என் வாழ்வே உன்னோடுதான் -சசிரேகா
#8
”இது தேவையா எப்படியோ போறான்னு விட வேண்டியதுதானே இப்ப நீதான் குளிர்ல நடுங்கப்போற” என சொல்லும் போதே அங்கு வந்து நின்றான் ஆதி. திடீரென அவனைப் பார்த்த பயத்தில் காவேரி பின்னால் செல்ல அவளை பார்த்துவிட்டு ஆதி யாமினி முன் நின்று அவள் தந்த ஷால்வையை அவளுக்கே கொடுத்தான்.

”இல்ல பரவாயில்லை இது உனக்குதான் வெச்சிக்கோ” என்றாள். அவனோ அதை அவளிடம் நீட்டவும் அவள் மறுபடியும்
”பரவாயில்லை என்கிட்ட வேற இருக்கு இதை நீ எடுத்துக்க” என சொல்லியும் அவன் அந்த ஷால்வையை அவள் மேல் சுற்றி போட்டுவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டான். அவன் சென்றதும் நேத்ரன் வந்தான்
”யாரு யாமினி அவன் எதுக்கு உனக்கு துணியை கொடுத்துட்டு போறான்” என கோபமாக கேட்கவும்

”இல்லை அப்படியில்லை நான்தான் அவருக்கு கொடுத்தேன், வேணாம்னு திருப்பிகொடுத்தாப்ல அவ்ளோதான்” என சொல்லிவிட்டு காவேரியுடன் அங்கிருந்து நகர்ந்துவிட்டாள்.

மறுபடியும் அவர்கள் பல இடங்களுக்கு சென்றுவிட்டு ஓட்டலுக்கு வந்தார்கள். பஸ்ஸை விட்டு இறங்கியதும் யாமினியின் கண்களுக்கு ஆதி தெரிந்தான். ஓட்டலின் வெளியே கார்டனில் போட்டிருந்த பென்ச்சில் படுத்திருந்தான்.

யாமினி நேத்ரன் இருப்பதால் அவனிடம் செல்லாமல் ஓட்டலுக்குள் சென்றவள் ரிசப்ஷனில்

”ஒரு ரூம் வேணும்” என்றாள்

”சாரி மேடம் டபுள் ரூம் இல்ல சிங்கிள்தான் இருக்கு இப்பதான் வெக்கேட் பண்ணாங்க”

“நோ ப்ராப்ளம் அந்த ரூம் சாவி கொடுங்க”

”எத்தனை நாளைக்கு”

”ஒரு நாளைக்குதான் இந்த நைட் தூங்கறதுக்காக மட்டும்தான்”

”உங்களுக்கே ஏற்கனவே ரூம் இருக்கே மேடம்”

”ஆமா ஆனா எனக்கு தனியா தூங்கி பழக்கம் அதான்”
”ஓகே மேடம்” என அவளுக்கு ஒரு ரூம்சாவி தரவும் அந்த நெம்பரை பார்த்துவிட்டு நேராக ஓட்டலுக்கு வெளியே ஆதி இருந்த இடத்திற்கு வந்து அவனை எழுப்பினாள்.
ஆதி ஆதி எழு” என அவனது தோளை உலுக்கவும் தூக்க கலக்கத்தில் எழுந்து அமர்ந்து அவளை பார்த்தான் வித்தியாசமாக

”வா” என்றாள் அவன் எழாமல் இருக்கவே அவனது கையை பிடித்து இழுத்தாள். அவன் நகராமல் அவளையே வேடிக்கை பார்த்தான். அவள் சிறிது நேரம் போராடி பார்த்துவிட்டு அவனிடம்

”இங்க ஏன் படுத்திருக்க வா உனக்காக ஒரு ரூம் போட்டிருக்கேன் அங்க வந்து படுப்ப வா” என அழைக்கவும் மெதுவாக எழுந்தவன் அவளை பார்த்தான். அவள் முன்னே செல்ல பின்னாடியே வந்தான் ஆதி.

அவனுக்காக வாங்கிய அறை முன் நின்றவள் கதவை திறந்து அவனையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள். உள்ளே வந்தவன் அந்த அறையை பார்த்தான் ஒரே ஒரு கட்டில் இருக்கவே அதில் சென்று அமர்ந்தான். அவனிடம் சென்றவள்

”நீ இங்க படுத்துக்க இந்தா சாவி காலையில எழுந்ததும் சாவியை ரிசப்ஷன்ல கொடுத்துடு நான் பணம் கொடுத்துட்டேன் ஓகேவா” என அவள் சொல்லவும் அவன் சாவியை வாங்கி அங்கிருந்த டேபிள் மீது வைத்துவிட்டு படுத்தான்.

அவனது நனைந்த உடையை கண்டவள் அவனை எழுப்பினாள்

”உன் ட்ரஸ் ஈரமாயிருக்கு எழுந்து ட்ரஸை காயை வை. காலையில போட்டுக்குவ” என்றாள் அவனும் எழுந்து சர்ட் கழட்டவும் திரும்பிக் கொண்டவள்

”ஏய் என்ன செய்ற நீ நான் இருக்கேன்ல நீ பாட்டுக்கு ஷர்ட் கழட்டற இரு நான் வெளியே போயிடறேன் அப்புறம் எதையாவது செய்” என சொல்லிவிட்டு உடனே அங்கிருந்து சென்றுவிட அவனும் அறைக்கதவை தாப்பா போட்டுவிட்டு தான் போட்டிருந்த ட்ரெசை கழட்டி அங்கு ஆறவைத்துவிட்டு மீண்டும் கட்டிலில் படுத்து உறங்கலானான்.

யாமினி தன் அறைக்கு வந்தாள். அங்கு நேத்ரன் மட்டும் இருக்க யாரும் இல்லாமல் போகவே அவள் யோசனையுடன்

”காவேரி எங்க?”

”அதுவா அவளுக்கு வேற ரூம் மாத்தி கொடுத்துட்டேன்”

”ஓ சரி நான் அப்ப காவேரிக்கிட்டயே போறேன்”

”இல்லை இரு இந்த ரூம் காலியாதானே இருக்கு”

”நீங்க இருக்கீங்களே”

”நான் இருந்தா என்ன வேலைகளை ஷேர் பண்ணிக்கிறோம் அப்படியே ரூமையும் ஷேர் பண்ணிக்கலாமே” என நேத்ரன் சொல்ல அதற்கு யாமினி

”இல்லை எனக்கு பிடிக்கலை நான் காவேரிகிட்ட போறேன்” என வெளியே சென்றவளை தடுத்தான் நேத்ரன்



”இரு எங்க போற கஷ்டப்பட்டு இந்த வாய்ப்புக்காக நிறைய செலவு செஞ்சி டூர் ஏற்பாடு செஞ்சிருக்கேன் உன்கூட நான் இருக்கனும்னுதான் அதை ஏன் நீ புரிஞ்சிக்க மாட்டேங்கற”
”நீங்க நினைக்கற பொண்ணு நான் கிடையாது”
Like Reply


Messages In This Thread
RE: என் வாழ்வே உன்னோடுதான் -சசிரேகா - by johnypowas - 12-04-2019, 10:45 AM



Users browsing this thread: 1 Guest(s)