13-04-2019, 11:47 AM
(This post was last modified: 13-04-2019, 11:48 AM by johnypowas. Edited 1 time in total. Edited 1 time in total.)
அத்தியாயம்:14
பூம்பொழில் டைரியிலிருந்து:
இப்பொழுதெல்லாம் ஜெய் நான்றாக படிக்க ஆரம்பித்து விட்டான்.நான் சொன்னதை மனதில் வைத்து படித்ததால் தான் அவன் இந்த நிலைமைக்கு வந்ததாக அடிக்கடி கூறுவான்.ஆனால் அவனுக்குள் இருக்கும் தன்னம்பிக்கை தான் அதற்கு காரணம் என்பது அவனுக்கு தெரியவில்லை.காலாண்டு தேர்வு நடந்தது.தேர்வுக்கு முன்பு ஒரு பவுண்டைன் பேனா அவனுக்கு கொடுத்தேன்.ஒவ்வொரு exam முடிந்ததும் என்னிடம் வந்து எப்படி எழுதனான் என்பதை கூறுவான்.நான் அவனுக்கு சில விஷயங்களை சொல்லி கொடுத்தேன்.அவனும் நன்கு புரிந்து கொண்டு படிக்க ஆரம்பித்தான்.அதன் விளைவாக காலாண்டு தேர்வில் அவன் வகுப்பில் சிறந்த மாணவனாக தேர்ந்திருந்தான்.எனக்கு மிகுந்த சந்தோசம் அவன் என்னை கட்டியணைத்து முத்தம் கொடுத்து மிகுந்த சந்தோசப்பட்டான்.
இதற்கெல்லாம் காரணம் நான்தான் என் என்னை கூட்டி சென்று ஹோட்டலில் டிரீட் கொடுத்தான் இருவரும் படம் பார்க்க தியேட்டருக்கு சென்றோம்.படம் பார்த்து விட்டு வரும் போது "உனக்கு ஒண்ணு வாங்கி வச்சிருக்கேன்"என்றான்.
நான் என்ன என்பது போல் பார்க்க அவன் புத்தக பையில் இருந்து ஒரு பார்சலை எடுத்து என் கையில் கொடுத்து பிரித்துபார்க்க சொன்னான்.நான் அதை பிரித்தேன் அதில் ஒரு கேமரா மொபைல் இருந்தது.நான் ஆச்சரியபட்டு கொண்டே "எனக்கா"என கேட்டேன்.அவன் தலையாட்டினான் அதற்கு நான் "ஏய் ரொம்ப விலை அதிகமா இருக்கும் போலிருக்கே"என்றேன்.
அவன் அப்பா பாக்கெட் மணியில் சேர்த்தது என்றான்.நான் "இவ்வளவு பணம் கொடுத்து இதை ஏன் வாங்கினே"என்று கடிந்தேன்.அதற்கு அவன் என் இடுப்பை சுற்றி வளைத்து கொண்டு"உன்னை விட எனக்கு எதுவும் பெரிசில்லை"என்றான்.அந்த கணமே என் உயிர் போனாலும் கவலை இல்லை என தோன்றியது.
வாழ்க்கையில் ஒரு பெண் அன்பிற்காக ஏங்கி நிற்கும் தருவாயில் அவள் மீது ஒரு ஆண் அன்பு செலுத்தினால் அவள் உயிரே போனாலும் அவனை பிரியகூடாது என நினைப்பாள் அதே எண்ணம்தான் என்னுள்ளும் ஏற்பட்டது அவன் கைகளை மேலும் இறுக்க பற்றி கொண்டேன்.உலகமே எதிர்த்தாலும் அவன் கைகளை விடக்கூடாது என நினைத்து கொண்டேன்.
அத்தியாயம்:15
[b]பூம்பொழில் இல்லாத வாழ்க்கையை என்னால் நினைத்து கூட பார்க்க முடியாது என்கின்ற எண்ணத்திற்கு நான் வந்துவிட்டேன்.அந்த அளவிற்கு என் வாழ்வினை செதுக்கினாள் அவள்.எப்பொழுதும் வகுப்பில் கடைசி மாணவனாக வரும் நான் இப்பொழுது HALF YEARLY EXAM ல் அனைத்து பாடங்களிரலும் 95 PERCENT உடன் முதல் மாணவனாக வந்தேன்.இவ்வளவு குறுகிய கால கட்டத்தில் நான் முன்னேறியதை பார்த்து அனைவரும் ஆச்சரியபட்டனர் அனைவரும் பாராட்டினர் ஒருவனை தவிர வினோத். அவன் இப்பொழுதெல்லாம் என்னுடன் சரியாக பேசுவதே இல்லை."ஆமாம்","இல்லை " போன்ற வார்த்தைகளையே பெரும்பாலும் உபயோகித்தான்.நான் மனம் வருந்தினேன்.ஆனால் சீக்கிரம் சரியாகிவிடுவான் அவனுக்கு என்ன கஷ்டமோ என நினைத்து கொண்டு மனதை தேற்றிகொள்வேன்.ஆனாலும் அவன் மாறவே இல்லை.இருப்பினும் பூம்பொழில் அந்த கவலையெல்லாம் மறக்கடித்தாள்.குழந்தை தனமான அவள் பேச்சு,வகுப்பறையில் பாடம் நடத்தும் போது பார்க்கும் ஓரக்கண்ணால் பார்வை,இனிமையான அவள் அருகாமை என்னை வேறோரு உலகத்திற்கு கொண்டு போய் இருந்தது.அவள் என்ன கூறினாலும் செய்யும் நிலையில் இருந்தேன் நான்.
அவளுக்கு ஒரு மொபைல் வாங்கி தந்தேன்.இப்பொழுதெல்லாம்அவள் குரலை கேட்டு கொண்டே இருக்க வேண்டும் போல் இருந்தது எனக்கு.என் வாழ்க்கை இனிமையாக போய் கொண்டிருந்த சமயம் ஒருநாள் கிளாஸில் நான் இருக்கும் போது அவள் அவசர அவசரமாக உள்ளே வந்தாள்"ஜெய்,நீ உடனே ஸ்டாப் ரூமிற்கு வா"என்று கூறிவிட்டு சென்றாள்.நானும் ஏன் இவ்வளவு பதட்டமாக கூப்பிடுகிறாள் என்று நினைத்தபடி அவள் பின்னாலே சென்றேன்.உள்ளே நுழைந்ததும் "ஜெய் நீ கிரிக்கெட் நல்லா ஆடுவியாமே அப்படியா! "என்றாள்.
உங்களிடம் என்னை பற்றி சொன்னேன்,என் குடும்பத்தை பற்றி சொன்னேன் என் காதலை பற்றி சொன்னேன்.ஆனால் ஒன்று கூற மறந்துவிட்டேன்.ஆம்! நான் ஒரு கிரிக்கெட்டர் கிரிக்கெட் என்றாள் எனக்கு உயிராக இருந்தது இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆனால் சங்கீதா,சங்கீதாவை உங்களுக்கு நன்றாக தெரியும் அவள் இப்பொழுது உயிரோடு இல்லை என்பதும் உங்களுக்கு தெரியும்.அவள் இறந்ததிலிருந்து என்னால் ஒரு சிறிய கோப்பை கூட இந்த பள்ளிக்கு கிடைக்க கூடாது என்ற விரக்கதியில் நான் கிரிக்கெட் ஆடுவதையே விட்டுவிட்டேன்.அப்பொழுது நான் சீனியர் டீம் கேப்டனாக இருந்தேன்.இரண்டு வருடங்களுக்கு முன்பு என் கனவே state level cricet மேட்ச் WIN பண்ணுவதாக இருந்தது.அரையிறுதி வரை சென்றுவிட்டோம்.ஆனால் சங்கீதா இறந்துவிட்டதால் இறுதி போட்டியில் நான் விளையாட வில்லை அதனால் இறுதிபோட்டியில் எங்கள் அணி படு கேவலமா தோல்வியடைந்தது.அதன் பிறகு நானும் கிரிக்கெட் விளையாடுவதை விட்டுவிட்டேன்.அவள் இறந்ததற்கு காரணம் இப்பொழுது பி.டி டீச்சராக இருக்கும் மந்தாகினி.அதன் பிறகு ஒருமுறை கூட ஒரு ZONAL மேட்ச் கூட வெற்றி பெற்றதில்லை எங்கள் பள்ளி.[/b]
ஆனால் இப்பொழுது எதற்காக இதை கேட்கிறாள் என்ற யோசனையில் "ஆமாம் விளையாடுவேன்.ஆனால் இப்பொழுதெல்லாம விளையாடுவதில்லை"என்றேன்.
அவள் "ஏன்.,?"என கேட்டாள்.
அவளோ"சரி..அதை விடு,நம்ம ஸ்கூல் கலந்துக்குற ஸ்டேட் லெவல் மேட்ச்சில நீ கலந்துக்கனும் னு நான் நினைக்கிறேன்"என்றாள்.
நான் கோபமாக"என்ன.. உன் தோழி உன்னை தூது அனுப்பினாளா "என கத்தினேன்.
அவள் பொறுமையாக "ஏன்..இப்படி கத்துற அமைதியா பேசு.அவ உன்னை கலந்துக்க சொல்லி என் கிட்ட கேக்கல ஆனா நீ கலந்துகிட்டா நல்லாயிருக்கும்னு சொன்னா,உனக்குள்ள ஒரு நல்ல திறமை இருக்கும் பொழுது அதை ஏன் வேஸ்ட் பண்ணுற"என்றாள்.
"அவ நினைப்பெல்லாம பலிக்காது.தயவு செய்து இனி இதைபற்றி என்கிட்ட பேசி எனக்கு உன் மேல் வெறுப்பு ஏற்பட வெச்சுடாத"என கூறிவிட்டு வேகமாக ஸ்டாப் ரூமை விட்டு வெளியேறினேன்