Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
விவசாயம், கார்பரேட், பயங்கரவாதம் : அதிரடி காட்டும் காப்பான் டீசர்
[Image: NTLRG_20190414203707205835.jpg]

அயன், மாற்றான் படங்களை தொடர்ந்து சூர்யா - கேவி.ஆனந்த் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்த படம் காப்பான். மோகன்லால், ஆர்யா, சாயிஷா, போமன் இராணி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். மோகன்லால் பிரதமராகவும், சூர்யா பாதுகாவலாராகவும் நடித்துள்ளனர். ஹாரிஸ்ஜெயராஜ் இசையமைக்க, லைகா நிறுவனம் பிரம்மாண்டமாய் தயாரித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீஸ் தொடர்பான வேலைகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு காப்பான் படத்தின் டீசர் வௌியாகி உள்ளது. 1.33 நிமிடம் ஓடக்கூடிய இந்த டீசரில் சூர்யா பலவிதமான ரோல்களில் வருகிறார். விவசாயத்திற்கு குரல் கொடுப்பவர் போன்றும், பயங்கரவாதி போன்றும் சித்தரிக்கப்படுகிறார். அதோடு உளவாளி மற்றும் உயர் பாதுகாப்பு அதிகாரி போன்று வரும் காட்சிகளும் டீசரில் இடம் பெற்றுள்ளன. 

விவசாயம், கார்பரேட் கம்பெனிகளின் ஆதிக்கம், பயங்கரவாதம் உள்ளிட்ட பல பிரச்னைகள் இந்த டீசரில் காண்பிக்கப்பட்டுள்ளது. இன்னும் சொல்லப்போனால் தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு எதிராக நடக்கும் சில விஷயங்களும் இந்தப்படத்தில் பேசப்படும் என தெரிகிறது. டீசர் வௌியான 1மணிநேரத்தில் 5லட்சம் பார்வைகளை கடந்தது. 
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 15-04-2019, 11:00 AM



Users browsing this thread: 11 Guest(s)