காது ...எனக்கு தெரியும்...ஒன் மேல உசிரையே வச்சிருக்கு ... அது தடுமாறுனதுக்கு நான் தான் காரணம்... தப்பு பண்ணிட்டு எவ்ளோ மருங்குநிச்சின்னு எனக்கு தெரியும்.. அது மேல இனி சந்தேகபட்றாத...." எழுந்து விடு விடுவென போய்விட்டான்..
இரண்டு வாரம் கழித்து மீரா கேட்டாள், "உங்க கிட்ட சொல்லிகாமகூட உங்க பிரெண்டு கல்யாணம் முடிச்சிட்டு போயிட்டாரு.." என்றாள்..
"அவனுக்கு என்ன சங்கடமோ" என்றேன்
அவள் என்னையே பார்த்துக்கொண்டு நின்றாள்
"இன்னைக்கி வெள்ளிகிழம ..கொழந்தைகள கிளப்பிட்டு நீயும் கிளம்பு .. புத்தீஸ்வரர பாத்துட்டு செட்டியார் கடைல சாப்பிடுவோம்..."
என்றேன்
பூக்காரி, "அம்மா பூம்மா ..ஜாதி மல்லி இருக்கு தரட்டுமா ?" என்றாள்
வெளியே என் மனைவியின் குரல் கேட்டது, " இனி குண்டு மல்லியே குடு .. ஜாதி மல்லி வாசம் தலைய வலிக்குது "
---------------------------------------முற்றும்---------------------------------------------------