15-12-2018, 09:37 AM
என் வாழ்க்கையில் இதுதான் பெஸ்ட் மேட்ச்’ - திருமணம் குறித்து சாய்னா நேவால்!இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையாகத் திகழ்பவர், சாய்னா நேவால். கடந்த 2012-ம் ஆண்டு, லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்றார். பேட்மின்டன் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சாதனையைப் படைத்தவர், சாய்னா. அர்ஜுனா விருது, பத்ம ஸ்ரீ, பத்ம பூஷண் உள்ளிட்ட விருதுகளை வாங்கிய இவர், விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ராஜீவ் கேல் ரத்னா விருதையும் பெற்றுள்ளார். ஹைதராபாத்தைச் சேர்ந்த சாய்னா, தனது சக பேட்மின்டன் வீரர் பாருபள்ளி காஷ்யப்பை திருமணம் செய்துகொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், ``இது தான் என் வாழ்வில் சிறந்த ஆட்டம்” என்று குறிப்பிட்டுள்ளார்.இருவரும் பல ஆண்டுகளாகக் காதலித்து வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், இன்று திருமணம் நடந்துள்ளது.