Thread Rating:
  • 5 Vote(s) - 3.4 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தமிழ் திரைப்பட செய்திகள்
மார்வெல் உலகம் தமிழ் நாட்டிற்கு வந்தால்.... கோலிவுட் சூப்பர்ஹீரோ சப்ஜெக்ட்!!

[Image: v1vmv20o_kollywood-avengers_625x300_09_March_19.jpg]

நம்ம கோலிவுட் நடிகர்களை வைத்து அவெஞ்சர்ஸ் படம் உருவாக்கினால் எந்த ஹீரோ எந்த சூப்பர்ஹீரோவாக இருப்பார்கள் என கற்பனையாக...!

சூப்பர் ஹீரோக்களால் நிறைந்தது அவெஞ்சர்ஸ் படம். ஹாலிவுட்டை மட்டுமே கலக்கும் அவெஞ்சர்ஸ் படத்திற்கு போட்டியாக நம்ம கோலிவுட் நடிகர்களை வைத்து அவெஞ்சர்ஸ் படம் உருவாக்கினால் எந்த ஹீரோ எந்த சூப்பர்ஹீரோவாக இருப்பார்கள் என கற்பனையாக...!
ஐயன் மேன் (Iron Man) - தளபதி விஜய்
[Image: 50pj5rj8_kollywood-avengers-iron-man-vij...rch_19.jpg]
அதிரடியுடன் கலந்த ஹியூமர் தான் ஐயன் மேனின் ட்ரேட் மார்க். அதிரடியுடன் ஹியூமர் சென்ஸ் (கில்லி, வசீகரா, ஃப்ரண்ட்ஸ்) உடையவர்களில் விஜயை மிஞ்ச யார் உண்டு. அவெஞ்சர்ஸ் உலகின் மிக முக்கிய கிட்டதட்ட தலைவர் அந்தஸ்த் உடையவர் ஐயன் மேன், அதுவே கோலிவுட்டில் தளபதிக்கும். மேலும் ஐயன் மேனாக விஜய் தான் கரெக்ட் என நாங்கள் மட்டும் இல்லை கதாநாயகிகள் சமந்தா, காஜல் ஆகியோரும் மார்வெல் நிகழ்வு ஒன்றில் தெரிவித்துள்ளனர்.
கேப்டன் அமெரிக்கா (Captain America) - சூர்யா சிவக்குமார்
[Image: 0fkmuv_kollywood-avengers-captain-americ...rch_19.jpg]
முன்னாள் இராணுவ வீரரான கேப்டன் அமெரிக்கா, சிங்கிள் பசங்களின் வழிக்காட்டி, அதுவே நம்ம சூர்யாவிற்கும் பொருந்தும். தனி ஆளாக போராடுவது, செதுக்கிய உடம்பு (வாரணம் ஆயிரம்), சிங்கிள் பாய் மற்றும் நண்பனுக்காக கர்ணனாக இருப்பது (ஃப்ரெண்ட்ஸ், பிதாமகன்) என சூர்யா கேப்டன் அமெரிக்காவாகவே மாறி விடுவார். ஹாலிவுட் உலகில் ஐயன் மேனை எதிர்த்து போராடுவார் கேப்டன் அமெரிக்கா. கோலிவுட் உலகில் அது நடந்தால், கோலிவுட் ஐயன் மேனை (விஜய்) எதிர்க்கும் திறன் இந்த கேப்டன் அமெரிக்கா (சூர்யா) விற்கு மட்டுமே.
தோர் (Thor Odinson) - தல அஜித் குமார்
[Image: 7frt5dr8_kollywood-avengers-thor-ajith_6...rch_19.jpg]
அவெஞ்சர்ஸ் உலகின் உண்மையான கடவுள் தோர் தான். தனி ஆளாக ஒரு கிரகத்தையே காப்பாற்றும் வல்லமை படைத்தவர் தோர். லோகி, சொந்த அக்கா என பலர் முதுகில் குத்தினாலும் அதனை எல்லாம் தாங்கி எழுச்சி கண்டு, தானோஸை வீழ்த்தும் வல்லமை படைத்த ஒரே அவெஞ்சர் தோர். தோரின் அனைத்து குணாதிசயங்களும் ஒன்றே பெற்ற கோலிவுட் சூப்பர்ஹீரோ நம்ம தல தான் (வாலி, வேதாளம்) என்றால் அது மிகையாகாது. இடி கடவுள் தோர் என்றால், ஸ்கிரின் பிரசென்ஸ் மூலமே இடிக்கு சமமான பவரை (பில்லா) பாய்ச்ச கூடியவர் நம்ம தல அஜித்.
ஹல்க் (Hulk) - சீயான் விக்ரம்
[Image: d92po8pg_kollywood-avengers-hulk-vikram_...rch_19.jpg]
அமைதியான ப்ரூஸாக ஒரு வடிவம், அட்டுழியம் செய்யும் ஹல்க் ஆக மற்றுமொரு பரிமாணம் பெற்றது ஹல்க் சூப்பர்ஹீரோ. ஹாலிவுட் ஹல்க்-க்கு சிஜிஐ பல செய்ய வேண்டும். ஆனால் நம்ம சீயான் (பீமா, ஐ) நினைத்தால், சிஜிஐ எதுவும் இல்லாமலே இரண்டு வெவ்வேறு பரிமாணங்களையும் அல்வா சாப்பிடுவது போல் செய்து விடுவார். ஒரு தலை காதல், தன்னை தானே கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலை என ஹல்க்-க்கு உரிய அனைத்து அம்சங்களையும் தன் பாணியில் அசல்டாக விக்ரம் (சேது) செய்து விடுவார்.
ப்ளாக் விடோ (Black Widow) - சமந்தா
[Image: 1ecf3fm8_kollywood-avengers-black-widow-...rch_19.jpg]
அழகான சூப்பர்ஹீரோ ப்ளாக் விடோக்கு கோலிவுட் உலகில் டாப் சாய்ஸ் சமந்தா தான். ப்ரூஸ் மீது ஒரு அக்கறை, ஸ்பையாக திறமை பெற்ற ப்ளாக் விடோ, வயசாகாமல் இருக்கும் சக்தியும் பெற்ற சூப்பர்ஹீரோ. பாணா காத்தாடி சமந்தாவை விட யூ டர்ன் சமந்தா இளமையாக தான் தெரிகிறார். முகத்தில் ஒரு அப்பாவி தனமும் சக்தியும் பெற்ற பெண் சூப்பர்ஹீரோ ப்ளாக் விடோ. கோலிவுட்டில் இவை பொருந்துவது சமந்தாவிற்கு தான்.
ஹாக் ஐ (Hawk Eye) - ஆர்யா
[Image: b3q51sug_kollywood-avengers-hawk-eye-ary...rch_19.jpg]
ஹாக் ஐ சூப்பர்பவர் இல்லாத மனித சூப்பர்ஹீரோ என கூறலாம். தன்னுடைய அசாத்திய பவர், அம்பு திறமை, கரெக்ட் எய்ம்களால் அவெஞ்சர்ஸ் உலகில் சூப்பர்ஹீரோவாக வலம் வருபவர் ஹாக் ஐ. கோலிவுட்டில் அதற்கு ஆப்ட் ஆர்யா தான். சாதாரண நடிகராக வலம் வந்த ஆர்யா, தன்னிடம் ஒரு அசாத்திய சூப்பர்ஹீரோ இருக்கிறான் என நான் கடவுள் படம் மூலம் நிரூப்பித்தார்.
நிக் ஃப்யூரி (Nick Fury) - ரஜினிகாந்த்
[Image: 53a16sp_kollywood-avengers-nick-fury-raj...rch_19.jpg]
சூப்பர்ஹீரோகளாக இருப்பதை விட அந்த சூப்பர்ஹீரோகளை ஒருங்கிணைத்து அவர்களை வழி நடத்துவது தான் மிக கடினம். அதை நம்ம தலைவர் ரஜினிகாந்தை தவிர வேறு யாரால் செய்ய முடியும். நிக் ஃப்யூரி நினைத்தால் சூப்பர்ஹீரோகளை ஆக்கவும் முடியும் அழிக்க முடியும். கோலிவுட்டில் ஆக்கவும் அழிக்கவும் வல்லமை படைத்தவர் நம்ம தலைவர் தானே.
தானோஸ் (Thanos) - கமல் ஹாசன்
[Image: md7s4mpo_kollywood-avengers-thanos-kamal...rch_19.jpg]
அவெஞ்சர்ஸ் சூப்பர்ஹீரோகளை அழிக்கும் வல்லமை படைத்தவர் தானோஸ். கோலிவுட்டின் ஆண்டவரே கமல் தானே. அழிக்கும் வல்லமை படைக்கும் சிவனாக கல்ட் கிளாசிக் (அன்பே சிவம்) நல்லசிவம் கமல் தான். மேலும் தானோஸ் உடம்பில் மட்டும் வலிமையானவன் இல்லை, மதியிலும் வல்லவர். கோலிவுட்டின் ஆக சிறந்த கலைஞன் கமல் தானே. உடலிலும் உனர்விலும் மதியிலும் வல்லவர் (ஆளவந்தான்) கமல் தவிர வேறுயாறு.
ஸ்பைடர்-மேன் (Spider-Man) - ஜீவா
[Image: o229mk0g_kollywood-avengers-spiderman-ji...rch_19.jpg]
அனைவரது ஃபேவரட் சூப்பர்ஹீரோ, ஸ்பைடர்-மேன். ஐயன் மேனை தன் தந்தையாகவே பாவித்துவரும் சூப்பர்ஹீரோ ஸ்பைடர் மேன். உண்மையில் ஐயன் மேனும் ஸ்பைடர்-மேனும் சிறந்த நண்பர்கள். கோலிவுட் உலகின் ஜாலி நாயகன் (சிவா மனசில் சக்தி) ஜீவா தான். மற்றும் ஐயன் மேன் ஸ்பைடர்-மேன் காம்போவும் இதில் கரக்டாக இருக்கும் (நண்பன்) என்றால் அது இவராக தான் இருக்கும்.
Like Reply


Messages In This Thread
RE: தமிழ் திரைப்பட செய்திகள் - by johnypowas - 10-04-2019, 10:00 AM



Users browsing this thread: 3 Guest(s)