நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#89
வரவேற்பறையில் அவர்கள் அமர்ந்திருந்த சோஃபாவிற்கு எதிரே இருந்த மற்றொரு சோஃபாவில் அமர்ந்தாள். எழுந்து முகம் கழுவிய கையோடு அப்படியே வந்திருக்கிறாள். குளிக்கவில்லை. ஆனாலும் சிறு ஒப்பனை தெரிந்தது.

இரவு போட்டிருந்த நைட்டியோடு வந்திருந்தாள். அது அவள் உடலோடு ஒட்டி இருந்தது.
ஆண்கள் இருவருக்கும் அவளை நிமிர்ந்து பார்ப்பது கடினமாக இருந்தது.
வேறுபக்கம் பார்வையைத் திருப்பிக்கொண்டனர்.

அவளுக்காக தேநீர் கொண்டு வந்த வனிதாமணிக்கும் அவளைப் பார்த்து சங்கடமாய் இருந்தது.

‘என்ன பெண் இவள்? வயதுப் பையன்கள் இரண்டு பேர் இருக்கும் வீட்டில் இப்படியா வந்து நிற்பாள்? ஒரு துண்டையாவது தோளில் போட்டுக்கொண்டு வந்திருக்கலாம் அல்லவா?’

நினைத்ததை வாய் விட்டுச் சொல்ல முடியாமல் மனதிற்குள்ளேயே புலம்பியபடி உள்ளே சென்றார்.

ஆண்கள் இருவரும் கிளம்பி தங்கள் அறைக்குச் செல்ல ஆயத்தமாயினர்.

“அத்தான். உங்ககிட்ட ஒன்னு சொல்லனும்.”

பீடிகையோடு ஆரம்பித்தாள்.

மகேந்திரன் பார்க்க வேண்டும் என்றுதானே அவள் அந்த இரவு உடையோடு மெனக்கெட்டு அலங்காரம் பண்ணிக்கொண்டு வந்தது.

அதில் தான் அழகாய் இருப்பதாய் அவளுக்குத் தோன்றும்.

அந்த மகேந்திரன் சாமியார் மாதிரி எந்த உணர்ச்சியையும் காட்டாது காலத்தைக் கழித்துக்கொண்டிருந்தால் இந்தச் சொத்தை ஆளுவதற்கு என்று வேறு எவளையாவது அந்த அத்தைக் கிழவி கொண்டு வந்து விட்டால் என்ன செய்வது என்று பயம் அவளுக்கு.

பார்ப்பதற்கு தன் கணவனுக்கு மரியாதை கொடுப்பது போல் தோன்றும். ஆனால் கடைசியில் பார்த்தால் அந்த அத்தைக் கிழவியின் பேச்சை அந்தக் கிழவன் தாண்டமாட்டான்.
இந்த வயதில் கூடத் தன் கணவனை முந்தானையில் முடிந்து வைத்திருக்கிறாள்

மகனுக்குத் திருமண வயது கடந்து போகிறதே என்ற கவலை கொஞ்சம் கூட இல்லை.

இனி தான்தான் களத்தில் இறங்கனும் என்று முடிவெடுத்துவிட்டாள்.

இது அத்தனையும் அவளது பெற்றோர் போதனை. அந்த அளவிற்கு அவர்கள் இந்த வீட்டின் சொத்திற்காக பேராசைப் பிடித்து அலைகிறார்கள்.

சாருலதா மகேந்திரன் அருகில் வர அவன் பதற்றத்தோடு எழுந்துவிட்டான்.

“என்ன சொல்லு.”

அருகில் அமர்ந்திருந்த யுகேந்திரனுக்குக் கேட்கக் கூடாது என்பதுபோல் அவனிடம் ரகசியமாய் பேச முயன்றவளை கையை நீட்டித் தடுத்தான்.

“அங்கே இருந்தே சொல்லு.”

அவள் முகம் கருத்தது.

“நேத்தைக்கு சொன்னேனே? அந்த கிருஷ்ணவேணி பத்தி. நீங்க உங்க தம்பிக்கிட்ட விசாரித்தீங்களா?”

“என்னத்த விசாரிக்கனும்?”

“என்ன அத்தான் இப்படி இருக்கீங்க? நம்ம யுகேந்திரன் அப்பாவி. அந்த கிருஷ்ணவேணி எமகாதகி. அவ யுகேந்திரனை ஏமாத்திக்கிட்டு இருக்கா.”

அவள் பேசியது அருகில் அமர்ந்திருந்த யுகேந்திரனுக்குக் காதில் கேட்டது.

அவள் போட்டுக்கொடுக்கிறாள் என்று புரிந்தது.

தன் மேல் தவறு இருந்தால்தானே பயப்படனும்.

கிருஷ்ணா எப்படிப்பட்டவள்? அவளைப் பற்றிக் குறை கூறும் தகுதி கூட இவளுக்குக் கிடையாது. இந்த வீட்டில் கிருஷ்ணா வந்து தங்கிய இத்தனை நாட்களில்இ ஒரு நாள் கூட அரைகுறை ஆடையோடு வந்து அவர்கள் முன்னே நின்றது இல்லை. முகம் சுளிக்கிற மாதிரி ஒரு நாள் கூட அவள் உடை உடுத்தியதில்லை.

எளிமையான உடையாக இருந்தாலும் கம்பீரமாகதான் அவளைக் காட்டும்.

இவள் போன்று பகட்டான ஆடைகளை அணிவதில்லை.

இருந்தும் அண்ணனின் மனதில் விசத்தைத் தூவுகிறாள்.

அதை வளர விடுவது நல்லதில்லை. படிப்பு முடிந்த உடன் கிருஷ்ணா கிளம்பிப்போறதாக இருந்தால் அண்ணன் எதை வேண்டுமானாலும் நினைத்துக்கொள்ளலாம் என்று விட்டுவிடலாம். ஆனால் கிருஷ்ணா இந்த வீட்டில் வாழப்போகிறவள்.

அவளைப் பற்றி யார் தவறாக நினைத்தாலும் அது தன் ஆசைக்குத் தடையாக இருக்கும்.

உடனே அண்ணனின் மனதில் எந்த சந்தேகம் இருந்தாலும் அதை நிவர்த்தி செய்ய வேண்டும்.

இந்த சாருலதா பேசியதைப் பார்த்தால் ஏற்கனவே ஏதோ அண்ணனிடம் சொல்லியிருக்கிறாள். அதன் தொடர்ச்சியாகதான் இந்த ரகசியப் பேச்சு.

“என்னாச்சுண்ணா? என்கிட்ட ஏதாவது கேட்கனும்னா நீ தாராளமா கேட்கலாம்.”

அவன் சொல்லிவிட்டாலும் மகேந்திரன் தயங்கினான்.

தம்பிக்குப் பிடித்த பெண்ணைப் பத்தி தான் தவறாகப் பேசினால் அதனால் தங்கள் இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு உண்டாகிவிட்டால் அதை தன்னால் தாங்கிக்கொள்ள முடியாது என்று அவனுக்குத் தோன்றியது.



ஆனால் அந்தத் தயக்கம் சாருலதாவிற்கு இல்லையே?
அவள் கேட்டுவிட்டாள்.
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 15-04-2019, 11:10 AM



Users browsing this thread: 6 Guest(s)