Adultery ஏன் செய்தாள் துரோகம் ? By vidhya20071984
#10
நான் சாவியை எடுத்துக்கொண்டு திருப்புகையில் மேசை மீது அதை கவனித்தேன்.. ஒரு கவர்... அதை எடுத்து பார்த்த போது உள்ளே வங்கி கணக்கு புத்தகம்...பெயர் பிரபுவினுடையது என்றது...பக்கத்தில் மீராவின் நிழலாடியது..."அடேடே! அவர் வந்திருந்தார்..பாஸ் புக்கை வைத்து விட்டு போய்விட்டார் போல?" என்றாள்...
"யார்?" என்றேன்
"பிரபு"
"அவன் ஊரிலிருந்து வந்துவிட்டானா?"
'ம்ம்ம்...உங்களை பார்க்கத்தான் வந்திருந்தார்"
எனக்கு அபத்தமாக தோன்றியது... இப்போதுமே கடையிலிருப்பவன் நான்... என்னை பார்க்க ஏன் வீட்டிற்க்கு வர வேண்டும்?
நான் என் வண்டியை கிளப்பிக்கொண்டு சென்றேன்..மனம் மீண்டும் வேதாளமாய் முருங்க மரம் ஏறியது..
என்றோ பிரபு சொன்ன வாக்கியங்கள் என் காதில் ஒலித்தது

" பொம்பள ஜாதி மல்லிய தலைல வச்சிக்கிட்டு நிக்கும் போது... அப்பா...நான் என் பொண்டாட்டிக்கு ஜாதிமல்லிதான்டா வாங்கித்தருவேன் "

இவன் ஊரிலிருந்து வந்தது கூட எனக்கு தெரியாது...நேராக வீட்டிற்க்கு போய் இருக்கிறான்

மீரா அவன் வாங்கித்தந்த சேலையை கட்டிக்கொண்டு தலையில் ஜாதிமல்லியோடு நிற்கிறாள்
யார் வாங்கி தந்தது ஜாதிமல்லி?
மீரா பூக்காரியிடம் குண்டு மல்லிதான் வாங்குவாள்
மேலும் பிரபு வந்த விஷயத்தை நானாக கண்டுபிடிக்கும் வரை அவள் கூறவில்லை
என் மனம் என் வண்டியைவிட வேகமாய் போனது...
சட்டென்று அவள் கண்ணில் பட்டாள்..என் வீட்டிற்கு பூ தரும் பூக்காரி?
வண்டியை ஓரம் கட்டினேன், "ஏம்மா! வீட்டிற்கு பூ கொடுத்துட்டியா?"
"இலீங்கய்யா ..ரெண்டு நாளா அவருக்கு உடம்பு சரியில்ல ..கடத்தெருவுக்கு போல...அம்மாகிட்ட நாளைலருந்து தரேன்னு சொல்லுங்க"
என் உள்ளங்கை வேர்ப்பதை என்னால் உணர முடிந்தது.

எனக்கு கடையில் நிலை கொள்ளவில்லை...கணக்குபிள்ளை அழைத்து, "உடல் சரியில்லை வீட்டிற்க்கு போகிறேன்" என்றேன்.
"ஆமா அய்யா ! முகம் ரொம்ப வெளிறி போய் இருக்கு ..நீங்க போங்க கடையடைச்சதும் கணக்கோட நான் வீட்டுக்கு வந்து சாவிய தந்துடுறேன்"
நான் வீட்டிற்க்கு வந்தேன் பிள்ளைகள் டியூஷன் முடித்துவிட்டு வந்து சாப்பிட்டு கொண்டிருந்தார்கள்..
மீரா பிள்ளைகளுக்கு தோசை வார்த்துக்கொண்டிருந்தாள்..
என்னை பார்த்ததும், "உங்களுக்கும் ஊதிட்டுமா?" என்றாள்
"வேணாம் ...அப்பறம் பாக்கலாம்...சரி....இப்போயெல்லாம் ஜாதிமல்லிதான் அதிகமா வைக்கிற?'
அவள் தோசை ஊற்றியபடி மெளனமாக இருந்தாள்..பின், "நான் என்ன செய்ய...நம்ம பூக்காரம்மா ஜாதி மல்லிதான் கொண்டுவருது"
என்னை சாட்டையால் சொடுக்கினாற்போல் உணர்தேன் ..
போய் சொல்ல தொடங்கிவிட்டாள்... தவறு செய்கிறாள்..என் கண்கள் கலங்கின ....
[+] 1 user Likes enjyxpy's post
Reply


Messages In This Thread
RE: ஏன் செய்தாள் துரோகம் ? By vidhya20071984 - by enjyxpy - 17-04-2019, 11:50 AM



Users browsing this thread: 1 Guest(s)