17-04-2019, 11:54 AM
கண்கள் ரத்த செகப்பாக பிரபுவின் அப்பா நின்றிருந்தார். அவர் எதோ சொல்ல வாயெடுக்க ... நான் அவர் வாயைப்பொத்தி ..இடிகளின் சத்தங்கள் எங்கள் காலடிகளை விழுங்க ..அவரை மண்டபத்தை விட்டு வெளியே இழுத்து வந்தேன்.
என் கையை வெறியுடன் உதறிவிட்டு, "விடுங்க தம்பி...அவங்க ரெண்டு போரையும் இங்கனயே வெட்டி போட்ருலாம்"
நான் முகத்தில் அறைந்து கொண்டு கதறினேன் .
"வெட்டி போட்டுட்டு ..? என்னன்னு சொல்லுவீங்க ஊருக்கு?...என் பொண்டாட்டி சோரம் போயிட்டானா ? இல்ல உங்க புள்ள அடுத்தவன் பொண்டாட்டிய களவாண்டுட்டானா? அவங்கள வெட்டி போடுறதால நம்ம கௌரவம் மிஞ்சாது...இன்னும் நாரி போகும்ப்பா... ரெண்டு குடும்பம் பாதிக்க படும்..நான் வெட்டிட்டு ஜெயிலுக்கு போய்டுவேன் என் புள்ளைங்க ?...நடு தெருவுல நிக்கும்... கையேந்தி பிச்சை எடுக்கும் .....நீங்க வெட்டிட்டு ஜெயிலுக்கு போய்டுவீங்க ..உங்க குடும்பம் ஆம்பாளையே இல்லாம கெடக்கும் ..காலம் பூரா ஊரு தூத்தி பேசும்... "
அவர் என் மார்பில் இரண்டு கையாலும் அறைந்தபடி அழுதார் , "எப்படிப்பா ..இம்புட்டையும் தாங்கிக்கிட்டு தூண் மாறி நிக்கிற சாமி? புள்ள வண்டி ...மண்டபகோயில்ல நிக்கிதே...கள்ளு கிள்ள குடிச்சி பாழா போயடுவானோன்னு ஓடியாந்தேன்... ஒரு குடும்பத்தையே பாழாக்கிகிட்டு இருக்கறதா பாக்கவ வந்தேன்...அய்யோ...என் கொலதெய்வமே .... என்ன வாரிக்கிட்டு போமாட்டியா?"
நான் அவர் கைகளை கண்களில் ஒற்றிக்கொண்டு அழுதேன்.. அவர் சரேலென என் கால்களில் விழுந்தார்
"அய்யா... எஞ்சாமி... அவன் இனி உன் பொஞ்சாதிய ஏறேடுத்தும் பாக்க மாட்டான்... அப்படி பாத்தா... என் தலைய அரிஞ்சி ஆடுவெட்டியான் கோயில் வாசல்ல வச்சிபுடுவேன்"
நான் முகம் கோணி அழதபடி அவரை கெஞ்சினேன், "அப்பா..எனக்கு பெத்த தகப்பனில்ல ..உங்கள தகப்பனா நெனச்சி கேக்குறேன்..என் பொண்டாட்டிக்கு நமக்கெல்லாம் இந்த அசிங்கம் தெரியும்னு தெரிய வேணாம்... நாக்கை புடுங்கிகிட்டு தொங்கிடுவா...இத்தன நாள் இப்படி இல்ல அவ ... ஏதோ வயசு கோளாறு தப்பு பண்ணிட்டா ... என் வாழ்க்கையே நரகமா ஆயிடும் .. இந்த வலிய தாங்கிக்கிட்டு வாழற தெம்பு எனக்கிருக்கு ..அவ போசுங்கிடுவாங்கய்யா.."
அவர் கண்ணீர் மல்க என்னை பார்த்தார்... அவர் அழுகை வெடித்து வந்தது, "நீ ஏன்யா ..எனக்கு புள்ளைய பொறந்திருக்க கூடாது..
அவர் விடுவிடுவென நடக்க தொடங்கினார்.
நான் வானம் என் மேல் கண்ணீர் சிந்த.. என் கண்ணீர் மழையோடு கரைந்தோட .. என் வண்டியை நோக்கி நடந்தேன்.