08-07-2021, 10:51 PM
சென்னையில்-
ராஜ் கேசுவல் ட்ரெஸ்ஸில் வெளியே கிளம்பிக்கொண்டிருக்க.. என்ன விஷயம் என்று கேட்டார் மோகன்.
ஊர்ல நிஷா ஆசைப்படி ஹாஸ்பிடல் கட்ட ஏற்பாடு பண்றோம்ல. அதுக்கு அப்ப்ரூவல் கிடைக்கிறதுல ஒரு சின்ன சிக்கல். இதுல சுவாரஷ்யமான விஷயம் என்னன்னா அந்த அப்ரூவல் கமிட்டில உள்ளவரு கண்ணனோட நண்பராம். வேற பெட்டர் ஆப்ஷன் இருக்கிறமாதிரி தெரியல.
அவர்கிட்ட எப்படிப்பா உதவின்னு போய் நிக்குறது?
அவர் நிஷா நல்லாயிருக்கணும்னு நினைக்கிறவர். இது நிஷாவோட விருப்பமனு தெரிஞ்சா... கண்டிப்பா ஹெல்ப் பண்ணுவார்
ராஜ் நம்பிக்கையோடு கிளம்பிப் போனான். மழையில்.. கார் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. நிஷாவும் கண்ணனும் மணக்கோலத்தில் நின்ற காட்சி..... நிஷாவும் அவரும் பிரிந்த காட்சி... என்று ஒவ்வொன்றாக ஞாபகம் வந்து அவனை இம்சை பண்ணிக்கொண்டிருந்தது. ஒருவழியாக வீட்டை அடைந்து காலிங்க் பெல்லை அடித்தான்.
கண்ணன்தான் கதவை திறந்தார். இவனைப் பார்த்ததும், முகத்தில் சிரிப்பில்லாமல் எதுவும் பேசாமல் திரும்பி உள்ளே பார்த்தார். உள்ளே பெரிய கூட்டமே உட்கார்ந்திருந்தது.
காவ்யா, காவ்யாவின் தங்கை அகல்யா மற்றும் அவளது கணவன் அவினாஷ், கண்ணனின் தந்தை மாணிக்கம் மற்றும் அவரது மனைவி, காவ்யாவின் அம்மா...
கண்ணன் இவனை வரவேற்பதா வேண்டாமா என்று தயங்கி நிற்க, வாங்க அண்ணா.. என்று முகம் நிறைய சிரிப்போடு உள்ளேயிருந்து குரல் கொடுத்தாள் காவ்யா.
என்னங்க.. அண்ணனை உட்காரச் சொல்லுங்க
ராஜ்க்கு அப்போதுதான் நிம்மதியாயிருந்தது. வா ராஜ்.. என்றபடியே கண்ணன் உள்ளே போக, அவன் அவர் பின்னால் போனான்.
மாணிக்கம் காவ்யாவைக் கோபமாகப் பார்த்துவிட்டு வேறு அறைக்குள் போய்விட்டார். அகல்யா உள்ளே ஓடிப்போய் சூடாக டீ போட்டாள்.
ராஜ், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த காவ்யாவிடம் நலம் விசாரித்துவிட்டு, தான் வந்த விஷயத்தை சுருக்கமாகச் சொன்னான்.
கண்ணன் யோசித்துக்கொண்டிருந்தார்.
இது நிஷாவோட நீண்ட நாள் விருப்பம்... என்று இழுத்தான் ராஜ்.
கண்ணன், ஓகே நான் பண்றேன் என்றார்.
வயிற்றை தடவிக்கொண்டு... கால் நீட்டி உட்கார்ந்திருந்த காவ்யாவை பார்த்து... கேட்டான்.
எப்போ டெலிவரி டேட் சொல்லியிருக்காங்க?
இன்னும் 20 டேஸ் கழிச்சி
எந்த ஹாஸ்பிடல்
அவள் சொன்னாள்.
சரி நான் போயிட்டு வரேன்.
ராஜ் கிளம்ப.. அகல்யா ஓடி வந்தாள். இந்தாங்க டீ குடிச்சிட்டுப் போங்க.
நீ என்னம்மா பண்ற?
நெக்ஸ்ட் வீக் ஒரு கம்பெனில ஜாயின் பண்றேன்
அந்த ஜாப் சப்போஸ் செட் ஆகலைன்னா என் கம்பெனில நான் ஒரு நல்ல ஜாப் உனக்கு அரேஞ்ச் பண்றேன். சரியா?
தேங்க்ஸ்ணா
ராஜ், காவ்யாவையும் கண்ணனையும் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டான். போயிட்டு வர்றேன் கண்ணன்...வரேன்மா... என்று கிளம்பினான்.