நீ by முகிலன்
#67
நீ -23

தலை குனிந்தபடி மூக்கை உறிஞ்சிய.. உன் தோளை வளைத்து.. என்னோடு சேர்த்து அணைத்தேன்.
”ஏய்… தாமரை..! என்ன இது.. சின்னப்புள்ள மாதிரி..??”

என் மார்பில் சாய்ந்து.. மெல்ல  விசும்பினாய். உன் தலையைத் தடவினேன்.
' உன்னை என்னுடனே வைத்துக் கொண்டால்தான் என்ன..? இவ்வளவு கட்டாயத்தில் அனுப்பத்தான் வேண்டுமா..? நீயே சொன்னது போல.. உன்னை ‘ வீட்டு வேலைக்கு..?’ என ஒரு எண்ணம் தோண்றி உடனே மறைந்தது.!
உன்னை என்னுடன் நிரந்தரமாக  வைத்துக் கொள்ளும் திடம் என்னிடம் இல்லை. முடிந்தவரை திருப்திகரமாக உன்னை அனுபவித்தாயிற்று… என்னோடு சுகித்துக் கிடந்த உன்மேல் ஒரு பிரியம்… வாஞ்சை.. இருக்கிறது..! அதற்காக என்னுடனேயே வைத்துக் கொள்ளுமளவு.. காதல் இல்லை..!!
உன்னைத் திருமணம் செய்து கொள்ள.. என் மனம் இடம் தரவில்லை..!!’

”ஏய்…தாமரை..! இங்க பார்.. என்னத்துக்கு இப்ப அழுகை..? ம்ம்..? நீ டெய்லி.. இங்கதான.. வேலைக்கு வரப்போற..? உன்னை.. நானே வந்து பாக்கறேன்… கவலைப்படாத..! அப்றம் வாரத்துல ஒரு நாள்… நாம ஜாலியா…எங்காவது போலாம்.. என்ன…?” உன் முகத்தை நிமிர்த்தி… நீர் வழிந்த உன் கண்களைத் துடைத்து விட்டேன்..!
சமாதானமாகி…’சர் ‘ ரென மூக்கை உறிஞ்சினாய்.
”மன்னிச்சுக்குங்க…”
” அசடே..! போலாமா..?” 
” போலாங்க..”

பரிதாபமாக இருந்த.. உன் கண்களில் முத்தம் கொடுத்தேன். 
”ஒன்னு பண்ணேன்..”
”என்னங்க…?” 
”வேலைக்கு வேணா… நாளைலருந்து போ..!!”
”ஏங்க…?” 
”இன்னிக்கு.. உனக்கு மூடே இல்லேன்னு நல்லாவே தெரியுது..! பேசாம நீ.. இன்னிக்கு உன் வீட்டுக்கு போய் நல்லா ரெஸ்ட் எடு..! நாளைலருந்து வேலைக்கு வந்துக்கோ…” 
”ஒன்னும் சொல்ல மாட்டாங்களா..?”
” அத.. நா பேசிக்கறேன்..! உன்ன இப்படி அனுப்ப எனக்கு கஷ்டமா இருக்கு..!!”
”எனக்கு வேலைக்கு போறதெல்லாம் கஷ்டமா இல்லீங்க.. உங்கள விட்டுப் போறதுதான்.. கஷ்டமா இருக்கு..” என்றாய்.

நீ என் மீது  எவ்வளவு பைத்தியமாகி விட்டாய் என்பதை இந்த ஒரு நொடி எனக்கு நன்றாகவே உணர்த்தியது. ஆனால்  என்ன செய்ய.. நம் வாழ்வின் வழிப் பாதைகள்  வேறு வேறு திசையில் செல்கின்றனவே என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.
உன்னை.. இருக்கமாக அணைத்து.. முத்தமிட்டேன்..! 
”இப்ப உன் வீட்டுக்கு போலாமா..?”
”நானே போய்க்குவங்க..”
”சே.. என்னடி பேசற.. நட நானே கொண்டு போய் விடறேன்…”
”பரவால்லீங்க.. நா போய்க்குவேன்…!!” 
” ஏய்… சும்மாரு நீ..!! என்கூட வா..!! அஙகருந்து உன்னக் கூட்டிட்டு வந்து.. நல்லா அனுபவிச்சுட்டு.. நீயே போ.. னு அனுப்பினா.. நான் என்ன மனுசன்..?”
”ஐயோ…! நா அப்படியெல்லாம் எதும் நெனைக்கமாட்டங்க..!” 
”நீ.. நெனைக்க மாட்டேன்னு தெரியும்..!! எனக்குன்னு ஒரு இது இருக்கில்ல..?”
” பரவால்லீங்க…” 
” ஏய்… நீ மூடிட்டு என்கூட வர்ற..” என்றேன்.

சிரித்தாய் ”சட்..சட்னு கோபம் வந்துருது உங்களுக்கு…” 
” பின்ன.. என்ன..? சரி.. வா..! நீ தியேட்டர்கிட்ட நில்லு..! நான் போய் கார எடுத்துட்டு வந்தர்றேன்..!!” என உன்னை முத்தமிட…. நீயும் என்னை முத்தமிட்டாய்.!!

வீட்டைப் பூட்டிக் கிளம்பினோம்..!!  சொன்னது போல.. நான் போய் காரை எடுத்து வந்து.. உன்னை ஏற்றிக் கொண்டு… கோவில் ரோட்டில் ஓட்டினேன்..!!
காரில் போகும்போது.. நீ அமைதியாக இருந்தாய்.
”தாமரை..?” என்றேன். 
என்னைப் பார்த்தாய்.
”என்னங்க..?”
” ஏதாவது தேவைப் பட்டுச்சுன்னா.. என்னைக் கேளு..!” 
”செரிங்க..” 
”அப்பறம்...."
"ம்ம்?"
" உனக்குன்னு ஒருத்தன் எங்கயாவது பொறந்திருப்பான். அப்படி ஒருத்தன் வந்து உன்னை கல்யாணம் பண்ணிக்கற மாதிரி இருந்தா.. என்கிட்ட சொல்லு. நானே.. உனக்கு கல்யாணம் பண்ணி வெக்கறேன்..!!”
மெல்ல..” நா.. அதெல்லாம் பண்ணிக்க மாட்டங்க…” என்றாய்.
”ஏன் தாமரை…?” 
”இஷ்டமில்லீங்க…” என ரோட்டைப் பார்த்தவாறு சொன்னாய்.
”அப்ப.. தொழில கன்டினியூ பண்ணப்போறியா..?”

சடக்கெனத் திரும்பினாய். உன் கண்களில் ஒரு வலி..! உனது இதயத்தின் அதிர்வை… துடிக்கும் உன் உதடுகள் சொன்னது..!!
”சாகறவரை… மாட்டங்க..!!” என்று திடமாகச் சொன்னாய்.
”நம்பலாமில்ல…?” 
”சத்தியமாங்க…”
” நீ மாறினா.. அது நெஜமாவே.எனக்கு ரொம்ப சந்தோசமான விசயம்தான்..!! உனக்கு என்ன உதவி வேனும்னாலும் என்கிட்ட கேளு..!! என்னால ஆன எல்லாம் நான் செய்வேன்…!!”
கண்கள் கலங்க… ”என் தெய்வங்க.. நீங்க..!!” என்றாய். 
”ம்கூம்.. நீ மாறமாட்ட..” என்று சிரித்தேன்.
”நம்புங்க..!! சத்தியமா மாறிருவங்க…!!”
” அட… நா.. அதச் சொல்லல..!! நீ பேசற இந்த ஸ்டைல் மாறவே மாறாதுனு சொன்னேன்..!!” என்றேன். 
”மனசால கூட.. அந்த தொழில இனிமே செய்யனும்னு நெனைக்க மாட்டங்க..!!” 
” ம்..ம்..!! அப்ப நானும் வரவேண்டாமா…? ஜாலிக்கு..?”
”ஐயோ… நீங்க வாங்க… நீங்க வாங்க..!! உங்களப் போயி….” என்று பதறினாய்.
சிரித்து.. உன் தொடையில் தட்டினேன். ”அப்ப.. வரலாங்கற..?”
”வாங்க.. வாங்க..!! உங்களுக்காக நான் எப்பவும் தயாரா இருப்பங்க…!! நீங்க எப்ப வேனா வாங்க… எங்கவேனா கூப்பிடுங்க.. வரேன்..!!"
”என்ன சொல்ற..?” 
” ஆனா தொழில் பண்ண மாட்டங்க..! இது சத்தியம்..!!” 
” ஏய்… என்ன ஒளர்ற..?”
” ஒளரலீங்க..! உங்க ஒருத்தர தவற வேற யாருகூடவும் நான் படுக்க மாட்டங்க..!! நீங்க எனக்கு சொந்தமில்லாம இருக்கலாம்.. என்னை நீங்க எப்படி வேனா நெனைக்கலாம்..! ஆனா நான் உங்களுக்கு மட்டும்தாங்க சொந்தம்…!!” 
”ஓ…!!” வியக்காமல் இருக்க முடியவில்லை என்னால்..!!

உன்னுடைய குடிசைப் பகுதியில் நிறைய.. ஆடு.. மாடுகள் மேய்ந்து கொண்டிருந்தன. சில நிர்வாணக் குழந்தைகளும்… அரை நிர்வாணக் குழந்தைகளும்… மண் புளுதியில் விளையாடிக் கொண்டிருந்தன.! காரைக் கண்டவுடன் குழந்தைகள் எல்லாம் ஓடிவந்து காரைச் சூழ்ந்து கொண்டன..!! சில தொட்டுப்பார்த்தது…! இன்னும் சில தொடவே பயந்தது..!! அந்த ஏரியாப் பெண்களில் சிலர் உன்னை வியப்போடு பார்த்தனர். இளவயது பெண்ணொருத்தி… ரவிக்கையிலிருந்து.. அவளது பாலூட்டும் பாகம் வெளித்தெரிவது பற்றின பிரக்ஞை இல்லாமல்… இடுப்பில் குழந்தையுடன்..’ ஆ.’ வென காரைப் பார்த்துக் கொண்டு நின்றாள்..!!
”தாமரை…” 
” என்னங்க..?” 
” உன் சாமான்லாம் வெச்சுட்டு வா… கோயிலுக்கு போலாம்..”
”செரிங்க…!!”

உன் வீட்டுக் கதவைத் திறந்து.. உள்ளே போய்விட்டு.. உடனே வந்தாய்.! நான் கார்க் கதவைத் திறந்து விட.. உட்கார்ந்து
”போலாங்க..” என்றாய்.!

புன்னகையுடன் காரைக் கிளப்பினேன். புழுதி பறந்தது..!! உன்னைப் பார்த்து.. மெல்லிய புன்னகையுடன் கேட்டேன்.
”எல்லாரும் உன்னப் பாத்து.. ஆச்சரியப்படறாங்க போலருக்கு..?”
” ஆமாங்க..” என்றாய். முகத்தில் மகிழ்ச்சி பரவ..! 
” ம்.. இப்ப நீ.. பெரியாளாகிட்ட..”
”ஐயோ…! அப்படி இல்லீங்க..!!”

பத்ரகாளி அம்மன் கோவில் முன்பாகக் காரை நிறுத்தினேன். 
”சாமி கும்பிடறியா.. தாமரை..?”
”ஆமாங்க..! நீங்க…?” என்று என்னைப் பார்த்தாய். 
” நீ போய் கும்பிட்டு வா..” 
”ஏங்க…?”
”எனக்கு பழக்கமில்ல…”

சிரித்து விட்டு.. காரைவிட்டு இறங்கிப் போனாய். நான் காரிலேயே உட்கார்ந்து விட்டேன்.! காலை நேரம் என்பதால் கோவிலில் நல்ல கூட்டம் இருந்தது.! கோவில் கடைகளிலிருந்து பக்தி பாடல் இறைந்து பாடிக்கொண்டிருந்தது..!
கோவில் என்பது அமைதியாக இருக்க வேண்டிய இடம்.. இப்படி சந்தை மடம் போல் இறைச்சலாக இருப்பது.. மனதுக்கு சற்று நெருடலாக இருந்தது..!!

நான் காரில் உட்கார்ந்தபடியே… பக்காசூரன் சிலையை வேடிக்கை பார்த்தேன்..! சிலை முன்பாக.. ஒரு ஏழெட்டு.. ஆட்டுக்கிடாய்கள்… வெட்டப் படுவதற்குத் தயாராக..நிறுத்தி வைக்கப் பட்டிருந்தது..!!
கொடுவாலும் கையுமாக… ‘வெட்டாள் ‘ நின்றிருக்க… ‘துலுக்கு ‘ கேட்பவர்கள்… இடுப்பில் துண்டு கட்டி.. பயபக்கதியுடன் நின்றிருந்தனர்..! ஆடுகள் தலையை மட்டும் ஆட்டினால் போதும்… அடுத்த நொடி… அதன் தலை… உடலைவிட்டு விலகிப் போய்விடும்…!!
நீ வந்தாய்..! உன் நெற்றியில் விபூதி.. குங்குமம்..! உதட்டில் மலர்ச்சியான சிரிப்பு..! முகம் நிறைய மகிழ்ச்சி..!!
நான் கதவைத் திறந்து விட.. காருக்குள் உட்கார்ந்து… என் முன்பாக உன் வலது கையை நீட்டினாய்.! உள்ளங்கை மலர்த்தி..
”வெச்சுக்குங்க..” என்றாய்.
”பரவால்ல… வேண்டாம்..” என்றேன்.

உன் முகம் சுணங்கியது.
”ஏங்க..?”
”சரி… உனக்காக..!!” என வலது கை மோதிர விரலால் தொட்டு.. என் நெற்றியில் இட்டுக் கொண்டேன்..!

மீதமிருந்ததை.. ஒரு காகிதத்தில் மடித்து… காரில் வைத்தாய்..!
”கெளம்பலாமா..?” நான் கேட்டேன். 
”ம்.. போலாங்க..”

நான் காரை உசுப்ப… சட்டென என் பக்கத்தில் வந்து… 
”ஹல்லோ…!!” என ஆஜரானாள் நிலாவினி..!!

நான் மெலிதாக அதிர்ந்தேன். உடனே சுதாரித்து… 
”ஹேய்.. நிலா..!!” என்றேன்.

வெளியே தலைநீட்டி..
”என்ன இங்க..?” எனக்கேட்டேன்.
”கோயிலுக்குத்தான்..” என்று பற்கள் பளீரிடச் சிரித்தவள்.. காருக்குள் இருந்த.. உன்னைக் குறுகுறுவெனப் பார்த்தாள்.

”சாமி தரிசனம் முடிஞ்சுதா..?” நிலாவினியின் கவனத்தைக் கலைக்க விரும்பினேன்.
” ஒ..யெஸ்..!!” என்று சிரித்து ”நீங்ககூட.. சாமியெல்லாம் கும்பிடுவீங்க போல..?” என பொடி வைத்துக் கேட்டாள்  நிலாவினி.. !!
Like Reply


Messages In This Thread
நீ by முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:27 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 05-02-2019, 07:28 PM
RE: நீ முகிலன் - by Renjith - 06-02-2019, 02:52 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:18 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:32 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:34 PM
RE: நீ முகிலன் - by johnypowas - 11-02-2019, 06:37 PM
RE: நீ முகிலன் - by Renjith - 11-02-2019, 10:28 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 15-02-2019, 11:02 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 16-02-2019, 03:34 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 19-02-2019, 06:25 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 21-02-2019, 12:18 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 24-02-2019, 12:42 PM
RE: நீ by முகிலன் - by Diipak_ - 14-03-2019, 01:35 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 31-03-2019, 11:43 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 10:30 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 09-04-2019, 03:19 PM
RE: நீ by முகிலன் - by johnypowas - 11-04-2019, 10:33 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 12-04-2019, 04:59 AM
RE: நீ by முகிலன் - by Renjith - 22-07-2019, 03:37 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 29-07-2019, 09:35 PM
RE: நீ by முகிலன் - by Renjith - 25-08-2019, 07:01 AM



Users browsing this thread: 6 Guest(s)