என் வாழ்வே உன்னோடுதான் -சசிரேகா
#4
”சரி நீ இங்கயே இரு” என சொல்லிவிட்டு அவர் உள்ளே செல்ல அவன் அங்கிருந்த ஒரு பென்ச்சில் அமர்ந்துக் கொண்டான். அதைப்பார்த்த யாமினி நேத்ரனிடம்

”கால் வலிக்குது போலாமா” என்றாள்
”ஓகே ஷ்யூர் மத்தவங்களும் வந்துட்டாங்க போல வா”
நீங்க முன்னாடி போங்க நான் பின்னாடி வரேன்” என சொல்லவும் அவனும் முன்னாடி சென்றான். அவன் பின்னாடியே வந்தவள் சட்டென ஆதி முன் வந்து நின்றாள்.

”ஹலோ” என்றாள்

அவளை ஏறெடுத்து பார்த்துவிட்டு சந்தேகமாக ஒரு நொடி பார்த்துவிட்டு மீண்டும் தலை குனிந்து கொண்டான்

”என் பேரு யாமினி உங்க பேரு என்ன” என கேட்க அவன் மறுபடியும் அவளை தலைநிமிர்த்தி பார்த்தான். அதற்குள் ஆதி என யாரோ அழைக்கவும் சடாரென எழுந்து வேகமாக கட்டிடத்திற்குள் சென்றான்.

”ப்பா என்ன இப்படி போறான் இவன் நடையே இவ்ளோதானா” என யோசித்துக்கொண்டு தன் ஓட்டலுக்குள் வந்தவள் அங்கு பஸ் ரெடியாக இருக்க அதில் ஏறி காவேரியின் பக்கத்தில் அமர்ந்தாள்

”என்னப்பா எங்க போன நீ, அந்த நேத்ரன் நீ எங்க எங்கன்னு கேட்டு என்னை தொல்லை பண்ணிட்டான்”

“அதுவா அது நாம சாப்பிடறப்ப ஒருத்தன் நமக்கு முன்னாடி உட்கார்ந்து சாப்பிட்டான் பார்த்தியா”

”ஆமா அந்த காட்டானா”

”அவன் பேரு ஆதி அவன் என்ன செய்றான்னு பார்த்துட்டு வந்தேன்”

”என்ன செய்வான் சாப்பிட்டுகிட்டு இருப்பான்”

”அதான் இல்லை” என அவள் அவனை ரோடில் பார்த்தது முதல் கடைசி வரை நடந்த கதையை சொன்னாள்.
”அடப்பாவி அவன் என்ன பைத்தியக்காரனா”
”தெரியலயே”

”எதுக்கும் நீ அவன்ட்ட இருந்து கொஞ்சம் தள்ளியிரு அவனை பார்த்தாலே எனக்கு பயமாயிருக்கு”

”எனக்கு அவனை பார்த்தா பாவமா இருக்கு அவனை மனுஷனா கூட யாரும் பார்க்கலை”

”இங்க பாரு அவனை பத்தி பேசாத ப்ளீஸ் இங்கேயும் வந்துட போறான்” என சொன்னாள். அதற்குள் கார்டன் வர அங்கு வண்டி நின்றது. அனைவரும் இறங்கி உள்ளே சென்று சுற்றி சுற்றி பார்த்து போட்டோ எடுத்துக்கொண்டு வந்தார்கள். அடுத்த இடம் போட்டிங் சென்றார்கள். அங்கு ஏற்கனவே ஏகப்பட்ட போட்களில் மக்கள் தண்ணீரில் மிதந்துக்கொண்டும் போட்டோ எடுத்துக்கொண்டும் இருந்தார்கள். மிதமான தட்பவெப்பமானாலும் ஒரளவு குளிரவும் செய்தது.

யாமினி அதை வேடிக்கை பார்க்கவே காவேரி வந்தாள் அவளிடம்

”ஏய் இங்க வாயேன் உனக்கு ஒண்ணு காட்டறேன்” என சொல்லவும் அவளும் அவளிடம் சென்றாள் ஓரிடத்தில் ஆதி மார்பு வரை தண்ணீரில் நின்று கொண்டிருந்தான். அதைப் பார்த்தவளுக்கு அதிர்ச்சியே வந்தது. சுற்றி சுற்றி பார்த்தாள். அங்கு அதே பெண்கள் போட்டில் அமர்ந்துக்கொண்டு இருந்தார்கள். அவனை போட்டோ எடுத்துக் கொண்டிருக்க யாமினி மெதுவாக அந்த தண்ணீரை தொட்டுப்பார்த்தாள். ஜில்லென இருக்கவே உடனே கையை எடுத்தவள் காவேரியிடம்

”என்னடி இப்படி குளிருது இவன் எப்படிதான் இந்த தண்ணியில நிக்கறானோ”

”தெரியலைப்பா அந்த பொண்ணுங்களை பத்திதான் நீ சொன்னியா”

”ஆமாம் அதுங்கதான் அவனை எப்படி இம்சை பண்றாளுங்க பாரேன்”

”ஆமா அந்த பொண்ணுங்க சொன்னா இவன் ஏன் செய்யறான்”

”தெரியலைடி சீ பாவம்”

”என்ன பாவம் அவன் முகத்தை பாரு ஒரு ரியாக்ஷன் வரலை, என்னவோ சூடான தண்ணியில நிக்கற மாதிரி ஜாலியா நிக்கறான் பாரு” என காவேரி சொல்லவும் நேத்ரனின் குரல் கேட்டது

”என்ன செய்றீங்க வாங்க போட்ல போலாம் என்றான்.

அந்த பெண்களும் திரும்பி அவனுடன் வர அனைவரையும் போட்டில் ஏற்றிவிட்டு 2 போட் மட்டும் காலியாக இருக்கவே நேத்ரன் யாமினியை அழைத்தான்.

”வா யாமினி நாம ஒண்ணா போலாம்”

”ம் காவேரி”

”அவளுக்கு இன்னொரு போட் இருக்கே அதுல வரட்டும்”

“இல்ல நாங்க ஒண்ணா வரோம்” என சொல்லி அவசரமாக காவேரியை இழுத்துக்கொண்டு ஒரு போட்டில் இறங்கினாள்.



”ஏன் யாமினி இப்படி செய்ற பாவம் நேத்ரன் உன்னை கரெக்ட் பண்ண பார்க்கறான், நீ என்னடான்னா இப்படி செய்றியே”
”போதும் வா அவனை விட முக்கியமான வேலை ஒண்ணு இருக்கு” என சொல்லிவிட்டு போட் ஓட்டுபவனிடம் ஆதியிருக்கும் பக்கம் செல்ல சொன்னாள்.
Like Reply


Messages In This Thread
RE: ன் வாழ்வே உன்னோடுதான் -சசிரேகா - by johnypowas - 11-04-2019, 11:03 AM



Users browsing this thread: 1 Guest(s)