நான் போராளி அல்ல (நாடோடிகள் -3)
ஏம்மா சேமியா 

என் பேர் சவுமியா இல்ல அது வாயில நுழையாட்டி அதுலயான்னு கூப்பிடுங்க என்னோட இன்னொரு பெரு 

அது இல்லையா இது இல்லையானு பேர் பாரு என ஆகாஷ் ஒட்டி சிரிக்க அதுல்யா ஆகாச பார்த்து முறைச்சா 

சரி சரி முறைக்காத உன் லவ்வர் இருக்க இடத்தை கண்டுபிடிச்சாச்சு 

என்னது என ரொம்ப சந்தோசப்பட ஆகாசுக்கு அத பார்த்து கடுப்பு ஆனது 

சரி எங்கன்னு சொல்லுங்க 
முணாறுல இருக்கான் 

நிஜமா தான் சொல்றிங்களா 

நீ நம்ப மாட்டேன்னு தெரியும் அதான் அவன் இருக்க போட்டோ இந்தா என ஆகாஷ் அதுல்யா லவ்வர் போட்டோவை காட்ட 

எங்க நீங்க பார்த்தீங்கன்னா கையோட கூப்பிட்டு வந்து இருக்க வேண்டியது தானே 

என்ன விளையாடுறியா உன் அண்ணன் மாமா சித்தப்பா பெரியப்பா பத்தி எல்லாம் தெரிஞ்சு தான் சொல்றியா நம்ம 3 பேரையும் வெட்டி போட்டுடுவானுக 


நீங்க தான் ஒரு பெரிய போராளி ஆச்சே ஏதாச்சும் பண்ணி சேர்த்து வச்சுட மாட்டிங்க 
ஆமா நல்லவனா இருந்ததுலாம் அப்போ இருடி உனக்கு அப்புறம் இருக்கு ஆனா உன் லவ்வர்க்கு தனியா ஒன்னு வச்சு இருக்கேன் என மனசுல நினைச்சுட்டு சரி இப்போ நாம முதல மூணார் உடனே கிளம்பனும் அது மட்டுமில்லாம உன் ஆள் முணாறுல ஏதோ மலை கிராமத்துல இருக்கான் அங்க போயி தேடி தான் கண்டு பிடிக்கணும் இப்போ நீ என்ன பண்ற போயி என் அம்மா கிட்ட பெர்மிஷன் கேக்குற என்றான் ஆகாஷ் .

என்னன்னு 

இந்த மாதிரி எனக்கு லவ்வர் இருக்கான் நானும் அவனும் ஓடி போக போறோம்னு மூஞ்சி யும் முகரையும் பாரு என ஆகாஷ் திட்ட 

அதுல்யா லைட்டா கோபமாக 

அட அது எல்லாம் ஒண்ணுமில்லாடா உன் முகத்துக்கு என்ன அழகு என ஒரு தடவ கைய வச்சு அவ முகத்தை தடவி சுற்றி போட அதுல்யாவுக்கு அது சந்தோஷமும் வெட்கமும் தந்தது 
ஹ இப்படியே போகாத நில்லு இந்த பொட்டு வை என ஆகாஷ் ஒரு ஸ்டிக்கர் பொட்ட அதை வாங்கி அதுல்யா சரியா வைக்கமால் இருக்க இங்க கொடு பேச்சு மட்டும் பேசுற ஒரு சின்ன ஸ்டிக்கர் பொட்டு வைக்க முடியல என அந்த பொட்டு சரியாக ஆகாஷ் அதுல்யா நெற்றியில் வைக்க அது அவளுக்கு ஒரு வெக்கம் தந்தது 

இந்தா மல்லிகை பூ இருக்கு இதையும் வச்சுட்டு போ என ஆகாஷ் கையில் கொடுக்க அதை வாங்கும் போது ஆகாஷ் விரல் பட அதுல்யா மனசு ஏதோ ஏதோ பண்ணியது .மல்லிகையும் வைக்கமால் திணற ஆகாஷ் வாங்கி இருந்தாலும் உன்னைய ரொம்ப செல்லம் கொடுத்து வளர்த்துட்டானுக என மல்லிகை பூவை வைக்க அதுல்யா மனசுல பட்டாம் பூச்சி ஓடியது புருஷன் புருஷன் தான் என அவள் மனசுல ஒரு எண்ணம் வந்தது பூ வச்சுட்டு செல்லமாக ஒரு கொட்டு கொட்ட ஆ போங்க என அவனை பார்த்து சொல்லிட்டு அதுல்யா மெல்ல நடந்தா அவளுக்கு என்னமோ ஆகாஷ் தான் மனசுல வந்து கொண்டு இருக்க திரும்ப திரும்ப ஆகாச ஒரு தடவ பார்த்துட்டு நடந்தா .[Image: R6B5hke.jpg]
[+] 3 users Like jakash's post
Like Reply


Messages In This Thread
RE: நான் போராளி அல்ல (நாடோடிகள் -3) - by jakash - 17-06-2021, 03:11 PM



Users browsing this thread: 18 Guest(s)