Poll: இப்பகுதி தொடர்வதை விரும்புகிறீர்களா?
You do not have permission to vote in this poll.
ஆம்
100.00%
7 100.00%
இல்லை
0%
0 0%
Total 7 vote(s) 100%
* You voted for this item. [Show Results]

கிசு கிசு கார்னர்
#7
கிசு கிசு 3


[Image: Sneha-1.jpg]

துபாய் கிரிக்கெட் ஸ்டேடியம் நிரம்பி வழிந்தது. நடக்கப் போகிற நட்சத்திர கிரிக் கெட்டைப் பார்க்கத்தான் ரசிகர்கள் திரண்டிருக் கிறார்கள்.

இப்போதும் கூட கிரிக்கெட் வீரர்களை தேர்வு செய்வதில் முக்கிய பங்காற்றும் கிரிக்கெட் வீரரின் பெயர் கொண்ட... அந்த ‘"திரு' நடிகரும் ஆடுகளத்தில் இறங்கிவிட்டார்!

இறங்கியவர்... கேலரியில் முன் வரி சையில் உட்கார்ந்திருந்த தனது நண்பர்களிடம் தனது பர்ஸைக் கொ டுத்து "பத்திரமா வச்சி ருங்க'’ எனச் சொல்லி கொடுத்துவிட்டு ஆட்டத் துக்கு போகிறார்.

ஆர்வக் கோளாறில் நண்பர்கள் நடிகரின் பர்ஸை பிரித்துப் பார்க்க... உள்ளே ஒரே ஒரு நீளமான தலை முடி.

அவர்களுக்கு விஷயம் விளங்கி விட்டது. விஷயம் நடிகரின் வீட்டிற் குப் போகிறது.

உங்களுக்கு வேண்டுமானால் அது தலை முடி என்பதாக இருக்கலாம். நடிகரின் வீட்டாருக்கோ அது தலையாய பிரச்சனை. இத்தனை நாள் மர்மத் துக்கு கிடைத்த விடை.

ஆமாம்!

அந்த நடிகரும், "ஜூனியர் புன்னகை' நடிகையும் இணைந்து ஒரு படத்தில் நடித்த போது... படமும் பேசப்பட்டது. அவர்களின் ஜோடிப் பொருத்த மும் சிலாகிக்கப்பட்டது. இதை கெட்டியாகப் பிடித்துக் கொண்ட நடிகை.... ஹீரோவை தன் வலையில் வீழ்த்தினார். நடிகை யின் சுகமான சுழலில் சிக்கிக் கொண்டு ஆனந்த தத்தளிப்பு தத்தளித்துக் கொண்டிருந்தார் நடிகர்... கரையேற வாய்ப்பிருந்தும் கரையேறாமல்!

இந்த விஷயத்தை அரசல் புரசலாக கேள்விப்பட்ட நடிகரின் குடும்பம்.... ‘சேர்ந்து நடிக்கிற நடிகையோட... ஒரு ஹீரோ பழக்கமா இருப்பது வாடிக்கை யான விஷயம்தானே’ என லேசாக விட்டுவிட்டனர்.

கொஞ்ச நாள் கழித்து நடிகருக்கு பெண்பார்க்கும் படலத்தை அவரின் வீட்டார் ஆரம்பித்த போதுதான்.... "இல்லை... நான் அந்த நடிகை யைத்தான் கட்டிக்குவேன்'’என கட் அண்ட் ரைட்டாக சொல்லி விட்டார். நடிகை குறித்து விசாரித்தவர்கள்... மகனின் முடிவு "கட் அண்ட் ரைட் இல்லை... ராங்..'. என்பதை அறிந்து மகனை நடிகையிடமிருந்து மீட்க போராடினார்கள்.

வெளிப்பழக்கங்களை தொடர்ந்து கொண்டிருந்த நடிகை... இந்த நடிகரை விடுகிற பாடில்லை. நடிகர் மனம் மாறி விடக்கூடாது என்பதற்காகவோ என்னவோ... தன் தலைமுடி ஒன்றை பரிசாக அளித்தார். அதைத்தான் ஹீரோ பொக்கிஷம் போல பாதுகாத்து வந்தார்.

அதனால்தான்... அந்த நடிகையின் சிணுங்கல் அவருக்கு சிலிர்ப்பாக இருந்தது. குலுங்கல் குதூகலமாக இருந்தது.

துபாயிலிருந்து இந்த லென்த்தி ஹேர் மேட்டர் லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட் டாய் வந்ததே... என... தங்களுக்கு வேண்டப்பட்ட நண்பர்கள் சிலரிடம் இந்த முடி மேட்டரை மூடி மறைக்காமல் சொன்னார்கள்.

’"ஆகா... இப்பத்தான தெரியுது... ஒங்க பய ஏன் அந்தப் பொண்ணு பின்னாடி மந்திரிச்ச கோழி மாதிரி அலையிறான்னு. அந்த தலைமுடியை அந்தப் பொண்ணு மந்திரிச்சு குடுத்திருக்கு’'

"அவனை மீட்க என்ன வழி'’

"ஒரே வழி... முள்ள முள்ளால எடுக்கிறதுதான்.'’

ஆந்திராவிலிருந்து வரவழைக்கப்பட்டார் அந்த மகா மந்திரவாதி. அவரை நிமிர்ந்து பார்த்தால்... பேயே பீதியடையும், பிசாசுக்கே பேதியாகும். அப்படி இருந்தார்.

ஆனால் மந்திரவாதியின் பேச்சில் அப்படியொரு நிதானம்.

’"கண்டிஷன் ஒண்ணு.... நீங்க நினைச்சது நல்லபடியா நடந்த பின்னாடி எனக்கு தட்சணை குடுத்தா போதும்.

கண்டிஷன் ரெண்டு... அவங்க ரெண்டு பேர் சம்பந்தப்பட்ட பொருள் ஏதாவது வேணும்.

கண்டிஷன் மூணு.... ரெண்டு பேரோட போட்டோ வேணும்.

கண்டிஷன் நாலு... நாளைக்கு பூஜை முடிச்சதும்... சரியா பத்தாவது நாள்ல இது நடக்கும். அதுக்கு முன்ன... நடக்கலை யேன்னு நம்பிக்கை இழந்தீங்கன்னா... என் மந்திரம் பலிக்காது.

கண்டிஷன் அஞ்சு... நான் நடத்துற பூஜைக்கு நீங்களோ... உங்களை சார்ந்தவங்களோ... ஒங்க பிரதிநிதியோ வரக்கூடாது... என்னை பின் தொடரவும் கூடாது. நல்லபடியா முடிஞ்சா... பூஜை எப்படி நடந்ததுன்னு நானே சொல்லுவேன்'’ என தெலுங்கில் மாட்லாடினார் மந்திரவாதி.

கண்டிஷன் எல்லாத்துக்கும் மண்டையாட்டிவிட்டு கேட்டதை கொடுத்தனர்.

தமிழக எல்லைப் பகுதியில் ஆந்திராவில்... ஒரு சுடுகாட்டில் இரவில் நடந்தது பூஜை.

நடிகரின் படத்தை வைத்து, அதற்குப் பக்கத்தில் நடிகையின் படத்தை தலைகீழாக வைத்து பூஜை நடந்தது. ஆடு வெட்டி காளியை குளிர்வித்தார் மந்திரவாதி!

பத்தாம் நாள்... மந்திரவாதிக்கு ஆளனுப்பி வரச் சொன்னார்கள்.

"பையன் கல்யாணத்துக்கு பொண்ணுப் பாக்கச் சொல்லீட்டான்'’எனச்சொல்லி பெரும் தட்சணை கொடுத்து அனுப்பினார்கள்.

மந்திரம் பலித்திருக்கலாம்... அல்லது காக்காங்கிற மந்திரவாதி ஒக்கார... மனசுங்கிற பனம்பழம் விழுந்திருக்கலாம். இது அவரவர் நம்பிக்கை!
Like Reply


Messages In This Thread
RE: கிசு கிசு கார்னர் - by sanjaysara - 13-06-2021, 10:49 PM



Users browsing this thread: 1 Guest(s)