Romance காதலும் சாபமும்
எபிசோட் -9( ப்ரியாவின் கோபம் )

இரவு ஆகியும் ப்ரியா எந்திரிக்காம இருக்க சரி பாவம் தூங்கட்டும் என அவ பெட் ரூம்ல தூங்க அவளுக்கு நேர் எதிரில் வெளிய ஹாலில் சோபா போட்டு கதிர் தூங்கினான் .


அவன் பெரும்பாலும் ஹாலில் டிவி பார்த்து கொண்டே தான் தூங்குவான் .இன்றும் மணி 11 ஆகியும் ஸ்டார் மூவிஸ் ல ஏதோ இங்கிலீஸ் படம் பார்த்து கொண்டு இருக்க திடீரென ப்ரியா கத்தினா ஐயோ அம்மா என அவள் சத்தம் கேட்டு வேகமாக அவள் இருக்கும் ரூமுக்கு வந்தான் .

அவ தூக்கத்துல இருந்து திடுக்கிட்டு எந்திரிச்சு இருந்தா அவளுக்கு மூச்சு வேகமாக வாங்கியது அதை பார்த்து கதிர் பயந்தான் 

என்ன ஆச்சு பிரியா என்ன ஆச்சு என அவன் கேட்க அவளால் ஒன்றும் சொல்ல முடியவில்லை மூச்சு திணறுவது போல அவ நெஞ்சை தடவி கொண்டு இருக்க கதிர் வேகமாக அவளுக்கு கிளாசில் தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான் 

அப்படியே அவ கிட்ட உக்காந்து ஒண்ணுமில்ல ஒண்ணுமில்ல என அவ நெஞ்சை தடவி கொடுத்தான் .எல்லாம் சரி ஆகிடும் ஒண்ணுமில்ல 

மெல்ல ப்ரியா நார்மல் ஆனா  அவள் கதிரின் நெஞ்சில் சாய்ந்து இருக்க அவனோ அவள் கைகளை பிடித்து இருக்க அதை புரிந்த ப்ரியா உடனே விலகினா  கதிரும் அவள் பயப்படுவது பார்த்து உடனே பெட்டை விட்டு எழுந்தான் .
சாரி ப்ரியா நீ பயந்து இருந்த அதான் 

இட்ஸ் ஓகே 

ஆர் யு ஆல்ரைட் 

ம்ம் ஓகே நீ போ நான் தூங்கிக்கிறேன் 

ஓகே அது நீ இன்னும் சாப்பிடல 

இல்ல வேணாம் 

அதுக்கு இல்ல அது நீ நைட் முழுங்க வேண்டிய மாத்திர சாப்பிட்டு தான் முழுங்கணும் அதான் 

சாப்பாடு சாப்பாடு எப்ப பாரு சாப்பாடு ஒரே நேரம் சாப்பிடாட்டி செத்தா போக போறேன் என கோபமாகவும் அழுது கொண்டும் சொன்னாள் ப்ரியா 
அதுக்கு இல்ல ப்ரியா 

ப்ளீஸ் ஜஸ்ட் லீவ் மி அலோன் என அவள் சொல்ல மெல்ல ரூமை விட்டு வெளியேறினான் .ப்ரியாவுக்கு இரவு நேரம் ஒரு ஆண் மீண்டும் ஏதாவது தவறாக நடந்து விடுமோ கதிரும் ரேப் செய்து விடுவானா என பயந்து தான் கத்தி அனுப்பினாள் 

                                        தொடரும்
[+] 5 users Like prem ganesh 2's post
Like Reply


Messages In This Thread
RE: காதலும் சாபமும் - by prem ganesh 2 - 25-07-2021, 03:06 PM



Users browsing this thread: 24 Guest(s)