Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
"நிச்சயமா இதுல மட்டும் நான் நடிக்கவே மாட்டேன்"... சாய் பல்லவி ரொம்பத் தெளிவு தான்!

சென்னை: எந்த நிலையிலும் அழகு சாதன பொருட்கள் விளம்பரத்தில் நடிக்க மாட்டேன் என நடிகை சாய் பல்லவி தெரிவித்துள்ளார்.
பிரேம் படத்தில் மலர் டீச்சராக நடித்து, இளைஞர்களின் இதயங்களை கொள்ளை அடித்தவர் நடிகை சாய் பல்லவி. இவர் கரு, மாரி 2 என இரண்டு தமிழ் படங்களில் நடித்துள்ளார். சூர்யாவுடன் இவர் நடித்துள்ள என்ஜிகே திரைப்படம், விரைவில் வெளிவர உள்ளது.

[Image: sai-pallavi22-1555301533.jpg]



இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தான் ஒருபோதும் அழகு சாதன பொருட்கள் விளம்பரத்தில் மட்டும் நடிக்கவே மாட்டேன் என திட்டவட்டமாக கூறியுள்ளார். மேலும், அழகு சாதன பொருட்களை பயன்படுவதால் மட்டும் ஒருவருடைய அழக மாறிவிடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேக்கப் போட்டால் தான் வேறு ஒருவர் போல தெரிகிறேன் என தனக்கு வேண்டியவர்கள் கூறுவதாகவும், அதன் காரணமாகவே தான் மேக்கப் போடாமல் நடிப்பதாகவும் சாய் பல்லவி கூறியுள்ளார். அதை தான் இயக்குனர்களும் விரும்புகின்றனா் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 15-04-2019, 10:56 AM



Users browsing this thread: 10 Guest(s)