என் வாழ்வே உன்னோடுதான் -சசிரேகா
#10
தெரியும் அதனாலதான் உன்னை நான் கல்யாணம் செஞ்சிக்கனும்னு ஆசைப்படறேன்”

”இல்லை வேணாம்”
“ப்ளீஸ் அப்படி சொல்லாத ஒரு நிமிஷம் இரு” என நேத்ரன் சொல்லிவிட்டு தன் பேக்கெட்டில் இருந்த தாலியை எடுத்து நீட்டினான்.
இங்க பாரு இதை உனக்காகத்தான் நான் வாங்கினேன், நாம இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாம் யாமினி”

”சே நீயெல்லாம் ஒரு மனுசனா, ஊர்மிளா சொன்னது சரிதான் அவள்கிட்ட கூட இப்படிதான் நீ தாலிய காட்டி அவளை ஏமாத்தி அனுபவிச்சிட்டு அவளை திருடின்னு பழியை சுமத்தி கம்பெனியை விட்டே வெளியே துரத்திட்ட இப்ப நான் கிடைச்சேனா உனக்கு”
”அய்யோ இல்லை அவள்தான் என்னை ஏமாத்தினா பணத்துக்காக என்னை அடையப் பார்த்தா என்னை நம்பு நான் உன்னைாதான் காதலிக்கிறேன் என்னை நம்பு இதோ இப்பவே உன் கழுத்தில தாலி கட்டறேன் அப்பவாச்சும் என்னை நீ நம்புவதானே” என அந்த தாலியை அவள் கழுத்தில் கட்டுவதற்குள் அதை பிடுங்கிக் கொண்டு அவனை உள்ளே தள்ளிவிட்டு அறையை விட்டு வெளியே ஓடினாள் யாமினி.
அவள் செல்லவும் அவள் பின்னாலே ஓடினான் நேத்ரன். வேகமாக ஓடியவள் லிப்டில் சென்றுவிட நேத்ரன் வந்து பிடிப்பதற்குள் லிப்ட் மூடிக்கொண்டது. நிம்மதியாக பெருமூச்சு விட்டவள் லிப்டிலேயே காவேரிக்கு போன் செய்தாள்
”ஹலோ”
“எங்கடி போன பாவி என்னை அந்த நேத்ரன் கிட்ட மாட்டிவிட்டிட்டியே நியாயமா இது”
”நானா இல்லையே நீதான் அந்த நேத்ரன் கிட்ட ஏதோ பேசனும்னு சொன்னியாமே அதனாலதான் அவன் என்னை வெளியே அனுப்பினான். ஆமா என்னாச்சி” என அவள் கேட்க நடந்ததை சொன்னாள் யாமினி
”அடப்பாவி அப்ப ஊர்மிளா சொன்னது உண்மைதானா, நான் கூட அவள் சொல்றது பொய்யின்னு நினைச்சேன். ஆமா நீ எங்க இருக்க”
”நான் லிப்ட்ல இருக்கேன் நீ எங்க இருக்க”
”நான் 103 ரூம்ல இருக்கேன்”
”சரி நான் வரேன்” என சொல்லிவிட்டு லிப்டை பார்த்தாள். அவசரத்தில் 5வது மாடியை அமுக்கியிருந்தாள். தலையில் அடித்துக்கொண்டவள் 1வது பட்டனை அழுத்தவும் லிப்டும் 5வது மாடிக்கு சென்று பின் கீழே இறங்கியது. கீழே வந்தவள் காவேரி சொன்ன அறையை தேடி செல்ல அங்கு தயாராக காத்திருந்தான் நேத்ரன். இரவு நேரம் என்பதால் அங்கு ஆள் நடமாட்டம் குறைவாக இருக்கவே அவனை பார்த்த உடனே வேகமாக அந்த இடத்தை விட்டு ஓடியவள் ஏதோ ஞாபகம் வர நேராக ஆதியின் அறைக்கு சென்று கதவை பலமாகத் தட்டினாள். அதற்குள் நேத்ரன் வந்து அவளது கையை பிடித்து இழுக்கவும் அவனிடம் போராடிக் கொண்டிருந்தாள் யாமினி
”டேய் விடுடா என்னை இல்லை போலீஸ்ல சொல்லிடுவேன்”
”பணத்தை கொடுத்தா கேஸ் இல்லாம செஞ்சிடுவாங்க வாடி எத்தனை நாள்தான் உன் பின்னாடி அலையறது ரொம்பவே பிகு பண்ற பெரிய இவளா நீ சீ வா” என அவளை இழுக்க அவள் கத்த ஆரம்பித்தாள்

”யாராவது இருக்கீங்களா ப்ளீஸ் காப்பாத்துங்க” என அவள் கத்தவும் நேத்ரன் சட்டென அவளை தன்னிடம் இழுத்து தன் கையால் அவளின் வாயை பொத்தினான். அவள் அவன்  கைகளுக்குள் மாட்டிக்கொண்டு போராடிக்கொண்டிருந்தாள். அந்நேரம் நேத்ரன் தலையில் ஒரு அடி இறங்கி அவன் உடனே மயக்க நிலைக்கு சென்றுவிட்டான். அவன் கீழே விழுந்ததும் தலை நிமிர்த்தி பார்த்த யாமினி அங்கு ஆதி இருக்கவும் நிம்மதியடைந்தவள் அவனிடம் சென்று அவனை கட்டிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.

ஆதியை அவள் கட்டிக்கொண்டு அழுவதைக் கண்டும் ஆதி அவள் பக்கம் பார்க்காமல் கீழே விழுந்து கிடந்தவனைப் பார்த்தான். அழுது ஓய்ந்தவள் தன்னிலை பெற்ற பின்புதான் தான் ஆதியை கட்டிப்பிடித்திருப்பதை உணர்ந்து அவனிடம் இருந்து விலகி நின்றாள். வெறும் ஜட்டியுடன் நின்றிருந்தவனைக் கண்டு வெட்கத்தில் முகத்தை திருப்பியவள் அவனிடம்

”ரொம்ப நன்றி நீங்க மட்டும் இல்லைன்னா இந்நேரம் இவன்” என அழுதுக்கொண்டே திரும்பிப் பார்க்க அங்கு ஆதி இல்லாமல் போகவே நேத்ரனை பார்த்துவிட்டு ஆதி அறைக்கு சென்றாள். அவன் அங்கு படுக்கையில் படுத்துவிட்டான். நிம்மதியாக அறைக்கதவை வெளிபுறமாகச் சாத்தியவள் காவேரியிடம் சென்று நடந்ததைக் கூறினாள்

”பரவாயில்லையே அந்த ஆதி நல்லவன்தான் போல ஆனா ஏன் பேசமாட்டேங்கறான்” என காவேரி சொல்ல அதற்கு யாமினி

”அதை விடு நேத்ரனை பத்தி சொல்லு அவன்ட்ட இருந்து நான் எப்படியாவது தப்பிக்கனும்”

”என்ன செய்யலாம் பேசாம கம்பெனி எம்டிக்கு போன் பண்ணி சொல்லலாம்”



”அவர் நம்புவாரா”
”நம்பலைன்னா என்ன செய்றது பேசாம ஊரை விட்டு கிளம்பிடு நேத்ரன் எழுந்தா நான் சமாளிச்சிக்கிறேன். இந்த டூர் எப்ப முடியறது மறுபடியும் அவன் உன்கிட்ட தப்பா நடந்துக்கிட்டா ஆதி திரும்பவும் உன்னை காப்பாத்த வரமாட்டான்”
Like Reply


Messages In This Thread
RE: என் வாழ்வே உன்னோடுதான் -சசிரேகா - by johnypowas - 15-04-2019, 11:23 AM



Users browsing this thread: 1 Guest(s)