Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
இந்திய பொதுத் தேர்தல் 2019: 17வது மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது

[Image: _106405706_gettyimages-1136227033.jpg]படத்தின் காப்புரிமைDIPTENDU DUTTAImage captionமேற்கு வங்க மாநிலம் கூச் பெகாரில் வாக்களிக்க வரிசையில் நிற்கும் பெண்கள்.
ஏழு கட்டங்களாக நடைபெற்றும் இந்தியாவின் 17வது மக்களவைத் தேர்தல் இன்று (வியாழக்கிழமை) ஏப்ரல் 11ம் தேதி காலை ஏழு மணிக்குத் தொடங்கியது.
18 மாநிலங்களிலும், 2 யூனியன் பிரதேசங்களிலும் மொத்தம் 91 தொகுதிகளுக்கு நடைபெறும் இன்றைய தேர்தலில் 14.21 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 1,729 வேட்பாளர்கள் இன்றைய தேர்தல் களத்தில் உள்ளனர்.
இன்று நடக்கும் வாக்குப்பதிவில் நாடெங்கும் உள்ள 7764 மூன்றாம் பாலினத்தவர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்யத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது என ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் கூறுகிறது.
இன்று இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள சுமார் 1.70 லட்சம் வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறும்.
ஆந்திரப் பிரதேசம், அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் மற்றும் ஒடிசா ஆகிய நான்கு மாநிலங்களின் சட்டமன்றங்களுக்கான தேர்தல்களுக்கும் இன்று வாக்குப்பதிவு தொடங்கியது.
[Image: _106405538_sikkimelection1.jpg]படத்தின் காப்புரிமைELECTION COMMISSION OF INDIAImage captionசிக்கிம் மாநிலத்தில் 13,400 அடி உயரத்தில் அமைந்துள்ள நதாங் மசோங் எனும் சட்டமன்றத் தொகுதி
ஆந்திரப் பிரதேசத்தின் 175 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடக்கும் தேர்தலில் வாக்களிக்க 3.93 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்.
சிக்கிம் மாநிலத்தில் மொத்தமுள்ள 32 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் தொகுதிகளுக்கும், அருணாச்சலப் பிரதேசத்தின் மொத்தமுள்ள 60 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.
ஒடிசா மாநிலத்தில் மொத்தமுள்ள 147 சட்டமன்றத் தொகுதிகளில் 28 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.
இன்று ஆந்திர பிரதேசம், அருணாசல பிரதேசம், அஸ்ஸாம், பிஹார், சத்தீஸ்கார், ஜம்மு காஷ்மீர், மகாராஸ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, ஒடிஸா, சிக்கிம், தெலங்கானா, திரிபுரா, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தல் நடைபெறுகிறது.
ஆந்திர பிரதேச மாநிலத்தை பொறுத்தவரை இன்று நடைபெற உள்ள மக்களவை தேர்தலுடன், அம்மாநிலத்துக்கான சட்டசபை தேர்தலும் பெறுகிறது.
ஆந்திர பிரதேசத்தில் 25 மக்களவைத் தொகுதிகளுக்கு 319 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். பாஜக, காங்கிரஸ், தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ், ஜன சேனா ஆகியவை போட்டியிடும் முக்கிய கட்சிகளாகும். இங்கு 45,920 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 11-04-2019, 10:12 AM



Users browsing this thread: 108 Guest(s)