நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#88
தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 13 - ராசு
[Image: nivv.jpg]
கேந்திரன் கண் விழித்தான். இரவில் எந்த நேரத்தில் உறங்க ஆரம்பித்தான் என்றே அவனுக்குத் தெரியவில்லை.
ஆனாலும் வழக்கம் போல் அவனுக்கு விழிப்பு வந்துவிட்டது.
குளியல் அறைக்குள் நுழைந்து காலைக்கடன்களை முடித்தவன் அறையை விட்டு வெளியில் வந்தான்.

எதிரே கிருஷ்ணவேணி அறை வெளிப்பக்கமாக சாத்தியிருந்தது. அவள் எழுந்து கீழே சென்றுவிட்டாள் என்று புரிந்தது.

அவனும் கீழே சென்றான். யுகேந்திரனையும், கிருஷ்ணவேணியையும் காணவில்லை. தோட்டத்துப் பக்கத்தில் இருந்து சத்தம் வந்தது. எட்டிப் பார்த்தான். இருவரும் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தனர்.

அத்துடன் எதைப் பற்றியோ சுவாரசியாமாகப் பேசிக்கொண்டும் இருந்தனர்.

அவனைக் கண்டதும் வனிதாமணி தேநீர் எடுத்து வந்தார்.

அதை வாங்கி அமைதியாகப் பருக ஆரம்பித்தான். ஆனால் அவன் மனதில் அமைதி இருக்கவில்லை.

கிருஷ்ணவேணி யாருடன் சென்றாள்? அவள் நல்லவளா? கெட்டவளா? பணத்திற்காக அடிபோட்டுதான் தங்கள் வீட்டில் தங்கியிருக்கிறாளா? அவள் ஏமாற்றிவிட்டால் அவள் மீது உயிரையே வைத்திருக்கும் தம்பியின் கதி என்னாவது?

இவை எல்லாம் அவன் மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

ஆனால் முகத்தில் எதையும் காட்டாமல் அமைதியாகவே அமர்ந்திருந்தான்.

நடைப்பயிற்சி முடித்த இருவரும் உள்ளே வந்தனர்.

தன்னுடைய அறைக்குப் போய் குளித்துவிட்டு வருவதாகச் சொல்லிவிட்டு கிருஷ்ணவேணி செல்ல யுகேந்திரன் மட்டும் சோம்பிப்போய் அப்படியே அண்ணனின் அருகில் அமர்ந்துவிட்டான்.
“உன்னோடதானே கிருஷ்ணாவும் நடந்தா. அவ எவ்வளவு நல்ல பிள்ளையா குளிக்கப் போயிட்டா. சோம்பேறி. போய் குளித்துவிட்டு வாடா.”
அங்கே வந்த வனிதாமணி மகனைக் கண்டித்தார்.

“அட போங்கம்மா. நான் டீ குடித்துவிட்டுத்தான் குளிக்கப் போவேன். ஏற்கனவே மகன் களைச்சுப் போய் வந்திருக்கிறானே? அவனுக்கு டீ கொடுப்போம்னு தோன்றியதா உங்களுக்கு?”

செல்லமாய் சலித்துக்கொண்டான்.

“நீ என்னிக்குதான் திருந்தப் போறியோ?”

புலம்பிக்கொண்டே உள்ளே சென்றார்.

“ஏன்டா அவங்களை சிரமப்படுத்தறே? அவங்க சொல்றதை செய்ய வேண்டியதுதானே?”

“போண்ணா. நீ வேற. அவ என்னடான்னா காலையில் எழுந்து நடடான்னு என்னை தூங்கவே விடமாட்டேங்கிறா. இந்த ரெண்டு பொண்ணுங்களும் இருக்காங்களே? என்னை மட்டுமே தொந்தரவு செய்யறாங்க. ஏன் நீயும்தான் இந்த வீட்டில் இருக்கிறே? உன்னை ஏதாவது சொல்றாங்களா?”

“உன் அண்ணன் எப்பவும் எதையும் சொல்ற மாதிரி நடந்துக்கிறதுல்ல.”

மீண்டும் அவனைத் திட்டியவாறே தேநீர் கோப்பையைக் கொண்டு வந்து நீட்டினார்.

“அம்மா. திட்டிட்டே தர்றீங்களே? எனக்கு செரிக்குமா? எனக்கு ஒன்னும் வேண்டாம் போங்க.”

“சரி போறேன்.”  என்று எடுத்துக்கொண்டுக் கிளம்பியவரை கெஞ்சலான குரலில் கூப்பிட்டான்.

அவர் சிரித்துக்கொண்டே நீட்ட அவனும் வாங்கிப் பருகினான்.

“போனாப் போயிட்டுப் போறேன்னு தர்றேன். நீ குளிச்சுட்டு வந்த பிறகுதான் காலை சாப்பாடு தருவேன்.”

கண்டிப்பான குரலில் சொன்னார்.

“அம்மா. இதெல்லாம் அநியாயம்.”

“உனக்குப் புடிச்ச சாப்பாடுதான் செஞ்சிருக்கேன். நீ வரலைன்னா அப்புறம் வெளியில் போய்தான் சாப்பிடனும்.”

“எனக்கு வெளிச்சாப்பாடு அவ்வளவா ஒத்துக்காதுன்னு உங்களுக்குத் தெரியாதாம்மா. அதனால்தானே என்னோட நண்பர்கள் கிண்டலை எல்லாம் பொறுத்துக்கிட்டு மதியத்திற்கு வீட்டிலேர்ந்து சாப்பாடு எடுத்துட்டுப்போறேன். என் மீது கருணை காட்டுங்கம்மா.”

அவர் காதிலேயே போட்டுக்கொள்ளாமல் சமையல் அறைக்குள் சென்றுவிட்டார்.

“டேய் அரட்டை. அம்மா சொன்னதை செய்யாமல் இருந்தால்தான் உனக்கு சாப்பாடு இல்லைன்னு சொன்னாங்க. போய் குளிச்சுட்டு வாயேன்டா.”

“இப்பதானே கஷ்டப்பட்டு நடந்துட்டு வர்றேன். கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துக்கறேனே?”

பாவமான குரலில் கேட்டவனைப் பார்த்து அவனுக்குச் சிரிப்புதான் வந்தது.

இப்படிப்பட்டவனை அந்த கிருஷ்ணவேணி ஏமாற்றினாள் என்றால் அவனால் தாங்கிக்கொள்ள முடியுமா?



அப்போது சாருலதா தனது அறையை விட்டு வெளியில் வந்தாள்.
“ஆன்ட்டி. எனக்கு கொஞ்சம் டீ தர்றீங்களா?
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 15-04-2019, 11:08 AM



Users browsing this thread: 28 Guest(s)