நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#83
என்னமோ ராத்திரி முழுவதும் நீதான் ஓட்டினது போல் சொல்றே? உன் அண்ணாதானே பாதி நேரம் ஓட்டிட்டு வந்தார். இப்ப அவரே எழுந்து வந்துட்டார் தெரியுமா?”

“அப்படியா? அவன் மனுசனே கிடையாது கிருஷ். ஒரு இயந்திரம். அவனுக்கெல்லாம் தூக்கமே வராது. தயவுசெய்து என்னைக் கொஞ்ச நேரம் தூங்க விடேன்.”
“டேய்- நீ தூங்கறதுக்காக வகுப்பு நடக்காம இருக்குமா
“ப்ளீஸ். ப்ளீஸ். நான் தூங்கறேன்.”

அவன் மீண்டும் தூங்க ஆரம்பித்துவிட்டான்.

இனி அவன் இப்போதைக்குக் கிளம்ப மாட்டான் என்று புரிய அவள் மட்டும் அன்று கல்லூரிக்குக் கிளம்பினாள்.

கேந்திரனுக்கு தலையை வலிக்க ஆரம்பித்துவிட்டது. முக்கியமான வேலை இருந்ததால்தான் காலையில் எழுந்து வந்துவிட்டான்.

முந்தைய நாள் இரவு முழுவதும் உறங்காமல் இருந்தது அவனை சோர்வடையச் செய்தது.

வந்த வேலையை முடித்துவிட்டுக் கிளம்பவே மதியத்திற்கு மேல் ஆகிவிட்டது.

இன்று யுகேந்திரன் கல்லூரிக்குச் செல்லாமல் கிருஷ்ணவேணி மட்டும் சென்றது அவன் நினைவிற்கு வந்தது.

அப்படியே அவளையும் அழைத்துச்சென்று விடலாமா? என்று அவன் மனதில் தோன்ற உன்னை திருத்தவே முடியாதா? என்று தன்னைத்தானே திட்டிக்கொண்டான்.

அவன் கிளம்புவது தெரிந்து சாருலதாவும் வந்து ஒட்டிக்கொண்டாள். அப்போது அவளுக்கு ஏதோ அழைப்பு வர எடுத்துப் பேசினாள்.

அவனுக்கு எரிச்சலாய் வந்தது. உறவுக்காரி என்று எந்த அளவிற்கு அவளைப் பொறுத்துக்கொள்வது?

தான் வேலை செய்பவள் என்று என்றைக்காவது நினைத்துப் பார்க்கிறாளா?
என்னவோ பொழுது போக்கிற்காக வேலைக்கு வருவது போல் அவன் கிளம்பிய உடனே தானும் கிளம்பி விடுகிறாளே?
கிருஷ்ணவேணியின் கல்லூரிக்குச் செல்லும் முடிவைத் தவிர்த்துவிட்டு வீட்டுக்குப் போகும் வழியில் காரை விடப்போனவனை தடுத்தாள் சாருலதா.

“ஏன்?”

“இல்லை. இன்னிக்கு யுகேந்திரன் வரலை. கிருஷ்ணவேணி மட்டும் வந்திருக்கிறாள். அவளையும் அழைத்துச்சென்றுவிடலாமே.”

சொன்ன அவளை அதிசயமாய் பார்த்தான்.

அவளா சொன்னாள். கிருஷ்ணவேணியை பரம எதிரி போல் பார்ப்பவள் இப்போது அவள் மீது கொண்ட கரிசனை எப்படி?

இருந்தும் அவள் சொன்னதை செய்தான். சாருலதா ஏதோ பரபரப்பில் இருப்பது போல் தெரிந்தது.

“அத்தான் அங்கே பாருங்க. அது நம்ம கிருஷ்ணவேணிதானே?”

சொன்ன அவள் தன் குரலில் தெரிந்த குதூகலத்தை மறைக்க முயன்றாள்.

‘சரியான நேரத்தில் சரியான தகவலை தான் சொல்லியிருக்கிறான்.’

யாரையோ மனதார மெச்சிக்கொண்டாள்.

அங்கே பார்த்த மகேந்திரனுக்கு முகம் கடுத்தது.

அங்கே கிருஷ்ணவேணி யாரோ ஒருவனுடன் மிகவும் நெருக்கமாக நின்றுகொண்டு பேசிக்கொண்டிருந்தாள்.

அவன் அவள் தோளைத் தட்டியவாறே தன் காரின் முன்னிருக்கை வரை அழைத்துச்சென்று அவளுக்காக கதவைத் திறந்து உட்கார வைத்தான்.

பிறகு அவன் வந்து ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து காரை எடுத்துச்சென்றான்.

சாருலதா ஜாடையாக மகேந்திரனைப் பார்த்தாள். அவள் அருகில் இருக்கிறாள் என்ற காரணத்தினாலே தனது மனவோட்டத்தை மறைத்துக்கொண்டு அமர்ந்திருந்த மகேந்திரன் எதுவும் நடவாதது போல் தானும் காரை ஓட்ட ஆரம்பித்தான்.

சாருலதா கூட இல்லாது இருந்திருந்தால் அவர்கள் சென்ற காரை பின்தொடர்ந்திருப்பான். இப்போது அது முடியவில்லை.

கார் ஓட்டும்போது எல்லாம் அந்தப் புதியவனே நினைவில் நின்றான்.

அவன் அழகன் என்பதை விட பணக்காரன் என்பதும் தெரிந்தது. அவன் ஓட்டி வந்த கார் மிக விலை உயர்ந்தது.

கிருஷ்ணவேணி எப்படிப்பட்டவள் என்று மீண்டும் யோசிக்க ஆரம்பித்தான்.

அதற்குள் வீடு வந்துவிட்டது. யுகேந்திரன் மட்டும் வரவேற்பறையில் தனியாக அமர்ந்திருந்தான். அதைப் பார்த்ததுமே அவள் இன்னும் வீட்டிற்கு வந்திருக்கவில்லை என்று புரிந்தது.

காலையில் இருந்த தலைவலி இப்போது இன்னும் அதிகமானது.



யாரையும் கண்டுகொள்ளாமல் தனது அறைக்குச் செல்வதற்கு மாடிப்படி மீது கால் வைத்தவனை யுகேந்திரனின் குரல் தடுத்தது.
“அண்ணா. ஏன் சோர்வா இருக்கே
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 12-04-2019, 10:55 AM



Users browsing this thread: 7 Guest(s)