14-12-2018, 05:24 PM
அந்தப் பந்தை தொட்டிருக்கத் தேவையில்லை, ஆனால், ஹேண்ட்ஸ்கம்ப் தேவையில்லாமல் பேட்டில் தொட்டுவிட அது 2-வது ஸ்லிப்பில் நின்றிருந்த விராட் கோலி நோக்கிச் சென்றது.ஆனால், விராட் கோலி பிடிக்க முடியாத தொலைவுக்கு சென்றது. ஆனால், யாரும் எதிர்பாராத நேரத்தில் அந்தரத்தில்பறந்த விராட் கோலி அதை லாகவமாகப் பிடித்து ஹேண்ஸ்ட்கம்பை ஆட்டமிழக்கச்செய்தார். இந்த கேட்ச்சை விராட் கோலி பிடிக்கமாட்டார் என்று எதிர்பார்த்திருந்த ஹேண்ட்ஸ்கம்ப் கேட்ச் பிடிக்கப்பட்டவுடன் ஏமாற்றத்துடன் வெளியேறினார்.அதேபோல, 5-வது விக்கெட்டுக்கு மார்ஷை ஆட்டமிழக்கச் செய்ய ரஹானே பிடித்த கேட்சும் பாராட்டும் விதத்தில் இருந்தது. 45 ரன்களுடன் மார்ஷ் வலுவாக நின்றிருந்த நேரத்தில் இந்த கேட்ச் திருப்புமுனையாக இருந்தது.
ஹனுமா விஹாரி வீசிய 77-வது ஓவரின் கடைசி பந்து திடீரென டர்ன் ஆகி எகிறியது இதனால், ஸ்லிப் திசையில் தட்டிவிட்டார். முகத்துக்கு நேராக வந்த பந்தை ரஹானே அருமையாகப் பிடித்து மார்ஷை ஆட்டமிழக்கச்செய்தார்.முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 277 ரன்கள் சேர்த்துள்ளது. கம்மின்ஸ் 11 ரன்களிலும், பெய்ன் 16 ரன்களிலும் களத்தில் உள்ளனர்.
இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த்தில் துவங்கியது. டாஸில் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது. முதல் டெஸ்ட்டில் ஆடிய அதே அணியே இரண்டாவது டெஸ்டிலும் தொடரும் என்று ஆஸ்திரேலிய கேப்டன் பெய்ன் தெரிவித்தார். இந்திய அணியை பொறுத்தமட்டில் முதல் டெஸ்ட்டுக்கு பின் காயம் காரணமாக வெளியேறிய ரோஜித் மற்றும் அஷ்வினுக்கு பதிலாக விஹாரி மற்றும் உமேஷ் யாதவ் அணியில் இடம்பெற்றுள்ளனர்.டாஸுக்கு பிறகு பேசிய கோலி இந்தியாவும் பேட்டிங் செய்யவே நினைத்தது. இருந்தாலும் வேகப்பந்துக்கு சாதகமான பெர்த்தில் 4 வேகப்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்குவதால் பிரச்சனை இல்லை என்றார். பின்ச் மற்றும் மார்க்கஸ் ஆட்டத்தை துவங்கியுள்ளனர்.இந்திய அணி காயத்தால் பெரிதும் அவதிப்பட்டு வருகிறது. இந்திய சுழற்பந்துவீச்சாளர் அஷ்வினும், முன்னணி பேட்ஸ்மேன் ரோஹித் ஷர்மாவும் காயத்தால் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடமட்டார்கள் என அணி நிர்வாகம் ஏற்கெனவே அறிவித்திருந்தது. மேலும் காயம் காரணமாக முதல் டெஸ்டில் இடம்பெறாத இளம் வீரர் ப்ரித்வி ஷா இன்னும் குணமடையாததால் இந்த டெஸ்ட்டிலும் இடம்பெறவில்லை.முதல் டெஸ்ட்டை இந்தியா 31 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.அணி விவரம்:இந்தியா:விராட் கோலி(கேப்டன்), விஜய், புஜாரா, ராகுல், ரஹானே, விஹாரி, பன்ட், இஷாந்த் ஷர்மா, ஷமி, பும்ராஜ், உமேஷ் யாதவ்ஆஸ்திரேலியா:மார்கஸ் ஹாரிஸ், பின்ச், கவாஜா, ஷான் மார்ஷ், ட்ராவிஸ் ஹெட், ஹாண்ட்ஸ்கோம்ப், டிம் பெய்ன்(கேப்டன்), ஹேசல்வுட், கம்மின்ஸ், நாதன் லயன், ஸ்டார்க்.