என் வாழ்வே உன்னோடுதான் -சசிரேகா
#11
”சரி அப்ப நான் இப்பவே கிளம்பறேன் என் லக்கேஜ் எங்க”

“இப்பவா இந்த குளிர்லயா பைத்தியமா நீ, பஸ் கூட போகாது விடிஞ்சதும் போ”
”அதுக்குள்ள நேத்ரன் வந்துட்டா”
“ஒரு ஐடியா பேசாம நீ உன் லக்கேஜ் எடுத்துக்கிட்டு ஆதி ரூம்ல தங்கிடு, யாருக்கும் சந்தேகம் வராது அப்படியே எம்டிக்கிட்ட போன்ல சொல்லிடு நானும் சொல்றேன்”

”சரி இரு இப்பவே நான் போன் பண்றேன்” என சொல்லிவிட்டு யாமினியும் போன் செய்தாள். ராத்திரி என்பதால் உறங்கிக் கொண்டிருந்தவர் கடைசி ரிங்கில் எடுத்து பேசவும் யாமினியும் காவேரியும் நடந்ததைக் கூறினார்கள். யாமினி கடைசியில் அழவே ஆரம்பித்தாள்

”சார் என்னால இங்க இருக்க முடியாது பயமாயிருக்கு சார்” என அவள் அழவும் எம்டி அவளிடம்

”வேணாம்மா நீ கிளம்பு நான் நேத்ரன் கிட்ட பேசறேன், இந்த டூரை கேன்சல் செய்யறேன் தாமோதரன்கிட்ட பேசி எல்லோரையும் ரிட்டர்ன் வர சொல்றேன்”

”அப்ப நானும் பஸ்லயே வந்துடறேனே”

“வேணாம்மா நேத்ரன் இருக்கான்ல நான் அவனை திட்டி அதனால அவன் உன்னை ஏதாவது செஞ்சிட்டா நான் தாமோதரன் கிட்ட பேசி நேத்ரன் சீட்டை கிழிச்சிடறேன் நீ ஊருக்கு கார் ஏற்பாடு செஞ்சிட்டு வந்துடும்மா அவன் மேல ஏற்கனவே இந்தமாதிரி நிறைய ரூமர்ஸ் இருந்தது ஆனால் அதுக்கு ஆதாரம் இல்லாததால நான் அமைதியாயிட்டேன் இந்த முறை நான் அவனை வேலையை விட்டே எடுத்துடறேன் நீ வாம்மா அவன்ட்ட மாட்டாத” என சொல்லவும் அவளும் நன்றி சொல்லிவிட்டு தன் லக்கேஜ்களை எடுத்துக்கொண்டு ஆதி அறைப்பக்கம் சென்றாள். இன்னும் அந்த நேத்ரன் அங்கேயே மயக்கமாக இருக்கவே பயத்தில் மூச்சு இருக்கறதா என பார்த்தாள். நேத்ரன் உயிருடன் இருப்பதை கன்பார்ம் செய்தவள் ரிசப்ஷனுக்கு போன் செய்தாள்

”ஹலோ இங்க பர்ஸ்ட் ப்ளோர்ல ஒருத்தர் மூச்சு பேச்சில்லாம இருக்காரு வந்து பாருங்க” என வேகமாக சொல்லிவிட்டு ஆதியின் அறைக்கதவை தட்டினாள். கதவு திறந்திருந்தாலும் எப்படி உள்ளே செல்வது என்ற நினைப்பில் அவள் கதவை தட்ட 5 நிமிடம் கழித்து தூக்க கலக்கத்தில் வந்து கதவை திறந்தான். அவன் இன்னும் அந்த கோலத்தில் இருக்கவே அவள் தலை குனிந்துக்கொண்டு அவனிடம்

”சாரி தப்பா நினைக்காதீங்க எனக்கு தங்க வேற ரூம் இல்லை இன்னிக்கு உங்க ரூம்ல தங்கட்டுமா ப்ளீஸ்” என்றாள் அவளையும் அவளது கையில் இருக்கும் லக்கேஜையும் பார்த்தவன் லக்கேஜை வாங்கிக்கொண்டு உள்ளே செல்ல அவளும் பின்னாலே வந்து கதவை சாத்தி தாப்பா போட்டாள். லக்கேஜை டேபிள் மீது வைத்தவன் அவளை பார்த்துவிட்டு கீழே தரையில் படுத்துக்கொள்ள அவள் கட்டிலில் படுத்துக்கொண்டாள்.

அங்கு நேத்ரனோ மெதுவாக சுய உணர்வு வந்து எழுந்தவன் சுற்றி சுற்றி பார்த்தான். அவன் முன்பு 2 பேர் இருக்க அவர்களிடம்

”நான் எப்படி இங்க”

”சார் நீங்க மயக்கமா இருந்தீங்க அதான்”
”என் கூட ஒரு பொண்ணு இருந்தாளே”

”இல்லை சார் நீங்க மட்டும்தான் இருந்தீங்க”

”அப்படியா” என எழுந்தவன் அந்த அறையை விட்டு வெளியே வந்து தன் அறைக்கு வர அங்கு யாருமில்லாமல் போகவே காவேரியிருந்த அறைக்கு வரவும் அங்கு தாமோதரன் இருந்தார்

”டேய் நேத்ரா பொறுக்கி இங்க வந்து உன் வேலையை காட்டறியா இப்பதான் எம்டி போன் பண்ணாரு உன் சீட் கிழிஞ்சிடுச்சி டூரையும் கேன்சல் செஞ்சிட்டாரு”

”சார் நான் எதுவும் செய்யலை சார் யாமினிதான் என்கிட்ட தப்பா நடந்துக்கிட்டா”

”போதும் இனி உன்னை நம்பறதா இல்லை போயிடு இங்கிருந்து போடா” என சொல்லி வெளியே தள்ளிவிட்டார்

நேத்ரன் கோபமாக தன் அறைக்குள் வந்து அமர்ந்தவன் யோசிக்கலானான். அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை, குழம்பியவன் மணியை பார்க்க அது 1 மணி என காட்டவும் எம்டிக்கு போன் செய்தான். அவரோ அவனை நன்றாக திட்டி போனை வைக்கவும் கடுப்பானான் நேத்ரன்.

”சே அவளை விட்டது தப்பா போச்சி எப்படியாவது அவளை பழிவாங்கனும். இப்ப பஸ் கிடையாது இந்த குளிர்லயும் அவளால எங்கயும் போக முடியாது, இங்கதான் எங்கயாவது இருப்பா காவேரிக்கு தெரியும் ஆனா அவள் சொல்லமாட்டா என்ன செய்றது இப்ப” என யோசித்தவன் தூக்கம் வராமல் அந்த அறையை விட்டு வெளியே ரிசப்ஷனில் விசாரித்தான்

”ஹலோ என் கூட வந்த ஒரு பொண்ணு வேற ரூம்ல தங்கியிருக்காங்க அவங்ககிட்ட பேசனும் வெரி அர்ஜன்ட்”

”பேரு சார்”

”யாமினி”

”ஓ அவங்களா ஆமாம் சார் தனியா ஒரு ரூம் புக் பண்ணியிருக்காங்க”

”எப்ப புக் பண்ணா இப்பவா”



”இல்லை சார் 9 மணிக்கு புக் பண்ணாங்க”
“9 மணிக்கா யாருக்காக”
Like Reply


Messages In This Thread
RE: என் வாழ்வே உன்னோடுதான் -சசிரேகா - by johnypowas - 15-04-2019, 11:25 AM



Users browsing this thread: 2 Guest(s)