Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
ரபாடா மின்னல் வேகம்: 15 ரன்களில் 8 விக்கெட்டுகளை இழந்து சன்ரைசர்ஸ் சரண்: 2-வது இடத்தில் டெல்லி
[Image: rabada11jpg]சன்ரைசர்ஸ் சரிவுக்கு காரணமான ரபாடாவை பாராட்டும் டெல்லி வீரர்கள் : படம் உதவி ஐபிஎல்

ரபாடா, கீமோ பால், மோரிஸ் கூட்டணியின் கட்டுக்கோப்பான, துல்லியமான வேகப்பந்துவீச்சால், ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 போட்டியின் 30-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 39 ரன்களில் வீழ்த்தி டெல்லி கேபிடல்ஸ் அணி அபார வெற்றது.
இந்த வெற்றி மூலம் டெல்லி கேபிடல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகள், 3 தோல்விகளுடன் டெல்லி உள்ளது. கொல்கத்தா அணி 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. சன்ரைசர்ஸ் அணி தொடர்ந்து 3 -வது தோல்வியைச் சந்தித்து 6-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
டெல்லி அணி பெற்ற 5 வெற்றிகளில் 4 வெற்றிகள் வெளி மாநில மைதானத்தில் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதிகமான இளம் வீரர்களைக் கொண்ட டெல்லி கேபிடல்ஸ் அணி வழக்கத்துக்கு மாறாக ஒவ்வொரு விக்கெட்டு வீழ்ந்தபோதும் ஒற்றுமையுடன் ஒருவரை ஒருவர் பாராட்டிக்கொள்வதும், கட்டித்தழுவுவதும் என டீம் ஸ்பிரி்ட்டை வெளிப்படுத்தியது அருமையாக இருந்தது.
[Image: delhijpg]வெற்றி மகிழ்ச்சியில் டெல்லி அணியினர் : படம் உதவி ஐபிஎல்
 
ஒரு  புத்துணர்ச்சி மிக்க, மிக இளமையான துடிப்பான அணியைப் போல் காட்சி அளித்தனர். அதற்கு ஏற்றார்போல், மைதானத்துக்கு வெளியே பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், ஆலோசகர் தாதா கங்குலி ஆகியோர் ஒவ்வொரு விக்கெட் வீழ்ந்தபோதும் உற்சாகத்தில் துள்ளிக் குதித்து அணி வீரர்களுடன் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டது கங்குலி மீண்டும் விளையாடிய காலத்தை நினைவுபடுத்தியது.
முதலில் பேட் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் சேர்த்தது. 156 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதர்பாத் அணி 18.5 ஓவர்களில் 116 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது.
ஒரு கட்டத்தில் 101 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்திருந்த  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அடுத்த 15 ரன்களில் 3 ஓவர்களில் மீதமிருந்த 8  விக்கெட்டுகளை இழந்து அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. பந்துவீச்சாளர்களுக்கு எந்தவிதமான சிரமும் வைக்காமல் சன்ரைசர்ஸ் அணி சரணடைந்தது.
சன்ரைசர்ஸ் அணியில் வார்னர், பேர்ஸ்டோ மட்டுமே இரட்டை இலக்கத்தில் ரன்கள் சேர்த்தனர். மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் ஒற்றை இலக்கத்தில் ரன் சேர்த்து வீணாக விக்கெட்டை பறிகொடுத்தனர்.
சன்ரைசர்ஸ் அணியின் விக்கெட் சரிவுக்கு காரணமாக வேகப்பந்துவீ்ச்சாளர் கீமோ பால், ரபாடா, மோரிஸ் ஆகியோர் இருந்தனர். இதில் கீமோ பால் 4 ஓவர்கள் வீசிய 17 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார்.
ரபாடா, 22 ரன்கள் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளையும், மோரிஸ் 22 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் சாய்த்தார்.
சன்ரைசர்ஸ் அணியில் பேர்ஸ்டோ, வார்னர் களத்தில் இருக்கும் வரை அந்த அணியினருக்கு மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கும் வெற்றி பெற்றுவிடுவார்கள் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், இருவரும் ஆட்டமிழந்தபின், வில்லியம்ஸனும் ஏமாற்றினார்.
 அதன்பின் வந்த பேட்ஸ்மேன்கள், தங்களுக்கும், அணிக்கும் தொடர்பே இல்லாத வகையில், வருவதும், பந்தை உயரை தூக்கி அடித்து டெல்லி கேபிடல்ஸ் பந்துவீச்சாளர்களுக்கும் பந்துவீச்சு பயிற்சியும், பீல்டர்களு்ககு பீல்டிங் பயிற்சியும் அளித்துவிட்டுச் சென்றனர்.
[Image: kemojpg]ஆட்டநாயகன் விருது வென்ற கீமோ பால் : படம் உதவி ஐபிஎல்
 
கடந்த சில போட்டிகளாகவே டேவிட் வார்னர் தன்னுடைய ஆரஞ்சு தொப்பை தக்கவைக்கும் விதத்திலேயே கவனம் செலுத்தி விளையாடுகிறார் எனத் தெரிகிறது. டி20 போட்டியில் விளையாடுகிறோம் என்ற நினைப்பு இல்லாமல் பந்துகளை அதிகமாக வீணாக்கி ரன்களைச் சேர்த்தது சன்ரைசர்ஸ் அணியின் ஸ்கோர் மந்தமானதற்கு முக்கியக் காரணமாகும்.
156 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் சன்ரைசர்ஸ் அணி களமிறங்கியது. பேர்ஸ்டோ, வார்னர் நல்ல தொடக்கம் அளித்தனர். ரபாடா, இசாந்த் சர்மா ஓவர்களில் பவுண்டரி. சிக்ஸர்கள் அடித்து பவர்ப்ளே ஓவரில் விக்கெட் இழப்பின்றி 40 ரன்களைச் சேர்த்தனர். படேல் வீசிய 9-வது ஓவரில் வார்னர் சிக்ஸர் , பவுண்டரி விளாசினார்.
கீமோ பால் வீசிய 10-வது ஓவரில் லாங் -ஆன் திசையில் நின்றிருந்த ரபாடாவிடம் கேட்ச் கொடுத்து பேர்ஸ்டோ 41 ரன்களில் ஆட்டமிழந்தார்.  இவர் கணக்கில் ஒருசிக்ஸர், 5 பவுண்டரி அடங்கும். முதல் விக்கெட்டுக்கு 72 ரன்கள் சேர்த்தனர்.
[Image: rajpg]ரபாடாவை கட்டி அணைத்த பிரித்வி ஷா : படம் உதவி ஐபிஎல்
 
அடுத்து வந்த வில்லியம்ஸன் நிலைக்கவில்லை. கீமோ பால் வீசிய 12-வது ஓவரில் மிட்-ஆப் திசையில் நின்றிருந்த ரபாடாவிடம் கேட்ச் கொடுத்து  3 ரன்களில் வில்லியம்ஸன் வெளியேறினார். அடுத்து நிக்கி புகி களமிறங்கினார். அமித் மிஸ்ரா வீசிய 15-வது ஓவரில் கிடைத்த கேட்ச் வாய்ப்பை மிஸ்ரா நழுவ விட்டார்.
16-வது ஓவரை வீசிய கீமோ பால் ஓவரில் படேலிடம் கேட்ச் கொடுத்து புகி 7 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் இருந்துதான் சன்ரைசர்ஸ் அணியின் சரிவு தொடங்கியது.
17-வது ஓவரை ரபாடா வீசினார். முதல்பந்தில் 2 ரன்கள் சேர்த்த வார்னர், 46 பந்துகளில் அரைசதம் அடித்தார். அடுத்த பந்தை தூக்கி அடிக்க அது அய்யர் கையில் கேட்சாக மாறியது. வார்னர் 51 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த விஜய் சங்கர் வந்தவேகத்தில் அடித்து ஆடுவதற்காக ஸ்டிரைட் டிரைவ் ஆடினார். ஆனால், எட்ஜ் ஆகி கீப்பர் ரிஷப் பந்த் கைவசம் புகுந்தது. விஜய் சங்கர் டக்அவுட்டில் வெளியேறினார்.
[Image: morrisjpg]ஒரே ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்திய மோரிஸை பாராட்டும் ரபாடா : படம் உதவி ஐபிஎல்
 
18-வது ஓவரை மோரிஸ் வீசினார். இந்த ஓவரில் 3 விக்கெட்டுகள் மளமளவென சரிந்தன. தீபக் ஹூடா 3 ரன்கள் சேர்த்த நிலையில் மோரிஸ் பந்துவீச்சில் கிளீன் போல்டாகினார். அடுத்துவந்த ரஷித் கான் லெக்சைடில் தூக்கி அடிக்க அது கேட்ச் ஆனது. ரஷித் கான் டக் அவுட்டில் வெளியேறினார். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. கடைசிப்பந்தில் அபிஷேக் சர்மா 2 ரன்களில் கீமோ பாலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஒரே ஓவரில் 3 விக்கட்டுகளை இழந்ததால், சன்ரைசர்ஸ் அணி தோல்வி ஏற்ககுறைய உறுதியானது.
101 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளையும் 112 ரன்களுக்கு 8விக்கெட்டுகளையும் இழந்தது.
[Image: kalel-ahmdjpg]ரபாடா பந்துவீச்சில் போல்டான கலீல் அகமது: படம் உதவி ஐபிஎல்
 
19-வது ஓவரை ரபாடா வீசினார். ஏற்கனவே மின்னல் வேகத்தில் பேட்ஸ்மேன்களை திணறவைத்த ரபாடாவுக்கு டெய்லன்டர்களை வீழ்த்துவது எளிதானதாக இருந்தது. 19-வது ஓவரின் 4-வது பந்தில் புவனேஷ் குமார் 2 ரன்னில் ரபாடாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார், அடுத்த பந்தில் கலீல் அகமது ஸ்டெப்ம் தெறிக்க போல்டாகி வெளியேறினார்.
18.5 ஓவர்களில் 116 ரன்களில் சன்ரைசர்ஸ் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 39 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. டெல்லி கேபிடல்ஸ் தரப்பில் கீமோ பால் 3 விக்கெட்டுகளையும், ரபாடா 4 விக்கெட்டுகளையும், மோரிஸ் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.
முன்னதாக, டாஸ்வென்ற சன்ரைசர்ஸ் அணி டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்ய, டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பேட் செய்தது. டெல்லி அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் பிரித்விஷா(4), தவண்(7) ரன்களில் ஏமாற்றம் அளித்தனர். 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 20 ரன்கள் மட்டுமே சேர்த்து இக்கட்டான நிலையில் இருந்தது. நடுவரிசையில் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர், முன்ரோ நம்பிக்கை அளித்து சரிவில் இருந்து மீட்டனர். பவர்ப்ளே ஓவரில் டெல்லி அணி 2 விக்கெட் இழப்புக்கு 51 ரன்கள் சேர்த்தது. 10 ஓவர்களில் 87 ரன்கள் சேர்த்தது டெல்லி அணி.
முன்ரோ 3 சிக்ஸர்கள் 4 பவுண்டரிகள் என 24 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். ஸ்ரேயாஸ் அய்யர் 5 பவுண்டரிகள் உள்பட 40 பந்துகளில் 45 ரன்கள் சேர்த்தார். ரிஷப் பந்த் 23 ரன்கள் சேர்த்தார். ஸ்ரேயாஸ் அய்யர், பந்த் கூட்டணி 4-வது விக்கெட்டுக்கு 56 ரன்கள் சேர்த்தனர். 125 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்த டெல்லி அணி அடுத்த 27 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்தது குறிப்பிடத்தக்கது. சன்ரைசர்ஸ் தரப்பில் கலீல் அகமது 3 விக்கெட்டுகளையும், புவனேஷ் குமார் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 15-04-2019, 10:45 AM



Users browsing this thread: 71 Guest(s)