14-12-2018, 05:24 PM
இரண்டாவது டெஸ்ட்டின் முதல்நாள் உணவு இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி விக்கெட் இழப்பின்றி 66 ரன்கள் குவித்துள்ளது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்த ஆஸ்திரேலியா நிதான ஆட்டத்தையே தொடர்ந்தது. இந்திய வீரர்கள் விக்கெட்டை வீழ்த்த முயற்சிகள் பலனளிக்காமல் போனது. பின்ச் 28 ரன்களுடனும், மார்க்கஸ் 36 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.இரண்டாவது டெஸ்ட்டின் முதல்நாள் தேநீர் இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் குவித்துள்ளது. டாஸ் வென்று பேட்டிங்கை தேர்ந்தெடுத்த ஆஸ்திரேலியா உணவு இடைவேளை வரை விக்கெட்டை இழக்காமல் இருந்தது. ஆனால் உணவு இடைவேளைக்கு பின் இந்திய வீரர்கள் மேலும் துல்லியமாக பந்துவீசினர். துவக்க வீரர்கள் பின்ச்,மார்க்ஸ் இருவரும் அரைசதமடித்தனர். பின்ச் 50 ரன்களிலும், மார்க்ஸ் 70 ரன்களிலும் முறையே பும்ராஹ் மற்றும் விஹாரி பந்தில் ஆட்டமிழந்தனர்.உஸ்மான் கவாஜா இந்த போட்டியிலும் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். இந்திய தரப்பில் விஹாரி, உமேஷ், பும்ராஹ் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸி வீரர்கள் திணறி வருகின்றனர். ஷான் மார்ஷ் 8 ரன்களுடனும், ஹேண்ட்ஸ்கோம்ப் 4 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.தேநீர் இடைவேளையின் போது ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் குவித்திருந்த ஆஸ்திரேலியா. ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஹேண்ட்ஸ்கோம்பை இழந்தது. பின்னர் ஓரளவுக்கு சுதாரித்து ஆடிய மார்ஷ் மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் இணைந்து 84 ரன்கள் குவித்தனர். பின்னர் இருவரும் விஹாரி மற்றும் இஷாந்த் ஷர்மா பெவிலியன் திரும்ப, ஆஸ்திரேலியா ஏற்படுத்தி வைத்திருந்த வலுவான தொடக்கம் வீணானது. சிறப்பாக ஆடிய ஹெட் 58 ரன் குவித்து வெளியேறினார்.ஆட்ட நேர இறுதியில் ஆஸ்திரேலியா 6 விக்கெட்டுகளை இழந்து 277 ரன்கள் குவித்துள்ளது. ஆஸ்திரேலிய தரப்பில் பெய்ன் 16 ரன்களுடனும், கம்மின்ஸ் 11 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்திய தரப்பில் இஷாந்த், விஹாரி தலா 2 விக்கெட்டுகளையும், உமேஷ், பும்ராஹ் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.ஒரு கட்டத்தில் 400 ரன்கள் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆஸி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை இழந்து தவித்து வருகிறது.