08-07-2021, 10:50 PM
சீனு, காயத்ரியோடு தன் வீட்டுக்குள் நுழைய... பார்வதி, தன் மருமகள் எப்படியிருப்பாள் என்று பார்க்கும் ஆவலில்.. ஓடி வந்தாள்.
வெளியே மழை கொட்டிக்கொண்டிருந்தது. மழையின் அந்த இரைச்சலில்... பார்வதி காயத்ரியைப் பார்த்தாள்.
ஆஹா மூக்கும் முழியுமாக.. அழகாகத்தான் இருக்கிறாள்.
நிஷாவோட தோழிம்மா... நான் ஸ்கூல்ல பார்த்திருக்கேன். பழக்கம். இப்போ வாழ்க்கையை பறிகொடுத்துட்டு நிக்குறாங்க. அதான்... ஸாரிம்மா. உங்ககிட்ட கேட்காம.....
பொண்ணு நல்லாயிருக்கா. குணத்துக்கு... நிஷாவோட தோழின்னு சொன்னியே அதுவே போதும்யா. உன் விருப்பம்தான்யா எங்களுக்கும். ஆனா... சித்ரா பாவம் இல்லையா. அவ மனசு எவ்ளோ கஷ்டப்படும்
அவன், பார்வதியை சமாதானப்படுத்தினான். அப்பா அம்மா இருவரையுமே கல்யாணத்துக்கு சம்மதிக்க வைத்தான்.
இங்கே -
காயத்ரியின் அம்மாவை சென்னையில் கொண்டு விடுவதற்காக கதிர் கிளம்பிக்கொண்டிருந்தான்.
நிஷா கோபத்தின் உச்சத்தில் இருக்க... கதிர் அவளை சமாதானப்படுத்தினான்.
விடு நிஷா. விதி. யார், யார்கூட சேரணுமோ அதுப்படிதான் நடக்கும்
இல்ல கதிர். அது வந்து..... ச்சே..
நிஷா சொல்ல முடியாமல் தவித்தாள்.
காயத்ரி... நீ பெரிய இடத்துல வாழ வேண்டியவடி.... இப்படி போய்...
எப்படி இதை தடுப்பது என்று இவள் யோசித்துக்கொண்டிருக்க.. அங்கே சீனு, நிஷா எந்த நேரத்திலும் காயத்ரியின் மனதை மாற்றிவிடுவாள் என்பதை உணர்ந்திருந்தான். மழை என்றாலும் பரவாயில்லை. உடனே திருமணம் என்றான்.