Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
மும்பை இந்தியன்ஸ் - 31 பந்துகளில் 3 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள் - அதிரடி காட்டிய பொல்லார்டு

[Image: _106405708_6f6df687-aa3d-4dcb-a968-00f967a3d66e.jpg]படத்தின் காப்புரிமைTY IMAGESImage captionகிரோன் பொல்லார்டு
ஐபிஎல் போன்ற 20 ஓவர் ஆட்டங்களில், ஒருவரின் இன்னிங்க்ஸ் மொத்த விளையாட்டையும் மாற்றக்கூடும். அதுவும் 198 ரன்கள் இலக்கு இருக்க, 12 ஓவர்களுக்கு பிறகும் 94 ரன்கள் மட்டுமே எடுத்து நான்கு விக்கெட்டுகளை இழந்தால், அந்த அணி தோற்றது போலதான்.
ஆனால், இந்த நிலையில் ஒருவர் 31 பந்துகளில் மூன்று பவுண்டரிகள், பத்து சிக்ஸர்கள் அடித்து தன் அணியை வெற்றிப்பாதைக்கு கொண்டு போனால், இதனை அதிசயம் என்றுதான் கூற வேண்டும்.
அப்படி ஒரு ஆட்டத்தைதான் வான்கடே மைதானத்தில் புதன்கிழமை போட்டியில் மும்பை அணியின் கிரோன் பொல்லார்டு ஆடினார். 83 ரன்கள் விளாசி, மூன்று விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தனது அணியை வெற்றி பெற வைத்தார்.
கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி மும்பை அணி, ஆட்டத்தின் கடைசி பந்து வரை விளையாடி வெற்றியை கைப்பற்றியது.
கிங்க்ஸ் லெவன் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ரண்களை குவித்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரரான கே.எல். ராகுல், 64 பந்துகளில், ஆறு பவுண்டரிகள் மற்றும் ஆறு சிக்ஸர்கள் அடித்து 100 ரன்களை குவித்தார்.
ராகுலுடன் ஆடிய கிறிஸ் கெயில், 36 பந்துகளில், மூன்று பவுண்டரிகள் மற்றும் ஏழு சிக்ஸர்கள் அடித்து, 63 ரன்களை எடுத்தார்.
[Image: _106405373_63a60f5b-d55f-44a0-9b7f-9937cb7a25f0.jpg]படத்தின் காப்புரிமைKLRAHUL 11Image 57 ரன்களை விட்டுக் கொடுத்த ஹார்திக் பாண்டியா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்
வெற்றி வாய்ப்பு பஞ்சாப் அணிக்கு அதிகமாக இருந்த நிலையில், போலர்டின் பேட்டிங், ஆட்டத்தை மாற்றப்போகிறது என்று யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.
காயம் காரணமாக இந்த ஆட்டத்தில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் ஷர்மாவால் விளையாட முடியவில்லை. அந்தப் பொறுப்பை போலர்ட் சுமக்க வேண்டியிருந்தது.
198 ரன்களை இலக்காக கொண்டு மும்பை அணி ஆடத் தொடங்கியது. முதல் 12 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகள் இழப்பிற்கு 94 ரன்களை மட்டுமே மும்பை எடுக்க, தாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கையிலேயே பஞ்சாப் அணி இருந்தது.
குவின்டன் டி காக் 24 ரன்கள், ரோகித் ஷர்மா இடத்தில் விளையாடிய சித்தார்தா லாட் 15 ரன்கள், சூர்யகுமார் யாதவ் 21 ரன்கள் மற்றும் இஷன் கிஷன் 7 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து பெவிலியனுக்கு திரும்பினர்.
[Image: _106405371_059b718f-c709-4570-8870-d9181acba5ba.jpg]படத்தின் காப்புரிமைREUTERS
பஞ்சாப் அணியின் உரிமையாளரான ப்ரீத்தி சின்தா முகம் முழுக்க மகிழ்ச்சி மலர்ந்திருந்தது.
ஹார்திக் பாண்டியா 19 ரன்களும் மற்றும் க்ருணல் பாண்டியா ஒரு ரன் மட்டுமே எடுத்து ஆட்டமிழக்க, மும்பை அணிக்கு நெருக்கடி அதிகரித்தது.
மைதானத்தில் பெரும் அமைதி நிலவியது. ஆனால், பொல்லார்டின் ஆட்டம் பஞ்சாப் அணியின் வெற்றி வாய்ப்பை குறைத்தது.
கடைசி இரண்டு ஓவர்களில் மும்பை அணிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. அப்போதும் கூட, பஞ்சாப் அணி தாங்கள் வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கையிலேயே இருந்தது.
19வது ஓவரின் முதல் பந்தை சாம் கரண் வீச, அதனை பவுண்டரியாக்கினார் போலார்ட். அந்த ஓவரின் மூன்றாவது மற்றும் நான்காவது பந்துகளில் சிக்ஸ்ர்களை விளாசினார்.
[Image: _106405372_20d9854e-a0f1-459a-8a15-aa2fb827a223.jpg]படத்தின் காப்புரிமAGES
அப்போது பஞ்சாப் அணி வீரர்களின் முகத்தில் பதற்றத்தை பார்க்க முடிந்தது. அந்த ஓவரில் மட்டும் மொத்தம் 17 ரன்களை விட்டுக் கொடுத்தார் கரண்.
கடைசி ஓவரில் 15 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற நிலையில் மும்பை அணி இருந்தது.
இந்த அழுத்தத்தை தாங்கிக் கொள்ள முடியாமல், அங்கித் ராஜ்புத் வீசிய பந்து நோ பால் ஆனது. அதில் சிக்ஸர் அடித்தார் பொல்லார்டு. அடுத்த பந்து பவுண்டரி.
ஒரு பந்தை தூக்கி அடிக்க முயற்சித்து, டேவிட் மில்லரால் பொல்லார்டு அவுட் ஆனார். எனினும், அப்போதே ஆட்டம் மும்பை அணியில் பக்கம்தன் இருந்தது.
பின்னர் அதே வெஸ்ட் இன்டீஸின் அல்சாரி ஜோசஃப், கடைசி பந்தில் இரண்டு ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்தார்.
பஞ்சாப் அணியின் பக்கம் இருந்த வெற்றியை மும்பை அணி கைப்பற்றியது.
ஐபிஎல் போட்டிகளில் வெஸ்ட் இன்டீஸ் அணி வீரர்கள் விளையாடுவதை பார்க்கும் போது, வரவிருக்கும் உலகக் கோப்பையில் அந்த அணி ஆபத்தான அணியாக இருக்கும் என்று விமர்சகர்கள் கூறுகின்றன
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 11-04-2019, 10:09 AM



Users browsing this thread: 3 Guest(s)