15-07-2021, 12:06 AM
(This post was last modified: 15-07-2021, 12:25 AM by Dubai Seenu. Edited 1 time in total. Edited 1 time in total.)
மறுநாள் காலை -
கதிர் வயலுக்கு கிளம்புவானே என்று..... நிஷா அவனுக்கு கஞ்சியில் தயிரை கரைத்து எடுத்து வந்துகொண்டிருந்தாள். அவனோ... எதையோ சீரியஸாக தன்னை மறந்து பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான்.
என்னங்க பார்க்குறீங்க என்றபடியே அருகில் வந்து நின்றாள் நிஷா
இந்த செடியை பார்த்தியா?
அவன் கேட்டதுமே அத்தை இருக்கிறாளா என்று பார்த்துக்கொண்டே அவன் தலையில் கொட்டினாள் நிஷா.
கொழுப்புதானே உங்களுக்கு?
அவன் அவளை குறும்பாகப் பார்த்துக்கொண்டே அந்தச் செடிக்கு முத்தம் கொடுத்தான். என் உயரத்துக்கு வளர்ந்திருச்சில்ல?
நிஷாவுக்கு நாணமாக இருந்தது. பொறுக்கி.. இந்தச் செடியை மட்டும் ஸ்பெஷலாக கவனிக்கிறான்.
அப்போது வாசலில்.. நாய், பாசத்தோடு குழைக்கும் சத்தம் கேட்க... கதிரும் நிஷாவும் வாசலை நோக்கிப் பார்க்க... இருவருமே ஆச்சரியத்தில் கண்களை விரித்தார்கள்.
காயத்ரி நின்றுகொண்டிருந்தாள்.
காயத்ரீ....
நிஷாவுக்கு சட்டென்று கண்களில் கண்ணீர் கட்டிவிட்டது. நம்ப முடியாமல்.. வேகமாக அவளை நோக்கி நடந்துபோனாள்.
அவள் கண்கலங்கி வேகமாக நடந்து வருவதை பார்த்ததும், நிஷாஆஆ என்று ஓடிவந்து அவளை கட்டிப்பிடித்துக்கொண்டாள் காயத்ரி.
மண்டு... ஏண்டி அழுற? என்று காயத்ரியின் தலையில் தட்டினாள் நிஷா
நீதான் அழற!!! - சொல்லிக்கொண்டே காயத்ரி நிஷாவின் மூக்கைப் பிடித்து ஆட்ட, அவளுக்கு சந்தோஷமாக இருந்தது.
என்னடீ இவ்ளோ காலங்காத்தால
நீதான் அழுதிட்டு கிடந்தியாமே
இல்லையே
அந்த பிரின்சிபல் சிறுக்கி அப்படித்தானே சொன்னா
காயத்ரி மூக்கை உறிஞ்சிக்கொண்டே இப்படிச் சொல்ல... நிஷா சிரித்துக்கொண்டே அவளை இழுத்து அணைத்துக்கொண்டாள்.
இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த கதிருக்கு... தப்பு பண்ணிவிட்டோமோ என்று தோணியது. அதற்கேற்றாற்போல் காயத்ரி அவன்பக்கம் திரும்பி, நீங்க இப்படி பண்ணுவீங்கன்னு நான் எதிர் பார்க்கலை கதிர்! என்றாள்.
இல்ல காயத்ரி...
என் மேல தப்புதான். அதுக்கு என் வீட்டுக்கு வந்துகூட என்னை அடிங்க. அதெப்படி நீங்க நிஷாவை என்கிட்டே பேசக்கூடாதுன்னு சொல்லலாம்?
நிஷாவுக்கு ஒருமாதிரியாக ஆகிவிட்டது. ஏய்.. வாயை வச்சிக்கிட்டு சும்மா இருக்க மாட்டியா? என்று காயத்ரியின் கண்ணத்தில் சின்னதாக ஒரு அடி கொடுத்தாள். உனக்கு கல்யாணம் முடிஞ்சிடுச்சி. இனிமே யோசிச்சு பேசணும்! என்றாள்.
போடீ நீ இப்போல்லாம் நிறைய அட்வைஸ் பண்ற
அவளுக்கு ஒழுங்கு காட்டிக்கொண்டே காயத்ரி, நிஷாவின் வயிற்றில் கண்ணம் வைத்து ஒட்டிக்கொண்டு பேச ஆரம்பித்தாள்.
நிஷாவுக்கு இப்போதுதான் நிம்மதியாக இருந்தது. அம்மா எப்படியிருக்காங்க? என்றாள்.
அவங்களுக்கென்ன. சூப்பரா இருக்காங்க. சரி எப்போ டெலிவரி. ஆண் குழந்தையா பெண் குழந்தையா
என்ன குழந்தையா இருக்கும்னு நீ நினைக்கிற?
கண்டிப்பா பெண் குழந்தைதான்
எப்படி சொல்ற?
நீதான் ஒரு புள்ளையையும் விடாம இழுத்துப் பிடிச்சி கொஞ்சிக்கிட்டு அலைவியே!!
நிஷா மனம்விட்டு சிரித்தாள்.
மாதங்கள் கடகடவென்று ஓடின. காயத்ரி சொன்னதுபோலவே...
பத்து மாதங்கள் கழித்து...
நிஷா ஒரு அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள்.
நிஷாவின் சுகப் பிரசவம் அனைவருக்குமே ஒரு இனிப்பான செய்தியாக இருந்தது. குடும்பமே சந்தோஷத்தில் திளைத்தது.
தன் பல வருட கனவு... ஆசை நிறைவேற... நிஷா, கண்களில் திரண்ட கண்ணீரோடு தன் குழந்தையை தூக்கி அணைத்து முத்தமிட்டாள். கண்ணீர் மல்க தன் கணவனைப் பார்த்தாள். இப்படி ஒரு கோலத்தில்... இப்படி ஒரு சந்தோஷமான நேரத்தில் நிஷாவை பார்க்கவேண்டும் என்று ஏங்கிக்கொண்டிருந்த கதிர், அன்போடு அவள் தலையை கோதிவிட்டான். அவள் கண்ணீரை துடைத்து விட்டான்.
தன் தேவதை கொடுத்த குட்டி தேவதையை.. ஆசையோடு கைகளில் ஏந்திக்கொண்டான்.
நிஷா வேகம் வேகமாக தலையை திருப்பி தன் அப்பாவையும் அம்மாவையும் தேடினாள். அவர்கள் முன்னால் வந்து நின்றதும், கண்ணீர் மல்க, கதிரின் கையிலிருந்த தங்கள் குழந்தையைக் காட்டினாள்.