14-12-2018, 08:17 PM
(This post was last modified: 14-12-2018, 08:17 PM by johnypowas.)
உணவிட்டவர் குணமாகும்வரை, மருத்துவமனை வாசலில் ஏக்கத்தோடு நிற்கும் தெருநாய்கள்
பழகிவிட்டால் உயிரையே கொடுக்கும் அளவுக்கு நன்றியுள்ள ஜீவன்களாக உயிரியல் தன்மை பெற்றவைதான் நாய்கள். அவை வளர்ப்பு நாய்களாக இருந்தால் என்ன? தெருநாய்களாக இருந்தால் என்ன?
சீசர் என்கிற அந்த நபருடனான உண்மையான, எதிர்பார்ப்பற்ற பாசமும்,புரிதலும், நன்றியும்தான் அவரால் வளர்க்கப்படாத தெருநாய்கள், அவரை காண 30 நிமிடங்கள் காத்திருந்து மருத்துவமனை வாசலில் வந்து நின்றுள்ளன. பின்னர் மருத்துவமனை ஊழியர்கள் இரக்கப்பட்டு, சீசரைக் காணம் நாய்களை அனுமதித்தனர்.
எப்போதாவது உணவிட்ட ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதும் அதைத் தாங்கிக் கொள்ளாத 4 தெரு நாய்கள், அந்த நபர் மருத்துவ சிகிச்சை முடித்து திரும்பும் வரை ஹாஸ்பிட்டல் வாசலில் காத்திருந்த நெகிழ்வான தருணத்தை அந்த மருத்துவமனை ஊழியர் ஒருவர் புகைப்படமாக எடுத்து பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.