Adultery ஏன் செய்தாள் துரோகம் ? By vidhya20071984
#3
சில நாட்களில் சரவணன் என்ற என் பெயர் எனக்கு மறந்து போனது. "பெரியகடக்காரர் " என்ற பேர் நிலைத்தது..டவுனில் இருக்கும் என் இரண்டடுக்கு மாடி ஜவுளிக்கடை எனக்கு இன்னும் மரியாதையை கூட்டியது... மீரா "பெரியக்கடகாரம்மா" ஆகினாள்.
கோயில் திருவிழாவில் என் பங்கு பேர்பாதியாக இருந்தது. வயது முதிந்தவர்களும் வணக்கம் வைத்தனர். ஊரில் யார் வீட்டில் தேவையானாலும் என் வீட்டிற்கு பத்திரிகை முதலில் வந்தது.. அந்த ஊரில் முதலில் கார் வாங்கியவன் நான்தான். பெரிய மனிதர்கள் வீட்டு தேவைக்கு என்னை அழைத்தனர்.
அன்று மதிய சாப்பாட்டிற்காக வீட்டிற்கு கிளம்ப என் புல்லேட்டை உசுப்புகையில், "சரவணா" ...குரல் கேட்டு திரும்பினேன் ..அவன் நின்று பல்லைக்காட்டி கொண்டிருந்தான். முகம் நிறைய சந்தோசம்..மிக நெருக்கமான முகம் ...

சின்ன பிள்ளையாக இருக்கும் போது பக்கத்து கிராமத்திற்கு மேட்ச் விளையாட போவோம்...கிரிக்கெட் .....அப்போதையை உயிர் நாடி...
குமரேசன், புளிக்கொம்பு, வானவன், சுரேசு, ஆயுபு ...என பெரிய பட்டாளம்..இப்போது என்னை அழைத்தவன்..பிரபு...எங்கள் அறிவியல் வாத்தியார் மகன்...என்னைவிட மூன்று வயது சிறியவன் ...வீடு மேட்டு தெரு ...
"நல்ல இருக்கியாடா ? " வாஞ்சையாக கேட்டான்
பழைய சிநேகிதன் ...நான் வண்டியை நிறுத்தி விட்டு கடைபையனிடம் , "தயாளா!! ரெண்டு டீ சொல்லு" என்ற படி அவனை அணைத்து கொண்டேன்.
மணி போனது தெரியவில்லை....பேசிக்கொண்டே இருந்தோம்..ஒரு டீ நான்கானது ...சிகரெட்டு துண்டுகள் கிழே சிதறிக்கிடந்தது..
அபுதாபியில் இருந்ததாக சொன்னான்..
"கல்யாணம் ஆகிடுச்சா?" என்றேன்
"இல்லை டா ..தங்கச்சிக்கு முடிக்கணும்" என்றான்
பின், "நேத்து மதனிய கோயில்ல பாத்தேன்... ஐயருதான் சொன்னாரு ..உன் சம்சாரமென்று"
நான் புன்னகைத்தேன், "வீட்டுக்கு வாயேன்..சாப்பிட்டுட்டு கிளம்புவ!"
"இல்ல டா! ஏக வேல.. பாப்பாவுக்கு வரன் பாக்கற விஷயமா கிளம்புறேன். .. இன்னொரு நாள் வரேண்டா" விடைப்பெற்றான்.
[+] 1 user Likes enjyxpy's post
Reply


Messages In This Thread
RE: ஏன் செய்தாள் துரோகம் ? By vidhya20071984 - by enjyxpy - 17-04-2019, 11:47 AM



Users browsing this thread: 1 Guest(s)