15-12-2018, 09:38 AM
இது தொடர்பாக சாய்னா, ``2007-08 ம் ஆண்டுதான் நாங்கள் அறிமுகமானோம். டோர்னமென்டுகளை ஒன்றாக விளையாடியுள்ளோம். ஒன்றாக பயிற்சிபெற்றுள்ளோம். இருவரின் விளையாட்டிலும் கவனம் செலுத்தியுள்ளோம். போட்டி மயமான இந்த உலகில், ஒருவருடன் நெருக்கமாகப் பழகுவது என்பது கடினமானது. எப்படியோ நெருக்கம் எங்களுக்குள் சாத்தியமானது. படிப்படியாக எங்கள் நட்பு வளர்ந்தது. அப்போது நாங்கள், திருமணம்குறித்து யோசித்துப் பார்த்ததில்லை. நாங்கள் டோர்னமென்ட்டை வெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்தோம்.நாங்கள் இருவரும் பெரும்பாலும் இணைந்தே பயணித்தோம். இதை என் பெற்றோரும் அறிந்திருந்தனர். ஆகவே, என் விருப்பத்தை நான் கூறவேண்டிய தேவை எழுவில்லை. அவர்களே என் விருப்பத்தைப் புரிந்துகொண்டனர்” என்றார். டிசம்பர் 20-ம் தேதியிலிருந்து ப்ரீமியர் பேட்மின்டன் லீக் ஆரம்பிக்கிறது. அதன் பின், டோக்யோ போட்டிக்கான தகுதிப் போட்டிகள் வருகின்றன. இந்நிலையில், இவர்களின் திருமணம் 16-ம் தேதி நடைபெறும் எனக் கூறப்பட்டது. முன்னதாகவே, இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடந்துள்ளது. தொடர்ந்து சாய்னா - காஷ்யப் திருமண வரவேற்பு, விளையாட்டு, அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பங்கேற்க, ஹைதராபாத் நகரில் டிசம்பர் 16 அன்று, பிரமாண்டமாக நடைபெற உள்ளது.