12-06-2021, 05:14 PM
(12-06-2021, 08:13 AM)revathi47 superb Wrote: மூவரும் சாப்பிடும்போது கீர்த்தனா எதுவும் பேசாமல் சாப்பிடுவது கண்டு ஆச்சிரயப்பட்டால்.
இதற்கு முன் எத்தனை முறை சண்டை போட்டாலும் அவள் பேசாமல் இருந்ததில்லை, சண்டை சமாதானம் ஆகும் வரை திட்டி, சீண்டி ஏதாவது சொல்லி அவனை வம்பிழுத்து கொண்டே இருப்பாள்... பிரதீப்பும் அவளை சீண்டாமல் சாப்பிட்டது அவளுக்கு மேலும் அதிர்ச்சியாயிருந்தது. அதுபோல் எப்போதும் எதனால் சண்டை என்று தன்னை பார்த்தவுடன் கூறும் கீர்த்தனா இன்று எதுவும் பேசாமல் இருந்தது அவளுக்கு மேலும் உறுத்தியது.
சாப்பிட்டுவிட்டு, குட் நைட் ஆண்ட்டி, எனக்கு தூக்கம் வருது போறேன் பை,,,சொல்லிட்டு அவள் வீட்டுக்கு போய்விட்டாள்.
என்னடா பிரச்சனை உங்களுக்குள்ள ...மகனிடம் கேட்டாள்
அது ஒன்னும் இல்ல விடுமா..
டேய், சொல்ல போறியா இல்லையா,,,
தயங்கிபடியே சொன்னான், என்ன கல்யாணம் பண்ணிக்கிறயான்னு கேட்டா, மாட்டாலாம், என்ன மாதிரி நல்லா படிச்ச, நம்ம ஸ்டேட்டசுக்கு ஈக்வலான பொண்ணு தான் எனக்கு செட் ஆவுமா. அதான் என்ன அவளுக்கு புடிக்கலைங்கிற கோவத்துல கத்திட்டேன்...
அவ சைட்லேந்து பார்த்தா அவ சொன்னது கரெக்டு தானடா... ஒரு கோடீஸ்வரன் வீட்டு பொண்ணு உன்ன கட்டிக்கறேன்னு சொன்ன ஒடனே ஓகே சொல்லிடுவியா,,,, அவங்க ஸ்டேட்டஸ் எங்க நம்ம ஸ்டேட்டஸ் எங்கன்னு ஒரு பயம், தயக்கம் வரும்ல... அவளுக்கு உன்ன புடிக்கலைன்னு சொன்னாளா … உன்ன தவற அவளுக்கு வேற யாரடா புடிக்கும்...காலைல மொத வேலையா அவ கிட்ட சாரி கேளு...
சரிம்மா...
*******************************************************************
படிச்சிட்டு பிடிச்சிருந்தா லைக் அண்ட் கமன்ட் பண்ணுங்க, உங்க கமெண்ட்ஸ் தான் என்னை தொடர்ந்து எழுத வைக்கும்…