நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#84
தலைவலி.”

ஒற்றை வார்த்தையாய் பதில் சொன்னான்.
“இருண்ணா. அம்மா உன் கார் சத்தம் கேட்ட உடனே சமையல் அறைக்குப் போனாங்க. உனக்கு குடிக்க சூடா ஏதாவது கொண்டு வருவாங்க. நீ குடிச்சுட்டுப் போய் ஓய்வெடுத்துக்கோ.”
அக்கறையாய் சொன்னவனை மறுக்க முடியாமல் அவனருகே வந்து அமர்ந்தான்.

வனிதாமணி மகேந்திரனுக்கும் சாருலதாவிற்கும் தேநீர் கொண்டு வந்து கொடுத்தார்.

சுக்கு தட்டிப் போட்ட அந்த பானம் தலைவலி நேரத்தில் குடிப்பதற்கு இதமாக இருந்தது.

குடித்த பிறகு தனது அறைக்குப் போய் விட்டான்.

“என்ன யுகேந்திரன்? நீ மட்டும் தனியா உட்கார்ந்திருக்கே? உன் கிருஷ் இன்னும் வரலை?”

குரலில் குத்தல் தெறிக்க கேட்டாள்.

“அவளுக்குத் தெரிந்த யாரோ வந்திருக்கிறார்களாம். பார்த்துவிட்டு வரதா சொல்லியிருக்கா.”

அவளுக்கு அப்பாடா என்றிருந்தது.

மகேந்திரன் அங்கே அமர்ந்திருக்கும்போதே அந்தக் கேள்வியை அவன் முன்னே கேட்க வேண்டும் என்று அவள் வாய் துறுதுறுத்தது.

அவளுக்கு என்னவோ கிருஷ்ணவேணியை அறவே பிடிக்கவில்லை.

முன்பு அவன் யுகேந்திரனைக் கட்டிக்கொண்டாள் எனக்கு என்ன என்று தோன்றியது. இப்போது அவனுக்காகக் கூட அவள் இங்கே இருக்க கூடாது என்று தோன்றுகிறது.
மகேந்திரனின் பார்வையில் அவளை கெட்டவளாகக் காட்டிவிட்டால் பிறகு அவனே அவளை வெளியேற்றிவிடுவான்.
அவனது பேச்சை மீறி மற்றவர்கள் எதுவும் செய்ய மாட்டார்கள்.

அந்தக் குடும்பத்தில் மகேந்திரனின் பேச்சிற்கு எந்த அளவிற்கு மரியாதை இருக்கும் என்று அவளுக்குத் தெரியும்.

அன்றைய இரவு உணவு முடித்து தனது அறைக்குத் திரும்பியவனிடம் வேலை மெனக்கெட்டுப்போய் பேச்சுக் கொடுத்தாள். கிருஷ்ணவேணி அன்றைய இரவு சாப்பிட வரவில்லை.

ரொம்ப முக்கியமான ஆள் வந்திருக்கிதாகவும் அதனால் தான் தாமதமாக வருவதாகவும் வீட்டுக்கு தகவல் சொன்ன கிருஷ்ணவேணி தாமதமாகதான் சாப்பிட்டுவிட்டு வந்தாள் என்ற மிக முக்கியமான தகவலை மகேந்திரனிடம் சொன்னால்தான் தனக்கு அன்றைய இரவு உறக்கமே வரும் என்று அவள் முடிவெடுத்து சொல்லிவிட்டுத்தான் சென்றாள்.

அதுவும் அந்த முக்கியமான ஆள் ஆணா? பொண்ணா? என்று எதையும் கிருஷ்ணவேணி வீட்டாருக்குத் தெரிவிக்கவில்லை என்ற அதிமுக்கியமான தகவலையும் சேர்த்தே சொல்லிவிட்டுச் சென்றாள்.

படுக்கையில் வந்து விழுந்தவனுக்கு அன்றும் உறக்கம் வருமா? என்ற சந்தேகம்தான்.

மனதிலே கிருஷ்ணவேணியின் தோளில் உரிமையாய் கைபோட்டு காரில் ஏற்றிக்கொண்டு சென்ற அந்த ஆணழகன் யார்? என்ற கேள்விதான் முதன்மையாய் இருந்தது.

கிருஷ்ணவேணி எப்படிப்பட்டவள்?
அவள் எப்படியிருந்தாலும் தம்பி ஏற்றுக்கொண்டுவிடுவான் என்று அவனுக்குப் புரிந்தது. ஆனால் அவனால் ஏற்றுக்கொள்ள முடியாது.
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 12-04-2019, 10:57 AM



Users browsing this thread: 22 Guest(s)