14-12-2018, 05:37 PM
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பேட்ட பத்மாவும் அஜித்தின் விஸ்வாசம் படமும் பொங்கல் ரேஸில் மோதி கொள்ள உள்ளன.பேட்ட படத்தின் பாடல்கள் அனைத்தும் சமீபத்தில் வெளியானது, அதே போல் விஸ்வாசம் படத்தில் இருந்து அடிச்சு தூக்கு என்ற பாடலும் வெளியானது.இதனால் பேட்ட படத்தில் இருந்து முதலில் வெளியான மரண மாஸ் மற்றும் விசுவாசத்தின் அடிச்சு தூக்கு பாடல் ஆகியவற்றில் உங்களது அதிகம் கவர்ந்தது எது? என கருத்து கணிப்பு நடத்தப்பட்டது.ட்விட்டரில் நடத்தப்பட்ட கருத்து கணிப்பில் 59% ஓட்டுகளுடன் அடிச்சி தூக்கு பாடல் முதலிடத்தை பிடித்துள்ளது. பேட்ட பாடல் 35 % மாரி படத்தின் பாடல் 6% ஓட்டுகளும் பெற்றுள்ளன.ஆனால் பேஸ்புக் பக்கத்தில் நடத்தப்பட்ட ஓட்டெடுப்பில் மரண மாஸ் பாடல் 54% ஓட்டுகளையும் அடிச்சு தூக்கு பாடல் 46 % ஓட்டுகளையும் பெற்றுள்ளது


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)