30-05-2021, 11:44 PM
EPISODE –20 – வசந்தியின் வாழ்க்கை
அதனால் பவித்ராவும் வசந்தியும் ஒன்றாக சாப்பிட உட்கார்ந்தார்கள்.
மறுநாள் திங்கட்கிழமை,
பவி வேளைக்கு போனா.
அமீரை பார்த்து சிறிது நேரம் பேசிட்டு, மதியம் வருவதாக சொல்லிட்டு ஹசன்
சாரை பார்க்க போனா.
ஹசன் சார் இன்னும் வரல. அதனாலே தன்னுடைய ரூமுக்கு போனா .
ஹசன் சாருக்கு என்ன ஆச்சி.
ஏன் வரல. பவிக்கு யோசனையா இருந்தது. வேலை ஓடவில்லை.
சிறிது நேரத்தில் ஹசன் வந்தார்.
அவர் வந்தவுடன், பவித்ரா போய் அவரை விஷ் பண்ணா.
அவர் சிறிது சோர்வாக இருந்தார்.
பவித்ரா விவரம் கேட்க,
நேத்து ஞாயிற்று கிழமை சாப்பாடு கண்ட்ரோல் இல்லாமல் சாப்பிட்டதாகவும்,
மாத்திரை போட மறந்துவிட்டதாகவும் அவர் சொல்ல, பவிக்கு பகீர்னு இருந்தது.
ஐயோ ஒரு நாள் நாம இல்லனா ஹசன் சார் இப்படி ஆயிட்டாரே.
அவளுக்கு மனசு கஷ்டமா இருந்தது.
ஒரு நாள் நான் இல்லனா இப்படி வந்து நிக்கிறீங்க. அவரிடம் கோச்சிக்கிட்டா
அவர் அவளை பார்த்து சிரித்தார்.
உனக்கு இருக்கிறது ஒரு நாள் லீவுமட்டும்தான்.
அதுலயும் இந்த கிழவனை பார்த்துக்கொள்ளணும்னு ஏதாவது கடனா.
நீங்க ஒன்னும் கிழவன் இல்ல. அவ கண் கலங்குனா.
அவருக்கு அவளை பார்க்க பார்க்க சிரிப்பு தான் வந்தது.
இந்த பொண்ணு என் மேல எவ்வளவு பாசம் வச்சிருக்குது.
பவித்ரா மீது ஹசனுக்கு ஒரு தனி பாசம் வந்தது.
பவி அவரை நல்ல கவனிச்சிட்டு வந்தா. அவர் உடம்பு நல்லா தேறினது.
அவர் பழைய மாதிரி உற்சாகமாக வேலைக்கு வர ஆரம்பிச்சார்.
பவி வழக்கம் போல தினமும் வேலைக்கு போய்ட்டு வந்தா.
மதியம் ஆனா பவி, ரூபா, வசந்தி மூவரும் ஒன்றாக சாப்பிடுவது வழக்கமானது.
ரூபா எப்பவும் போல கல கலனு நல்ல பேசுவா. ஆனா வசந்தி அதே சோகம்
தான். குழந்தை இல்லாததால் அதே வருத்தம்.
ஒருநாள், இதே மாதிரி மதிய சாப்பாடு வேலை. இன்று ரூபா லீவு.
அதனால் பவித்ராவும் வசந்தியும் ஒன்றாக சாப்பிட உட்கார்ந்தார்கள்.