Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
ஊட்டியில் மழை : விவசாயிகள் மகிழ்ச்சி



2019-04-10@ 11:48:44
[Image: Tamil_News_Apr_2019__407055079936982.jpg]
ஊட்டி: ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு சில மணி நேரம் மழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.  நீலகிரி மாவட்டத்தில் கடந்த இரு மாதங்களாக பனி குறைந்த வெயில் வாட்டி வந்தது. பகல் நேரங்களில் மட்டுமின்றி, இரவிலும் கூட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பம் காணப்பட்டது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். மேலும், வனப்பகுதிகள் காய்ந்து போன நிலையில், அங்காங்கே காட்டு தீ ஏற்பட்டு வந்தது. மேலும், நீர் நிலைகளில் தண்ணீர் இன்றி வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீரை தேடி அலைந்துக் கொண்டிருகின்றன. போதிய தண்ணீர் வசதி இன்றி  மேடுபாங்கான பகுதிகளில் விவசாயமும் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில், கடந்த இரு நாட்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் சற்று  குறைந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் வானம் மேக மூட்டத்துடன்  காணப்பட்டது. 

ஊட்டியில் மாலை நேரங்களில் குளிர் காற்று வீசி வந்தது. கடும் வெயிலின் காரணமாக புழுக்கத்தை அனுபவித்து வந்த சுற்றுலா பயணிகளுக்கு  இந்த காலநிலை மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மழை கொட்டியது. வெகு நேரம் பெய்யவில்லை என்றாலும், சுமார் ஒரு மணி  நேரத்திற்கு மேல் மிதமான மழை பெய்தது. இதனால், புழுக்கம் சற்று குறைந்துள்ளது. அதே சமயம் சாலைகளில் இருந்த புழுதிகளும் குறைந்தது. தொடர்ந்து ஓரிரு நாட்கள் மழை பெய்தால், மாவட்டம் முழுவதும் உள்ள குடிநீர் ஆதாரங்களில் தண்ணீர் அளவு உயரவும், அதே சமயம் காட்டு தீயும் சற்று கட்டுக்குள் வர வாய்ப்புள்ளது. விலங்குகள் தண்ணீருக்காக இடம் பெயருவது சற்று குறையும். நேற்று முன்தினம் பெய்த மழையால் விவசாயிகள் மற்றும்  பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 13-04-2019, 10:52 AM



Users browsing this thread: 102 Guest(s)