Adultery ஏன் செய்தாள் துரோகம் ? By vidhya20071984
#6
என் வீட்டிற்கு பிரபுவின் வருகை மிக சமீபங்களில் நடந்தது.... கிட்டத்தட்ட என் வீட்டிலேயேதான் இருந்தான் பிரபு....குழந்தைகள்.."மாமா மாமா" என்று அவனுடன் ஒட்டிக்கொண்டன.... மீரா அவ்வளவாக பிரபுவிடம் பேசமாட்டாள்.


அன்று கடையிலிருந்து சற்று முன்பாகவே வீட்டிற்கு புறப்பட்டேன். கணக்குபிள்ளை கடையை அடைத்து சாவியை வீட்டிற்க்கு கொண்டுவந்துவிடுவார் ..
என் புல்லெட் வடக்குவீதி வரும் போதே தடுமாறியது.. இறங்கி பார்த்தேன் ..முன் சக்கரம் பஞ்சர் ஆகி போயிருந்தது...நல்லவேளை வடக்குவீதியில்தான் மெக்கானிக்கும் இருந்தான்..."நீங்க வண்டியவிட்டு போங்கண்ணே ..நான் வீட்ல விட்டுடுறேன்" என்றான்..என் நன்றியை சிரிப்பில் காட்டிவிட்டு நான் நடந்தேன்...

நான்கு வீதிதண்டியதும் பள்ளிகூடம் வந்தது...சுற்றியும் போகலாம் இல்லை பள்ளிகூட மைதானத்தின் குறுக்கேவும் போகலாம்...ஆனால் இந்த ஏழு மணி வேளையில் அது கொஞ்சம் ஆள் அரவம் அற்று இருக்கும்.. நான் மைதானத்தின் குறுக்கே நடக்க முடிவு செய்தேன் ...பள்ளிகூடத்தை ஒட்டிய சந்தில் நடந்தேன்..பள்ளிகூட மைதானம் நிலவொளியில் நனைந்து தென்பட்டது ...அதான் துவக்கத்தில் உள்ள புளியமரத்தின் அடியில் யாரோ நிற்ப்பதை உணர்ந்தேன் ...

சற்று நெருங்க அது ஒரு ஆணும் பெண்ணும் என்று தெரிந்தது..அவன் பைக்கில் சாய்ந்தபடி நிற்க அந்த பெண் அவனுக்கு சற்று அருகில் நின்றிருந்தாள்... அவர்கள் என்னை கவனிக்க வாய்ப்பில்லை. நானும் சாதரணமாக நெருங்க..இப்போது அவர்கள் என்னை கவனித்தார்கள்...எனக்கும் இப்போது அவர்கள் யாரென்று விளங்கியது... நின்றுக்கொண்டிருந்தது மீராவும் பிரபுவும்... இருவரும் கல்லாக சமைந்துபோய் என்னை பார்த்தார்கள்... மீரா விக்கித்துபோய் நின்றாள்... பிரபுதான் சுதாரித்துக்கொண்டான், "மதனி கோயிலுக்கு போயிட்டு வந்தாங்க சரவணா...நான் இங்க சும்மா நின்னுகிட்டு இருந்தேன்..அதான் பேசிக்கிட்டு இருந்தோம்"
இது சாதாரண நிகழ்ச்சிதான் .... ஏனோ மீரா மட்டும் முகம் சரியில்லாமல் ஆகிபோனாள்... மீராவிடம் குழந்தைகள் எங்கே?" என்றேன்..."கூடத்தாங்க வந்துச்சிங்க ...பிரமீளாவோட ஓடிடிச்சிங்க" மீரா தடுமாறினாள்... பிரபு என்னிடம், "நீ என்ன நடந்து வர?" என்றான்.. நான் வண்டி பஞ்சரானதை சொன்னேன்..."சரி! நீ என் வண்டியில மதனிய கூட்டிகிட்டு போ ... நான் வந்து வண்டிய காலைல எடுத்துக்கிறேன் " என்றான் ...அவன் குரலில் பதற்றமோ குற்ற உணர்ச்சியோ இல்லை...

இது ஒரு சாதாரண சம்பவம்...மீரா குழந்தைகளோடு எப்போதும் கோயிலுக்கு அந்த வழியேதான் போய் வருவாள்... பிரபுவும் தம் அடிக்க அங்கேதான் அடிகடி வருவான்...நிசப்தமான சூழ்நிலை..நல்ல காற்றோட்டம்...நாங்கள் படித்த பள்ளி..அவன் அங்கேதான் மனம் சரியில்லை என்றாள் வந்து நிற்பான்... இதில் ஒரு தவறும் இல்லை...அனால் பைக்கில் பின்னாடி உக்கார்ந்து வரும் மீராவின் இதயத்துடிப்பை என்னக்கு கேட்டது....

நான் பைக்கை எங்கள் வீட்டின் முன்பு நிறுத்த பிரமீலவின் வீட்டிலிருந்து பிள்ளைகள் ஓடிவந்தன....மீரா வீட்டை திறந்தாள் குழந்தைகள் உள்ளே ஓடி விளையாட துவங்கின... அவள் அடுக்களையில் புகுந்துக்கொண்டாள்.... எனக்கு அவளின் நாடி நன்றாக தெரியும்...அவள் ஒரேயடியாக பயந்து போய் இருக்கிறாள் என்பதை உணர்ந்தேன்...நான் அவளை நெருங்கி அருகில் நின்றேன் ...மீராவின் கண்கள் கலங்கி இருப்பதை உணர்ந்தேன், "ஏய்! பைத்தியம் யாரு கூட நின்னு பேசிக்கிட்டிருந்த? பிரபு கூடத்தானே? இதுக்கு போய்...."
அவள் சட்டென்று என் மார்பில் முகம் புதைத்து கொண்டாள்.. நான் வாஞ்சையுடன் அவளை தழுவினேன் ....."பயந்துட்டியா?" என்றேன்..அவள் என் மார்பில் முக புதைத்தபடி "ஆம்" என்பது போல் தலையாட்டினாள். .. நான் வாய்விட்டு சிரித்தபடி அவளை அணைத்துக்கொண்டேன் ..
[+] 1 user Likes enjyxpy's post
Reply


Messages In This Thread
RE: ஏன் செய்தாள் துரோகம் ? By vidhya20071984 - by enjyxpy - 17-04-2019, 11:49 AM



Users browsing this thread: 1 Guest(s)